அத்தியாயம் 28
காலையில் கண் விழிக்கையிலேயே நிகேதனுக்கு மனதும் உடலும் பரவசத்தில் மிதந்தது. உதட்டோரம் பூத்த முறுவலுடன் அருகில் பார்க்க அவளைக் காணவில்லை. தலையணையைக் கட்டிக்கொண்டு சுகமாகப் புரண்டான். மனம் தன்னுடையவளைத் தேடிற்று. வாலிபத்துக்கு வந்த நாள் தொட்டு வாழ்வின் ரகசியத் தேடல் ஒன்றை அறிந்துகொண்ட குறுகுறுப்பு இன்னுமே உடலெங்கும் வியாபித்திருந்தது. அதற்குமேல் அவளைப் பாராமல் இருக்க முடியாமல் எழுந்து வெளியே வந்தான்.
அமராவதி ஹாலில் அமர்ந்திருந்தார். அவள் சமையலறையில் மும்முரமாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். அவன் பள்ளிக்கூட ஹயருக்குப் போகவேண்டும். அதன் பிறகு கார்மெண்ட்ஸ். அவளும் செண்டருக்குப் போகவேண்டும். இந்தச் சந்தோசத்தை நிறுத்தி நிதானமாக அனுபவிக்க நேரமற்று கிணற்றடிக்கு நடந்தான். அவன் குளித்துவிட்டு வரும்போது அம்மா பாத்ரூம் பக்கம் போவது தெரிந்தது.
ஓடிவந்து அவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டான். “டேய்! என்ன செய்றாய்? மாமியும் எழும்பிட்டா.” வேகமாக அவனை எச்சரித்தபடி அவள் விலகினாள்.
விடாமல் தடுத்தபடி, “அம்மா பின்னுக்குப் போறத பாத்திட்டுத்தான் வந்தனான்.” என்றான் அவன்.
அவள் உதட்டினில் ரசசியச் சிரிப்பு அரும்பிற்று. “இப்ப என்ன வேணுமாம் என்ர நிக்கிக்கு?” சுகமாக அவன் கைகளுக்குள் தானும் இசைந்தபடி கேட்டாள்.
அவன் அணைப்பு இறுகியது. “அவனுக்கு அவனின்ர ஆரா வேணுமாம்.” என்றான் காதோரம். அவளின் தேகமெங்கும் பூப்பூத்தது. இதற்குள் அவன் தந்துகொண்டிருந்த அவசர முத்தங்கள் வேறு உடலையும் உள்ளத்தையும் மயக்கிற்று. நேற்றைய இரவும் அவனது சேட்டைகளும் நினைவில் வந்து கன்னங்களைச் சிவக்க வைக்க முயன்றன.
“ஓ..! அப்ப வேலைக்குப் போற ஐடியா இல்லையா?”
“போகோணுமா?” என்றான் அவன். “எனக்கு வெளில போகவே விருப்பமில்லை.”
அவளின் விருப்பமும் அதேதான். அவனோடான தனிமையை நீட்டிக்கச் சொல்லித்தான் உள்ளம் சொல்லிற்று. ஆனால்… எழுந்த பெரு மூச்சை அடக்கினாள். தன் தோளில் தாடையைப் பதித்திருந்தவனின் கன்னத்தில் தானும் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “சாப்பிடுறியா?” என்றாள்.
“என்ன சமையல்?”
“பெருசா ஒண்டும் செய்ய இல்லையடா. நானும் இப்பதான் எழும்பினான். அவசரத்துக்கு ரொட்டியும் சம்பலும் மட்டும் தான். போடவா?”
“ம் போடு. உடுப்பை மாத்திக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு விலகப்போனவன் மீண்டும் அவளை இறுக்கமாக அணைத்து, “சந்தோசமா இருக்கடி. என்னவோ புதுசா பிறந்த மாதிரி.” என்றான் கிறக்கத்துடன்.
“எனக்கும்தான்!” என்றவள் அவன் கைகளுக்குள்ளேயே திரும்பி அவனைப் பார்த்தாள்.
போதுமான உறக்கம் இல்லாததால் கண்கள் சிவந்திருந்தாலும் அவன் முகம் சந்தோசத்தில் நிறைந்திருந்தது. ஆசையோடு அவன் கன்னம் வருடினாள். நேற்றைய நிகழ்வை இருவரும் எதிர்பார்க்கவேயில்லை. இயல்பாக அரங்கேறிப் போயிற்று.
இன்னும் ஒன்றரை மாதத்தில் கயலினியின் திருமணம் முடிந்துவிடும். அதன்பிறகு பணச்சிக்கல் இருந்தாலுமே அவர்களின் சந்தோசத்துக்குத் தடை என்று இனி எதுவுமில்லை. பிறகும் ஏன் பிரிந்திருப்பான்? கூடவே, மூன்று வருடங்களுக்கு மேலாக ஓடியவர்களுக்கு இது மிகப்பெரிய இளைப்பாறுதலாகத்தான் அமைந்து போயிற்று.
அவளின் உதட்டு முறுவலைக் கவனித்து அவன் புருவங்களை உயர்த்தினான். “வடிவா இருக்கிறாயடா.” என்றாள் ஆசையோடு.
அவன் சிரித்தான். “நான் என்ன பெட்டையா(பெண்ணா) வடிவா இருக்க? நீதான்டி மயக்கிற.” என்றான் அவளின் மூக்கை உரசியபடி.
இப்படி உருகுகிறவனுக்கு அன்றைக்கு எவ்வளவு கோபம் வந்தது? கதைக்காமல் இருந்து அவளை என்ன பாடு படுத்தினான்?
“கோபம் போயிட்டுதா?” என்றாள் சிரிப்புடன்.
“இல்ல.”
“ம்ஹூம்?”
“அறைக்க வந்து கோபத்தைப் போக வை!” என்றான் அவன் கள்ளச் சிரிப்புடன்.
அவன் கையைப் பிடித்துக் கிள்ளிவிட்டாள் ஆரணி. “ராஸ்கல்! இரவு கொஞ்சமும் நித்திரை இல்ல. இப்ப வேலைக்குப் போகோணும். இதுக்க அறைக்கு வாறதோ?”
அதற்குள் அமராவதி வருவது தெரிந்தது. “வந்திட்டு போடி.” என்றுவிட்டு வேகமாக விலகி ஓடியவனின் கண்களில் தென்பட்ட ஆவலில் அவளால் மறுக்க முடியாமல் போயிற்று.
அறைக்குள் சென்று கணவனின் ஆசைக்கு இணங்கினாள்.
அதன் பிறகான பொழுதுகளோ நாட்களோ அவர்களின் வசமில்லாமல் போயிற்று. நிகேதன் இரண்டு மடங்காக ஓடினான். உறக்கம் தொலைத்தான். திருமண வேலைகள் ஒரு பக்கம் வெட்டி முறித்தன. அவ்வப்போது சகாதேவன் மட்டுமாக வந்து போனாலும், முழு வேலையையும் அவன் தான் பார்க்கவேண்டி இருந்தது.
சேலை எடுக்க, உடைகள் வாங்க, நகைகள் வாங்க என்று கயலினிக்கு ஆயிரம் அலுவல்கள். அதற்கு அவளை யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார், மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் என்று ஏற்றி இறக்குவது வேறு அவன் தலையில் விழுந்தது. ‘எப்போதும்போல பஸ்ஸில் வந்து போகட்டுமே’ என்று ஆரணி சொன்னபோது, ‘கல்யாணப்பெண். ஏதாவது நடந்தாலும் வேண்டவே வேண்டாம்.’ என்றுவிட்டார் அமராவதி.
இன்னொரு பக்கம் கிடைக்கிற எந்த ஹயரையும் விட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தான் நிகேதன். உறக்கம் சில மணி நேரங்களாகச் சுருங்கியபோதும் அவன் ஓயவில்லை. சுகிர்தனுக்குத் தெரிந்த இடத்தில் கடன் பட்டான். தன்னுடைய வாகன பத்திரத்தின் மீதும் கடன் வாங்கினான். தன் தலையை அடமானம் வைக்காத குறையாக இறுகிப்போனாலும் கயலினிக்கு என்று சொன்ன சீதன நகையிலோ பணத்திலோ ஒரு ரூபாய் குறையாமல் தயார் செய்து, சகாதேவனை அழைத்து அன்னையின் முன்னால் அவரின் கையில் ஒப்படைத்தான்.
அப்போதுதான் அமராவதி அம்மாவுக்கு மூச்சே வந்தது. கோபம் ஆறியது. அதன்பிறகுதான் அவன் முகம் பார்த்துச் சிரித்தார்.
அன்று, இரவு மிகுந்த களைப்புடன் தன்னருகில் வந்து சரிந்தவனின் கேசம் கோதி நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள், ஆரணி. அதன் இதத்தை உணரும் நிலையில் அவன் இல்லை. “விடிய மூண்டுக்கு எழுப்பிவிடு ஆரா. ஒரு யாழ்ப்பாண ஹயர் இருக்கு. போயிட்டு வந்து பள்ளிக்கூட ஹயர் பாக்கோணும்.” என்றான் மிகுந்த சோர்வுடன்.
அவர்களின் தாம்பத்ய உறவு ஆரம்பித்ததன் பிறகு இரவு, தனிமை, அவள் இந்த மூன்றும் இணையும் புள்ளியை அவன் எவ்வளவு ஆவலாக எதிர்பார்ப்பான் என்று அவளுக்குத் தெரியும். இன்றோ, அனைத்தும் இருந்தும் அதை உணரும் நிலையில் அவன் இல்லை. நெஞ்சில் பாரமேற, “எனக்குத் தாலிக்கொடி வாங்கினதால தான் இவ்வளவு இறுக்கம் என்ன?” என்றாள் கவலையோடு.
அவனுக்குச் சுள் என்று கோபம் வந்தது. திரும்பி அவளை முறைத்தான். “உனக்கு இந்தத் தாலிக்கொடிய இழுக்காம இருக்கவே ஏலாதா? எப்ப பாத்தாலும் என்ன கதை இது? அது நான் என்ர மனுசிக்கு ஆசையா செய்தது. அதையே சொல்லி காட்டாத ஆரா. அப்பிடி ஓடினாத்தான் என்ன? நீ என்னத்துக்கு அவ்வளவு வசதி, அம்மா, அப்பா எண்டு எல்லாத்தையும் விட்டுட்டு எனக்குப் பின்னால வந்தனீ? அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே.” என்றான் அவன்.
அவளுக்குக் கோபம் வந்தது. அவனை முறைத்தாள்.
“உனக்கு வந்தா ரெத்தம். எனக்கு வந்தா தக்காளி சட்டினியா?” என்றான் அவன்.
“பாவம் என்ர நிக்கி. இருக்க நிக்க நேரமில்லாம ஓடுறானே எண்டு கேட்டா.. ஆகத்தான் திமிர் உனக்கு! போடா!” என்றுவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள் அவள்.
சற்று நேரத்தில் அவன் கை அவளை வளைத்தது. “இப்பிடியெல்லாம் திரும்பிப் படுக்கேலாது. நான் கோவமா இருக்கிறன். என்னை சமாதானப்படுத்து.” என்றவனின் சேட்டைகளில் அவனை அடித்தே ஓய்ந்துபோனாள் ஆரணி.

Last edited: