மனத்தில் சூழ்ந்த இறுக்கத்துடன் பிடிவாதமாகப் பள்ளிக்கூடத்துக்கு ஸ்கூட்டியைச் செலுத்திக்கொண்டிருந்தாள் பிரமிளா. அவளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தில் நெஞ்சின் ஒரு பகுதி உயிரே போவது போன்ற வலியில் துடித்துக்...
தன்னுடன் என்னவோ பேசப் பிரியப்படுகிறாள் என்பதை உணர்ந்து சசிகரன் பார்க்க, “பள்ளிக்கூடத்துக்கு வந்த ரவுடி கும்பலைப் பற்றி எனக்கு என்னவோ போலீஸ் நேர்மையா விசாரிக்கும் எண்டுற நம்பிக்கை இல்ல சசி சேர். நாங்க ...
சூறாவளி வந்துவிட்டுப் போனபின்னும் அதன் எச்சங்களைச் சுமந்திருக்கும் நகரைப் போல, அவன் போனபின்னும் அவன் உண்டாக்கிவிட்டுப் போன தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் நின்ற இடத்திலேயே உறைந்து போயிருந்தாள் பிரம...
இன்னும் என்ன செய்வது என்று அவளுக்கு விளங்கவில்லை. எப்படியும் மதுவந்தி தன்னுடன் படித்த இன்னும் நான்கு பெரிய தலைகளை அழைத்துக்கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை இருந்தது. நாளைக்கும் பார்த்துவிட்டு என்ன செய்...
அவளின் பேட்டியைத்தான் மோகனனும் பார்த்திருந்தான். ‘ராஜநாயகத்தின் மகனாம்! எவ்வளவு தைரியம் இவளுக்கு! அப்பான்ர பெயரை அவ்வளவு அலட்சியமா சொல்லுறாள்! பள்ளிக்கூடத்திலேயே இருந்துகொண்டு என்னவெல்லாம் செய்றாள். அ...
“என்ன மிஸ் இப்பிடிக் கேக்கிறீங்க? செல்லமுத்து நகைமாடம் உங்களுக்குத் தெரியாதா? இலங்கை முழுக்கப் பிரான்ஞ்ச் இருக்கு. அவேன்ர டிசைன் அவேட்ட மட்டும்தான் இருக்கும். சிங்கப்பூர்ல நகைத்தொழிற்சாலையே வச்சிருக்க...
காலையிலேயே தனபாலசிங்கத்துக்கு முடியவில்லை. அந்தளவுக்கு நேற்றைய நாள் அவரை உலுக்கிப்போட்டிருந்தது. அதன் சாட்சியாகக் கண்ணெல்லாம் வீங்கி, முகமெல்லாம் அதைத்து இருந்தவரைப் பார்க்கவே முடியவில்லை. பயந்துபோனாள...
அப்போது சைரன் ஒலித்தபடி அதிவேகமாய் வந்து நின்ற காவல்துறையின் வாகனத்திலிருந்து குதித்து ஓடிவந்த காவல்துறையினர் நடுவில் புகுந்து, பெரும்பாட்டுக்கு மத்தியில் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இன்னுமே...
கல்லூரியின் வாசலில் பெரும் பரபரப்பு. கேட்டைத் திறந்துகொண்டு ஒரு கும்பல் உள்ளே நுழைய முயன்றுகொண்டிருந்தது. அவர்களை உள்ளே விடாமல் மாணவிகள் தம் கைகளைச் சங்கிலியாக்கித் தடுத்து நின்றபடி, “நாங்க விடமாட்டோம...
அத்தனை வருடங்களாக அதிபராகக் கம்பீரமாக அமர்ந்திருந்து கோலோச்சிய அவரின் அறைக்குள் நுழையக்கூடப் பிடிக்காதவராகப் பிள்ளைகளோடு அமர்ந்திருந்தார் தனபாலசிங்கம். அவருக்கு அந்தப் பாடசாலை சொந்த வீட்டைப் போன்றது. ...

