அழகென்ற சொல்லுக்கு அவளே நாவலின் போட்டி முடிவுகள் பற்றிய முதற்கட்ட அறிவிப்பு
வாசக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
நல்லபடியாக அழகென்ற சொல்லுக்கு அவளே என்கிற நாவலை எழுதி முடித்துவிட்ட ஆசுவாசத்தோடு இருக்கிறேன்.
அப்படியே போட்டி முடிவுகளையும் அறிவித்துவிட்டால் என் வாசக உறவுகளும் மகிழ்வார்கள் என்பதில் சூட்டோடு சூடாக வந்தாயிற்று.
இது நான் அறிவித்த போட்டி :
மை அன்பானவர்களே,
குட்டியா ஒரு போட்டி அறிவிப்பு. உங்களை மகிழ்வித்து நானும் மகிழ்வதற்கான ஒரு வழி!
அழகென்ற சொல்லுக்கு அவளே நாவலை இப்ப தொடரா எழுத ஆரம்பித்து இருக்கிறேன்தானே.
அந்தக் கதையை வாசித்து, தளத்தில் லைக் பண்ணி, கொமெண்ட் பண்ணி என்னுடன் தொடர்ந்து வரும் வாசகர்களிடம் கதை முடிந்ததும் மூன்று கேள்விகள் கேட்பேன்.
அந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்கள் சொல்லும் நபர்களில் ஐந்து நபர்களைக் குலுக்கள் முறையில் தெரிவு செய்து, ஆளுக்கு 500 இந்தியன் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
அதுக்காகக் கடினமான கேள்வி எல்லாம் கேட்பேன் எண்டு நினைச்சிடாதீங்க. என்னுடைய ஒரே எண்ணம் என் வாசகர்களை மகிழ்விப்பது. முதலில் புத்தகம் குடுக்கலாம் எண்டு நினைச்சேன்.
புத்தகம் பிரிண்ட் போட்டு, ஒவ்வொருவரிடமும் அட்ரஸ் வாங்கி, அதை அனுப்பி, கிடைத்துவிட்டதா என்று காத்திருப்பது என்று அது பெரும் பயணம் எனக்கு.
இதில் சிலருக்கு அட்ரஸ் தர ஒரு தயக்கம். அதில் நியாயமும் உண்டு என்பதில் என்னால் அவர்களைத் தவறாக எண்ண முடியவில்லை. சிலருக்கு நான் கொடுக்க நினைக்கும் புத்தகத்தை விட வேறு புத்தகத்தில் விருப்பம்.
இதையெல்லாம் யோசித்துவிட்டுத்தான் பணப்பரிசு கொடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன். பணம் என்கையில் குட்டியாகத் தன்னும் பிரயோசனமாக இருக்குமே என்கிற எண்ணமும்.
போனமுறை உன் அன்புக்கு நன்றி கதைக்கு பேஸ்புக் வாசகர்களைத் தெரிவு செய்ததுபோல் இந்தமுறை தளத்தில் தொடர்ந்து லைக் பண்ணி கருத்திடும் வாசகர்களுக்கு வாய்ப்பு.
ஒன்றும் ஒன்றும் எதனை என்று கேட்பதுபோல்கான் கேள்விகள் இருக்கு
திரும்பவும் சொல்கிறேன், இது nithaniprabu novels தளத்தில் தொடர்ந்து கருத்திடும் வாசகர்களுக்கு மட்டுமேயான போட்டி.
கதை முடிந்த பிறகு வாசிக்கிறவர்களை முடிந்தவரையில் தவிர்த்துவிடுவேன். அந்தந்த ஐடியை கிளிக் பண்ணிப் பார்த்தாலே அவர்கள் எப்போது கருத்திட்டார்கள் என்று காட்டும். அதனால் என்னோ தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை.
நான் எப்போது முற்றும் போடுகிறேனோ அப்போதே கேள்விகளையும் கேட்பேன். சரியாக 24 மணித்தியாலங்கள் முடிகையில் அந்தப் போட்டிய முற்றுப் பெற்றுவிடும்.
பதில்களையும், நிதனிபிரபு நாவல்கள் தளத்தில் என்ன ஐடியில் இருக்கிறீர்கள் என்றும் எழுதி எனக்கு மெயில் அனுப்பினால் சரி.
எந்த நாட்டில் இருந்தாலும் தெரிவு செய்யப்படுகிறவருக்கான பரிசுப் பணம், இலங்கை அல்லது இந்தியாவில் மட்டுமே வழங்கப்படும்.
ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். விளக்குகிறேன். எனக்கும் இதுதான முதல் அனுபவம். முயற்சித்துப் பார்க்கிறேனே.
இது என் வாசகர்களுக்கான சிறு நன்றி பகிர்தல் மட்டுமே!
-----------------------------------
இதுதான் நான் அறிவித்த போட்டி.
- மொத்தமாக 71 வாசகர்கள் கேள்விகளுக்கான பதில்களை எழுதி அனுப்பியிருந்தார்கள்.
- அதில் சரியான பதில்களை எழுதி அனுப்பியவர்கள் 38 வாசகர்கள். (இவ்வளவு குறைவா என்று யோசிக்க வேண்டாம். பலர் இரண்டு மூன்று முறைகளும் பதில்களை எழுதி அனுப்பியிருந்தார்கள்.)
- இதில் தளத்தில் மெம்பராக இல்லாதவர்களையும், மெம்பராக இருந்தாலும் குறைந்த பட்சமாக ஒரு லைக்கினைக் கூட இடாதவர்களையும் தவிர்த்துவிட்டேன். (போட்டி அறிவிப்பில் ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது, தளத்தில் கதையை லைக் பண்ணி கருத்திடும் வாசகர்களுக்கு மட்டுமேயான போட்டி என்று)
ஆக, குலுக்களில் இடம்பெறுகிறவர்கள் 22 வாசகர்கள். குலுக்களில் தெரிவாகும் வெற்றியாளர்களை வீடியோ எடுத்துப் போட முயற்சி செய்கிறேன்.
—-----------------------------
வெற்றியாளர்களை நாளை அறிவிக்கிறேன். அதற்கு முதலில் கேள்விகளுக்கான பதில்கள் இதோ:
- வாசவி எங்குச் சென்று வருகையில் பாலகுமாரனோடு பழக்கம் உண்டானது?
அத்தியாயம் 16:

- நிலனும் வஞ்சியும் எந்த ஊர் கம்பஸில் படித்தார்கள்? இடத்தின் பெயர் சொன்னால் போதும்
அத்தியாயம் 4.

- இளவஞ்சியை சக்திவேல் தொழிற்சாலைக்கு முதன் முதலில் அழைத்துச் செல்கையில் நிலன் இளவஞ்சிக்கு கொடுத்த சேலையின் பிளவுஸில் என்ன டிசைன் போட்டிருந்தான்.
அத்தியாயம் 14:

குலுக்கலுக்குத் தெரிவான அந்த 22 வாசகர்கள் பட்டியல் இதோ :
- suji
- Mathithilak
- NITHYA DINESH
- Kameswari
- Thaya
- Bhuvanashree
- Sindhu Narayanan
- Sasi Dhurvas
- PoorniGanesh
- Vidhya s
- viji jayaraman
- Berna
- Annam
- sesupraba
- M.priya
- KAMATSHI NAGENDRAN
- Mythili Ramadurai
- Sarjana
- Goms
- Shenbagavalli Seenivasagam
- Parameswari G
- sowdharani
Last edited:
