You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி

நிதனிபிரபு

Administrator
Staff member
Chitrasaraswathi


நிதனி பிரபுவின் அவள் ஆரணி எனது பார்வையில். பொருளாதார ஏற்றத் தாழ்வு இருக்கும் இருவரின் காதல் திருமணத்தில் நிறைவு பெறும் கதைகள் பல உண்டு. ஆனால் ஆரணி மற்றும் நிகேதனின் காதலும், திருமண வாழ்வில் இருவரும் இதே காதலுடன் வாழ முடியுமா என்பதை நிதனி அழகாக தந்திருக்கிறார். ஆரணி மறக்க முடியாத நாயகி. அவளின் காதலும், நிக்கியை அவளைவிட யாராலும் இப்படி காதலிக்க முடியுமா ? யதார்த்தமான கதை இலங்கைத் தமிழில். சில அத்தியாயங்களில் காதல் காட்சிகள் அதிகம்தான். ஆனாலும் மனதை ஈர்க்கும் நாயகன், நாயகி. நிகேதனின் அம்மா, தங்கை மற்றும் அண்ணி கதாபாத்திரங்களில் அண்ணி மாலினி நல்லவளே. பெண் பெற்றோரை எதிர்த்து செய்யும் காதல் திருமணம் பெற்றோரை எப்படி பாதிக்கும் என்பதை உணர்ந்து ஆரா கேட்கும் மன்னிப்பும் அழகே.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Akhilandabharati Somasundaram


அவள் ஆரணி
Nithani prabhu
வணக்கம் நண்பர்களே.. இந்தக் குழுவில் என் முதல் பதிவு இது.. நண்பர்கள் Vedha Vishal Selvarani இவர்களின் பதிவைப் பார்த்து இந்தக் கதையைத் துவங்கினேன்.. அப்படியே உள்ளே இழுத்து விட்டது.. அப்படியான ஒரு எழுத்து நடை.
அனைவரும் பார்த்த/ கேட்ட சம்பவங்கள் தான் என்றாலும் சொன்ன விதத்தில் தனித்து நிற்கிறது.. புகுந்த வீட்டில் ஒரு பெண் சந்திக்கும் சூழல்கள் பல நாடுகளிலும் ஒன்று தான் போல..
வேலை வேலை என்று ஓடி சில்லறை பிரச்சனைகள் எதையும் மனதில் ஏற்றுவதில்லை என்று என்னை நானே இதுநாள் வரை ஏமாற்றிக் கொண்டேனோ.. சிலபல ஞாபகங்களை, மனக்குறைகளை கிளறி விட்டது கதை..
ஆரணிக்காக நிகேதனுக்காக பல உள்ளங்களைத் தவிக்க வைத்து விட்டார் நிதனி.. இனி நடக்கும் எல்லாம் நல்லவிதமாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.. அற்புதமான நடை. பிசிர் தட்டாத கதையோட்டம்!!
அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன்...
 

நிதனிபிரபு

Administrator
Staff member
குணசுந்தரி வேலுசாமி



அனைவருக்கும் வணக்கம்... நான் இங்க இப்போ உங்களோட பகிர போறது, ஒரு தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் நாவல் பற்றி...
அவள் ஆரணி... நிதனி பிரபு அவர்களின் தொடர்கதை..,
பொதுவாக நான் இதுபோன்ற வரும் தொடர்கதைகளை படிப்பதில்லை.., அட வேற ஒன்றும் இல்லைங்க, மனதினில் அடுத்து என்ன வரும் அடுத்து என்ன வரும் எனக் கேள்விகள் குடைந்து கொண்டே இருக்கும்... நாள் பொழுதுகளின் கவனத்தை சிதறடிக்கும்.., ஏற்கனவே நிதனிபிரபு வின் இலங்கை தமிழுக்கும், ரொமான்ஸ் எழுத்துக்கும் அடிமையாகி விட்ட காரணத்தினால், ஒரு ஆர்வம் தாங்க முடியாமல் இக்கதையை படிக்க ஆரம்பித்தேன்.... அட தினமும் காலையில் எழுந்தவுடன் அடுத்த பகுதி வந்துவிட்டதா என பார்க்கும் நிலைமை..,
ஆரணி... அளவான திமிர், அழகான நிமிர்.,, அள்ள அள்ள குறையாத செல்வம் என காதல்... நிகேதன் இன் அன்பு மட்டும் குறைந்ததா என்ன? தன்மானமும், தன்னவளின் மேல் கொண்ட காதலும்... சொல்லி புரிய வைக்க முடியாது...
முடியல சாமி... கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு விடுங்கோ... பாவம் போல் நினைத்து... ஏதோ, நம் அருகில் இருக்கும் பெண் போலவே ஆரணி... அவளின் சிணுங்கலுக்கு எல்லாம் சிணுங்கி, அவளோடு பயணிப்பது போலவே இருக்கு...
இந்த மாதிரி இதய துடிப்பை அதிகரிக்காமல் கொஞ்சம் ரெகுலரா தொடரை எழுதி (நீண்ட தொடராக ) எங்களை காப்பாற்றுங்கள் நயனி மா...
பின்குறிப்பு :
ரோசி கஜன் youtube சேனல் உண்மையா?
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Jannathul Firdhous




அவள் ஆரணி...
- நிதனி பிரபு அக்கா எழுதியது.
நீண்ட நாட்கள பிறகு என் ஒரு கதை படிக்கிறேன்.

அருமையான

கனமான உணர்ச்சிபூர்வமான கதை.
வாழ்த்துகள்

சகி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிதானமாக செதுக்கியிருக்கிறீர்கள்.
உங்களின் ' ஏனோ மனம் தள்ளாடுதே...' ல் கௌசிகனிடம் என் கணவரின் குணங்களை கண்டேன் என்றால் அவள் ஆரணி ல் அநேக இடங்களில் என்னை கண்டேன். நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் மாமியாருக்கு பிடிக்காத மருமகளாக, குடும்பமே சேர்ந்து கணவனை அலைகழிப்பதை காணாத சகியாத மனைவியாக, புகுந்த வீட்டு உறவுகளால் புறகணிக்கபட்டாலும் ஒதுங்காமல் சபை நிறைக்கும் மருமகளாக, இன்னும் இன்னும் நிறைய இடங்களில் ஏன் ஆரணியின் தவறுகளில கூட என்னை கண்டேன்.
ஆரணியின் ஒவ்வொரு மனநிலையும் எதார்த்தம். காலத்தின் ஓட்டத்தில் தொலைந்து போன அவர்களது காதலை மீட்டு விட்டு முடித்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும். எனினும் முடிவு அருமை.
அவள் ஆரணி..... மற்றுமொரு அற்புதமான படைப்பு. மீண்டும்
வாழ்த்துகள்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Pooja Kavi



#Review
அவள் ஆரணி - நிதனி பிரபு
Tamil words Theda kuda thonala Jii author kathai ah apdiye sethurukiruknga I am just speechless
Nanun neraiya stories padichiruken Aana enai neenga azhavechitinga
Entha story kum Nan azhathilla
Udane ithu soga story nu nenaikathinga
Aarani is just awesome
Nikki um chanceless Ella characters in super
But heroin is something spcl
Nan Ithula Aarani ah pathi Padikala Nan Aarani ah ve agiten ava Athum pothu LA enai ariyama en kannula kaneer varuthu ava sirikum pothu Santhosama avalu Onu na Kovamum varuthu
Rmba rmba nalla ezhuthirukinga Antha climax kuda enai touch panniruchu
Simply superb
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Aberna Devi

Thanks a lot for Aara,no words to explain,Sorry to say after your final post,the story name must be Avan Nikethan, yes he deserves more than Aara,atleast aara lived a peaceful life from her childhood,but Nikki, doesn't have any happy moments before he met Aara and as a guy he suffering a lot compare than Aara,Thank you so much from my bottom of my heart for this wonderful Avan Nikethan.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆரணி
ஆசிரியர் : நிதனி பிரபு.
கதை என்னன்னு சொல்ல போறதில்லை விரும்புறவங்க படிங்க பட் குறையாத உணர்வுகளோட கதை முடியும் வரை ஒன்றலாம்.
நிகேதன், ஆரணி இவங்களை சுற்றியே கதை. ஒவ்வொரு டியலாக்கும் சூப்பர். ஒரு நடுத்தர குடும்பம்
அநேகமா இப்படி தான் இயங்கும். அப்படி ஏற்ற தாழ்வு கொண்ட இரு குடும்ப அமைப்பை சேர்ந்தவங்க காதல் எப்படி எல்லாம் பயணிக்கும்னு சொன்ன விதம் அருமை.
நான் ரொம்ப திட்டுனேன் நிக்கிய பட் என்ன மனுஷன் என்ன லவ். ஆரணி யம்மா என்ன பொண்ணுடா இவள். நிஜமாவே ஒரு பெண்ணோட அழகான பயணம்.
பீல் பண்ணவச்சு, அழ வச்சு, கோபட வச்சுன்னு கதை முடியும்வரை நகரவிடலை.
வாழ்த்துக்கள்

அக்கா அண்ட் இப்போ நீங்க கதைல சேர்த்த பகுதிகள் நல்ல நிறைவான பீல் தருது. To be honest 1st கதை படித்த டைம் தோணுச்சு கதை முடியும் போதும் இன்னும் ஒன்னுன்னு தட் மீன் ஏதோ இருக்கலாமுனு அது இதுல தீர்ந்து போச்சு கரெக்ட் பாயிண்ட்ல நிறைவான நிறைவு..
கீழ லிங்க் அட் செய்றேன் விரும்புறவங்க படிக்கலாம்.
அன்புடன்
ப்ரஷா
 

நிதனிபிரபு

Administrator
Staff member
usharani Balaji


மக்களே, நிதனி பிரபு அவர்களின் ,அவள் ஆரணி...... என்ன சொல்ல ... நாம் அன்றாடம் பார்க்கும் காதல் ,பாசம், குடும்ப அரசியல் ,இது தான் கதை களம். அடுத்த அடுத்த பிரச்சினைகளை குடும்ப பெண்களான நம்மால் ஊக்கிக்க முடியும் ஆனால் அந்த சூழ்நிலையை ஆசிரியரின் எழுத்தின் மூலம் பயணிக்கும் போது இதயம் கணக்கிறது.சில சூழ்நிலையில் கெட்டவர்களாக தெரியும் மாலினி,ராகவன் கூட கதையின் போகில் அவரவர் நியாங்கள் அவரவருக்கு என்று எதார்த்தத்தை மீறாமல் கொண்டு சென்ற ஆசிரியருக்கு எனது தனிப்பட்ட பாராட்டுக்கள். அதே போல் இது ஒரு பெண்ணின் கதை என ஆசிரியை ஆரம்பிக்கிறார் ஆனால் எனது தனிப்பட்ட கருத்து இது ஒரு ஆணின் வலி மிகுந்த பயணம். தனது காதலை, பாசத்தை, கடமைகளை, பொறுப்புகளை, வலிமையை, தன்மானத்தை, இருத்தலின் முக்கியத்துவத்தை நிரூபிக்க போராடும் நிகேதனின் கதை. அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பு தர போராடுபவர்களின் உணர்வுங்கள் இந்த உலகத்தில் மதிக்க படுவது இல்லை என்பதற்கு உதாரணம் கடைசியில் தனது மனைவிக்கு தெரியாமல் நிகேதன் துடைக்கும் கண்ணீர் துளிகள்.
வாழ்த்துக்கள்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Jannathul Firdhous


அவள் ஆரணி...
- நிதனி பிரபு அக்கா எழுதியது.
நீண்ட நாட்கள பிறகு ஒரு கதை படிக்கிறேன்.

அருமையான

கனமான உணர்ச்சிபூர்வமான கதை.
வாழ்த்துகள்

சகி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிதானமாக செதுக்கியிருக்கிறீர்கள்.
உங்களின் ' ஏனோ மனம் தள்ளாடுதே...' ல் கௌசிகனிடம் என் கணவரின் குணங்களை கண்டேன் என்றால் அவள் ஆரணி ல் அநேக இடங்களில் என்னை கண்டேன். நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் மாமியாருக்கு பிடிக்காத மருமகளாக, குடும்பமே சேர்ந்து கணவனை அலைகழிப்பதை காணாத சகியாத மனைவியாக, புகுந்த வீட்டு உறவுகளால் புறகணிக்கபட்டாலும் ஒதுங்காமல் சபை நிறைக்கும் மருமகளாக, இன்னும் இன்னும் நிறைய இடங்களில் ஏன் ஆரணியின் தவறுகளில கூட என்னை கண்டேன்.
ஆரணியின் ஒவ்வொரு மனநிலையும் எதார்த்தம். காலத்தின் ஓட்டத்தில் தொலைந்து போன அவர்களது காதலை மீட்டு விட்டு முடித்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும். எனினும் முடிவு அருமை.
அவள் ஆரணி..... மற்றுமொரு அற்புதமான படைப்பு. மீண்டும்
வாழ்த்துகள்

...
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Alamu Palaniappan



நிதனி பிரபு அவர்களின்
"அவள் ஆரணி" ஒரு பெண்ணின் பயணம்
என் தூக்கம் போய் என் கண்ணில் ஒரு துளி நீர் வரவைத்துவிட்டாள் உங்க ஆரா...
முதல் அத்தியாயமே அதிரடியா பெற்றவர்களை எதிர்த்து, தன் வசதியான வாழ்வை விட்டு, நல்லவன் என்ற ஒன்றை மட்டுமே பிடியாகக் கொண்டு பெற்றவர்களிடம் செல்லிவிட்டு தைரியமாக வீட்டை விட்டு அவனுக்காக, அவனுக்கேச் சொல்லாமல் அவனுடன் வாழ வரும் ஒரு பெண்ணின் பயணமே இந்த "அவள் ஆரணி"
ஒரு பெண்ணின் பயணம் என்றே தலைப்பிட்டிருப்பதால்... அதை நோக்கியே கதை நகர்கிறது... படிப்படியாக அவர்களது முன்னேற்றத்தை காட்டியுள்ள விதம் நிதர்சனம்...... மேஜிக் அல்ல வாழ்க்கை என்ற நிஜத்தைச் சொல்கிறது....ஓவ்வொருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள்....அது தானே நிஜம்..!.எப்படி பொறுமையாகக் பயணிக்கிறாள் என்பதை , பலர் கடந்த வந்த பாதையாக விரிகிறது கதை.
"கொண்டவனே இப்படி அவளை பேசுகிறானே ....இதெல்லாம் உனக்குத்தேவையா " என்று ஒரு இடத்தில் கூட அவளும் நினைக்கவில்லை நம்மையும் நினைக்கவைக்கவில்லை என்றே நினைத்தேன்.... " அன்பு" மிகச் சாதாரணமானது மட்டுமல்லாமல் வலிமையானதும் கூட என்று ஆரா நிகேதனின் பயணம் உணர்த்துகிறது.
எந்த இடமும் இழுவையோ என்று நினைக்கத்தோன்றவில்லை எனக்கு.....எப்படி தங்களை நிருபிக்கப்போகிறார்கள் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது....
ஆரம்ப அத்தியாயங்களில் உள்ள ரொமான்ஸ் முகம் சுளிக்கவைக்கவில்லை.என்ற போதும் கொஞ்சம் மிகையாகிவிட்டதோ என்ற சிறு நினைப்பு தோன்றுகிறது... பிறகு வந்த அத்தியாயங்களில் அவ்வாறு இல்லை....
ஆக அழகான ஆராவின் பயணமே என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கில்லை நிதா....
ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளில் அவரவர் பார்வையில் மற்றவர் செய்வது தப்பாகப்படும்....இந்தக்கதையின் வாசகியாக என்னால் யாரையும் குறை சொல்ல இயலவில்லை.....நிகேதனின் அம்மா செய்வது குற்றம் என்றால்...அவர் ஒரு மாமியார், தாயல்லவே அவர் அப்படித்தான் இருப்பார் என்பதே என் பார்வை...
எப்படி தனது பயணத்தில் ஜெயிக்கப்போகிறாள் ஆரா என்பதைக்காண காத்திருக்கிறேன் நிதனி பிரபு
 
Top Bottom