You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி - Comments

Saroja

Well-known member
அருமையா இருக்கு முடிவு
நிதா??
நிக்கி ஆரா மனசு இன்னும்
நெருக்கமா மாற ரெண்டு
சின்ன குட்டிகளும்
துணை இருப்பாங்க
?????
 
அருமையான கதை??.. யதார்த்தமான முடிவு???... இருவரின் தவறயையும் அவர்களே உணர்ந்து கொண்டு திருத்திக் கொண்டால் நல்லதே நடக்கும்....

நிதா சிஸ் ஒரு ரிக்குவஸ்ட் நிக்கி - ஆரணியின் வாழ்க்கை ஒட்டத்தை பற்றி ஒரு எபிலாக் கண்டிப்பாக தர வேண்டும்... அப்போதுதான் கதையை முழுமையாக படித்த மன நிறைவு இருக்கும் என்பது என் எண்ணம்.. தருவீங்க என்று நம்புகிறேன்??
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... 'என்னது எம்.ஜி.ஆர் செத்துட்டாரா' அப்படிங்கிற மாதிரி கதை படிக்க படிக்கவே முடிஞ்சு போச்சான்னு ஷாக்காயிடுச்சு. கதைப்படி கருத்துப்படி கதாபாத்திரம் படி நியாயப்படி முடிவு மிக மிக அருமை... ஆனா எங்க கனவுப்படி ஆசைப்படி இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமே..மே....மே... என்று ஆதங்கமா இருக்கு. ஆனாலும் அருமையான கதை நிதா. அதிக நாட்கள் கூடவே பயணித்ததாலோ என்னவோ ஆரணி மற்ற கதாநாயகிகளை விட மனதிற்கு நெருக்கமாக உணர வைக்கிறாள்.

சீக்கிரம் மற்றுமொரு கதையுடன் வாருங்கள் நிதா. காத்திருக்கிறோம்.???
 

VeemaRomeo

New member
நிதா, இருவரின் காயங்களுக்கும், பூவினியும் புது வரவும் தான் மருந்து. இனிவரும் காலங்களில் ஆவது ஆரணி நிக்கி வாழ்க்கையில் தென்றல் வீசட்டும். நிக்கியின் கனவு வீட்டு ஆரம்ப பூஜைக்கு இரு குடும்பங்களும் நிறைந்த மனத்துடன் வந்து வாழ்த்தட்டும். ஆரணி யின் ஆசைப்படி நான்கு பிள்ளைகளை பெற்றேடுத்து இருவரும் ரசித்து செழித்து வாழட்டும். நிதா நிறைவான நாவல், மிகவும் விரும்பி படித்த நாவல் after long time. We are so used to happily ever after....I hope you write a little bit more for us about ஆரணி in 10 more years, how Niki care for her.....continue to care for her....
 
Top Bottom