• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Debate Hub - Nov & Dec

thilagasri

New member
ஹாய் ஹாய் ஹாய் அன்பான நட்புறவுகளே!

இந்தப்பகுதி எங்கள் நிதனிபிரபுவின் ஆசையில் உருவானது.:love:

ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான விவாதற்கு, அதேநேரம் யோசிக்க வைக்கும் படியான கருத்துப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.

இந்தப் பகுதியின் கலகலப்புக்கு முற்று முழுதாக நீங்களே சொந்தக்காரர்கள். உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இத்தலைப்பு பற்றிய இரு தரப்பு வாதங்களையும் இதே பகுதியில் நீங்கள் பதிவிடலாம். ஒருவர் கருத்தின் மீது மற்றவர் வாதிக்கலாம். கருத்தாடல் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிப்பட்டு இல்லாது ஆரோக்கியமான விவாதமாக இருத்தல் முக்கியமானது என்று நான் உங்களுக்குச் சொல்லவே தேவையில்லை. நிஜ மனிதர்களை உதாரணமாகக் காட்டுவதோ, அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் குறிப்பதையோ தவிர்த்தக் கொள்ளுங்கள்.

இத்தலைப்புத் தொடர்பில் எதிர்வரும் 18 ம் திகதிவரை நீங்கள் விவாதிக்கலாம். இதிலிருந்து மூன்று சிறந்த விவாதங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படும் .



தலைப்பு

'இன்றைய இளம் பெண்களின் பார்வையில்: திருமணமும் குடும்ப வாழ்க்கையும் மனநிறைவு தரும், தனித்துவத்தைக் காக்கும் சுகமான உறவாகக் கருதப்படுகிறதா? அல்லது அவர்களின் தனித்துவத்தைக் கட்டுப்படுத்தும் அழுத்தம் தரும் சுமையான உறவாகப் பார்க்கப்படுகிறதா?'
 

Goms

Active member
ஆரோக்கியமான விவாதமும், யோசிக்க வைக்கும் கருத்துப் பரிமாற்றமும் - என்ற இந்தப் பகுதியை துவங்கி வைத்த நிதா மற்றும் ரோசி சகோதரிகளுக்கு எங்கள் உளமார்ந்த பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.💖💖💖

விவாதம் என்று நடந்தால், தீர்ப்பு என்ற ஒன்றும் வழங்கப்படுமா? 😂😂😂

ஏனென்றால், தலைப்பின் முதல் பகுதிக்கு கருத்துகள் வரும் அளவிற்கு விவாதம் வருமான்னு சந்தேகமா இருக்கு🤔. இரண்டாம் பகுதிக்கு தான் (வலி கொடுத்தாலும்) ஓட்டு அதிகம் வரும்போல இருக்கு😂.

கலகலப்பிற்கு எங்களை சொந்தக்காரர்கள் ஆக்கிவிட்டு🤣🤣🤣, ஒரு கனமான தலைப்பை தந்திட்டீங்களேம்மா.....😔😂😂

அதான் நிறைய நேரம், இல்லையில்லை, நாட்கள் கொடுத்திருக்கீங்களே 😂 கருத்துக்களை நல்லா யோசித்துக் கொண்டு வர்றேன்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
விவாதம் என்று நடந்தால், தீர்ப்பு என்ற ஒன்றும் வழங்கப்படுமா? 😂😂😂
தீர்ப்பு இல்லாமல் எப்படி? வழங்கப்படும் கோம்ஸ்

ஏனென்றால், தலைப்பின் முதல் பகுதிக்கு கருத்துகள் வரும் அளவிற்கு விவாதம் வருமான்னு சந்தேகமா இருக்கு🤔
. இப்ப மகிழ்ச்சி, முதல் பகுதி விவாதத்துக்கு ஆள் தயார். ஆவலோடு உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறது இந்தப் பகுதி.வாங்கோ வாங்கோ
 
Top Bottom