பத்து நாட்கள் கடந்திருக்கும். எப்போதும்போல அன்று மாலையும் கோயிலுக்கு வந்திருந்தாள் கண்மணி. மனதார வணங்கிவிட்டுக் கண்களைத் திறந்தபோது, திடீரென்று தன் முன்னால் வந்து நின்றவனை அதிர்ந்துபோய்ப் பார்த்தாள். ...
“எனக்கும் முள்ளிவாய்க்கால் தான்.” நான் போராளி அல்ல, பொதுஜனம் தான், ஆனாலும் கால் போய்விட்டது என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை. சொல்லி எதற்கு அவனைப் பிரிக்க? “இவையல(இவர்களை) மாதிரி நாங்களும் வீரச்சாவு அட...
அது ஒரு புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் நிலம். அங்கு, நான்கு பக்கமும் மண்சுவரால் எழுப்பப்பட்ட கொட்டில் ஒன்றை, தனக்கான தங்குமிடமாக அமைத்துக்கொண்டிருந்தாள் கண்மணி. பொய்யாக அதனை ‘வீடு’ என்று சொல்வதில் அர்...
வாடிப்போயிருக்கும் செடி நீருக்காகத் தாகத்துடன் காத்திருப்பதில்லையா? அப்படி இருந்தது அவள் கேட்டவிதம். “உனக்குக் கவலையாவே இல்லையா?” கேட்டே விட்டான் நிர்மலன். அவனால் முடியவில்லை. நடிக்க முடியவில்லை. ஒன்ற...
நெஞ்சில் முட்டி மோதிய எண்ணங்களை எல்லாம் ஒரே மூச்சில் அவன் கொட்டி முடித்தபோது, ‘அந்தப் பெண்ணா? எவ்வளவு அன்பும் சாந்தமுமாய்க் கதைத்தாள். கடவுளே..!’ உஷாவின் கண்களில் கண்ணீர் பொல பொல என்று கொட்டியது. மனம்...
நாட்கள் ஒன்றும் அப்படியே உறைந்துவிடவில்லை. அவனது வாழ்க்கையும் எங்கும் தேங்கிவிடவில்லை. மனைவி பிள்ளைகளோடு சுவிசுக்கு வந்து சேர்ந்துவிட்டான். வழமைபோல வீடு, வேலை, மனைவி, பிள்ளைகள் என்று அவனது பொழுதுகள் க...
“நிர்மலன், எனக்கு… எனக்குக் கலியாணம் முடிஞ்சுது. அதால இனி எனக்கு எடுக்காதிங்கோ. நான் சந்தோசமா வாழுறன். திரும்பத் திரும்ப எடுத்து அதைக் கெடுத்துப்போடாதிங்கோ.” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமலேயே கைபேசிய...
இரண்டாயிரத்து எட்டாம் வருடம் நாட்டுப்பிரச்சனை மெல்ல மெல்ல அதிகரிப்பதை உணர்ந்து, அவனை சுவிசுக்கு அனுப்பப் பெற்றவர்கள் தயாரானபோது, அவளைப் பிரியப்போகிறோம் என்கிற துயர் கொடுத்தத் துணிச்சலில்தான் அவளிடம் ம...
அத்தியாயம் 1 “இந்தப் பெட்டிய நான்தான் கொண்டு போவன்.” “இல்ல நான்தான்!” “அப்பா எனக்குத்தான் தந்தவர். அம்மாஆ!” பிள்ளைகளின் பிடுங்குப்பாடுதான் அன்று நிர்மலனுக்குச் சுப்ரபாதம். புன்னகையோடு புரண்டு படுத்தால...
‘ஓ!’ என்று கேட்டுக்கொண்டுவிட்டு, “அந்த வீடியோவை நாங்க அழிச்சிட்டோம். இனி அது ஆரின்ர கையிலயும் சிக்காது. அதால இனி ஒண்டும் நடக்காது. பயப்படாத!” என்று அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கல்லூரிக்குப் புறப்ப...

