You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஆம், ஓம் (Yes) எச் சொல் சரியானது?

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆம், ஓம் (Yes) எச் சொல் சரியானது?

?
முதலிலேயே எனது கருத்தினைச் சொல்லி விட்டு, விளக்கத்தினைப் பார்ப்போம். இரண்டும் சரியே. yes, yeah ஆகிய இரு சொற்கள் ஒரே பொருளில் (நுண்ணிய வேறுபாடு உண்டு) ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுவது போல என வைத்துக் கொள்வோம். இன்று தமிழ்நாட்டில் `ஆம்` என்ற சொல்லும், `ஓம்` என்ற சொல் ஈழத்திலும் புழக்கத்திலுள்ளன. ஒன்றிலிருந்து இன்னொன்று வந்திருக்க வேண்டும். பாவாணர் முதல் பலரும் `ஆம்` என்ற சொல்லின் திரிதலே `ஓம்` என்கின்றார்கள். எனக்கு இது மறுவளமாக இருக்குமோ என்ற ஐயம் உண்டு. இது விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும், எனினும் எனது பார்வையினைச் சுருக்கமாகக் கீழே தருகின்றேன்.

?
முதலில் இன்னொரு எடுத்துக்காட்டினைப் பார்த்துவிடுவோம். திகதி(ஈழம்), தேதி (தமிழக வழக்கு) ஆகிய சொற்களைப் பார்ப்போம். இவை திகழி என்ற தமிழ்ச் சொல்லின் மருவல். திங்களானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் திகழ்வதனைக் கொண்டு ஏற்பட்ட சொல். இதன் நெருங்கிய வடிவத்தினை ஈழமே இன்றும் கொண்டுள்ளது.

?
இப்போது `ஓம்` என்ற சொல்லின் மருவலே `ஆம்`எனில் தமிழ் நாட்டிலும் எப்போதாவது அச் சொல் அவ் வடிவத்திலேயே இருந்திருக்க வேண்டும் அல்லவா! பார்ப்போம்.

?
"ஓமோமெனவோங்கியதோர்சொல் " - திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம். இது தமிழ் நாட்டிலேயே இயற்றப்பட்ட பாடல். இந்நூல் காலத்தால் முந்தயது என்பதால் பழைய திருவிளையாடல் என்றும், வேம்பத்தூரார் திருவிளையாடல் என்றும் அழைக்கப்படுகிறது. {படம் 1 இல் அகராதி விளக்கம் காண்க} . இங்கு ஓம் என்ற சொல் உடன்படல் என்ற பொருளிலேயே இடம்பெறுகின்றது.
?
?
"ஓம்படை யொன்றுஞ் செப்பாள்" சீவகசிந்தாமணி.

இங்கு `ஓம்படை` என்பது அரசனை புலவன் வழிநடத்துவதாகும். {ஓம்படை = காப்பு என்ற பொருளுமுண்டு}. அரசனைப் புலவன் வழிநடத்தும் போது, அரசன் உடன்பட்டே அவ் வழி செல்கின்றான். எனவே இங்கு`ஓம்= ஆம்` .

?
?
?
பேராசிரியர் வித்துவான் பாலூர்கண்ணப்ப முதலியார் தொகுத்த தமிழ் இலக்கிய அகராதி, ஓம் என்பதற்கு பிரணவம், #ஆம் என விளக்கம் தந்துள்ளது.

?
?
?
?
`ஓம்` என்ற சொல் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்கு முனைவர் கண்ணபிரான் பின்வருமாறு விளக்குகின்றார்.

# "உந்தன்னோடு = அ
உறவேல் = உ
நமக்கு = ம்
அ + உ + ம் = ஓம்!" #

☝️
அவர் மெய்யியல் சார்ந்து விளக்கியிருப்பினும், அதில் உந்தனோடு நான் (நாம்) சேர்தல் {உடன்படல்} என்ற பொருளுண்டு.

?
?
`ஆம்` என்ற சொல் கலித்தொகையிலேயே இடம் பெற்றாலும் , அது நீர் என்ற பொருளிலேயே இடம் பெற்றுள்ளது. ``உடன்படல்` என்ற பொருளில் `ஆம்` எப்போது முதல் இடம்பெறுகின்றது என ஆய்வு செய்யப்பட வேண்டும். நான் தேடியவரைப் பழைய நூல்களில் காணக்கிடைக்கவில்லை.

எனவே `ஓம்` என்ற சொல்லே {சிந்துவெளி முத்திரையிலுமுள்ள சொல், பொருளில் ஒத்த கருத்தில்லை} ஆம் என மருவியிருக்கும் அல்லது `ஓம்` இனைக் களவாட {வடமொழி} `ஆம்` என மாற்றப்பட்டிருக்கலாம்.
?
எவ்வாறாயினும் `ஓம்` என்ற சொல்லை ஈழத் தமிழர்களாகிய நாம் தொடர்வோம்.
?
?
?

குறிப்பு - இந்த ஆம்-ஓம் வேறுபாட்டினை ஆராயத் தூண்டிய சோனியாவிற்கு {எனது முதல் பதிவிலுள்ள காணொளி} நன்றி.

-இலங்கநாதன் குகநாதன்-


1599428859569.png
 
Top Bottom