அத்தியாயம்-11
வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும், புஸில் விளையாடிக்கொண்டிருந்த சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள்.
சனாவைக் கண்டதும், “இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள் சித்தி? இந்தத் துண்டு எங்கே வரும் என்றே தெரியவில்லை. உங்களிடம் கேட்கலாம் என்று பார்த்தால் உங்களையும் காணவில்லை… ” என்றபடி புஸிலில் ஒரு துண்டைப் பொருத்தப் போனவள், சட்டென்று நிமிர்ந்து சனாவைப் பார்த்தாள்.
அந்தச் சின்னப் பெண்ணின் பார்வையே சனாவுக்குள் ஒரு தடுமாற்றத்தை உண்டு பண்ணியது. கேள்விகள் ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்து முடிக்க முதலே, “உங்களிடம் என்னவோ வித்தியாசம் தெரிகிறதே சித்தி.. என்னது…? கண்டுபிடித்துவிட்டேன்! கண்ணாடி.. எங்கே சித்தி உங்கள் கண்ணாடி..? ஏன் போடவில்லை? உடைந்துவிட்டதா…?” என்று கேள்விகளை அடுக்கினாள் சின்னவள்.
“இல்லையே.. என் கண்ணாடி உடையவில்லையே. இங்கே பார்…” இலகுவாகப் பேச முயன்றபடி, தன்னுடைய கைப்பைக்குள் இருந்த கண்ணாடியை வெளியே எடுத்துக் காட்டினாள் சனா.
“பிறகு எப்படி நடந்து வந்தீர்கள்? கண்ணாடி இல்லாமலேயே கண் தெரியத் தொடங்கிவிட்டதா…?” ஏதோ கண்ணாடி இல்லாவிட்டால் அவளுக்குக் கண்ணே தெரியாது என்கிற தொனியில் கேட்டவளின் கேள்வியில் சனாவுக்குச் சிரிப்பு வந்தது.
“ஆமாம்.. சித்திக்குத் திடீரென்று கண் தெரியத் தொடங்கிவிட்டது…” என்றாள் புன்னகையோடு.
“அம்மா… இங்கே வாருங்கள். சித்திக்கு கண்ணாடி இல்லாமலேயே கண் தெரிகிறதாம்…!” என்று கூவினாள் சைந்து.
“எதற்கு இந்தக் கத்துக் கத்துகிறாய் சைந்து…” என்றபடி அறையில் இருந்து வெளியே வந்தாள் சுலக்சனா.
சனாவையும் அங்கே கண்டவள், “அதுதான் சித்தி வந்துவிட்டாளே. அவளிடமே கேட்கவேண்டியது தானே அந்தப் புஸில் துண்டு எங்கே வரும் என்று. உனக்கும் உன் சித்திக்கும் தான் அது சரி. என்னை விடு.” என்று மகள் இதுவரை அவளைப் போட்டுப் படுத்திய பாட்டில் சற்றே சினத்தோடு சொன்னவள், அப்போதுதான் சனாவிடம் இருந்த மாற்றத்தைக் கவனித்தாள்.
“உன் கண்ணாடிக்கு என்ன ஆயிற்று சனா? போடாமல் இருக்கமாட்டாயே..” என்று கேட்டாள் சுலோ.
“அது.. அக்கா…” என்று தொடங்கிய சனாவை முந்திக்கொண்டு, “சித்திக்குக் கண்ணாடி இல்லாமலேயே கண் தெரிகிறதாம் அம்மா. இதைச் சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன்.” என்றாள் சைந்து.
“நீ என்னைக் கூப்பிடவில்லை, கத்தினாய்.” என்று மகளைக் கடிந்தவள், “கண்ணாடியைப் போடாமல் ஏன் கையில் வைத்திருக்கிறாய்..?” தங்கையின் கையிலிருந்த கண்ணாடியைக் கண்டுவிட்டுக் கேட்டாள்.
“அதக்கா.. கண்ணுக்கு லென்ஸ் வைத்திருக்கிறேன்..” தயக்கத்தோடு மெல்லிய குரலில் சொன்னாள்.
“ஓ.. அதுதானா. ஆனால்.. எப்படி, எப்போது வைத்தாய்..? வைக்கப்போவதாக என்னிடம் நீ சொல்லவே இல்லையே?”
“நானும் வைப்பதாக இருக்கவில்லை அக்கா. அங்கே ‘ஸ்டட்(டவுன்)’ டில் அந்தக் கடையைப் பார்த்ததும் வைத்துப் பார்க்கலாமே என்று தோன்றியது.. அதுதான்… வைத்தேன்.” வரும் வழியில் அக்காவிடம் எப்படிச் சொல்வது என்று யோசித்து வைத்ததுதான். ஆனாலும் பொய் சொல்கிறோமே என்று அவள் குரல் தாறுமாறாகத் தடுமாறியது.
“சரிதான். ஆனால் நீயாக எப்படிக் கதைத்தாய்…?” தங்கையின் டொச் ஆற்றலைப் பற்றி அறிந்தவள் தானே. அதனால் கேட்டாள்.
இந்தக் கேள்விக்குத்தான் அவள் பயந்துகொண்டே இருந்தது. இதைத்தொடர்ந்து வரப்போகும் கேள்விகள் எப்படி இருக்குமோ?
“அதக்கா… அந்தக் கடையடியில் நான் நின்றபோது சூர்யா வந்தார். அவரோடுதான் போனேன்... அவர்தான்.. கதைத்தார்…” தமக்கையின் முகத்தை அவளால் பார்க்கமுடியவில்லை. விழிகள் தாழ்ந்தது. நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியது. நெஞ்சில் நடுக்கம்…
“ஓ…” என்று இழுத்த சுலக்சனாவின் விழிகள் தங்கையின் விழிகளைக் கூர்ந்தது.
“சூர்யா… அவன் எதற்கு வந்தான் அங்கே…?”
“அது எனக்குத் தெரியாதுக்கா. நான் நிற்பதைப் பார்த்துவிட்டு, ஏன் நிற்கிறாய் என்று கேட்டார். லென்ஸ் வைக்க விருப்பம், ஆனால் பயமாக இருக்கிறது என்றேன். அதற்கு அவர்தான், ‘பயமில்லை. வா.. நான் கதைக்கிறேன்..’ என்று கூட்டிச்சென்றார்…” என்றாள் தமக்கையின் முகம் பாராது.
“ஆனால் நான் கேட்டபோது விருப்பம் இல்லை என்றாயே…” தங்கை சூர்யாவைக் காதலிக்கிறாளோ என்கிற கோணத்திலேயே சுலக்சனா சிந்திக்கவில்லை. ஏனெனில், அவளுக்காக ஜெயன் இருக்கிறான் என்பதை சனா உட்பட அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே தெரியும். அதுவும் மூன்று வருடங்களுக்கு முதலே முடிவான விஷயம் அது. ஆனாலும் ஏதோ ஒன்று அவள் மனதை நெருடியது. அதனால் தூண்டித்துருவிக் கேட்டாள்.
“இப்போதும்.. பெரிதாக விருப்பம் இல்லைதான். நீங்கள் சொன்னீர்களே, அதனால் வைத்துப் பார்க்கலாமே என்று நினைத்துத்தான் வைத்தேன்.” சொல்வது முற்றிலும் பொய் என்று அறிந்தே சொன்னவளின் உள்ளம் கூசியது.
“என்னிடம் நீ சொல்லியிருக்க நான் கூட்டிப் போயிருப்பேனே. ஏன் சூர்யாவோடு சென்றாய்..?”
“அது.. அது.. அவரோடு நான் போவதாக இருக்கவில்லை அக்கா. ஏன், இன்று லென்ஸ் வைப்பதாகவுமே இருக்கவில்லை. அவர்தான் வற்புறுத்திக் கூட்டிச்சென்றார்..” உண்மையையும் கலந்து பொய்யுரைத்தாள்.
“ம்.. நீ என்னிடம் சொல்லியிருக்கலாம்.. சரி விடு!” என்றவள், “அவன் வற்புறுத்தியதும் நல்லதுதான். உன் முகம் இப்போது இன்னும் நன்றாக இருக்கிறது.” என்றாள் தொடர்ந்து.
சுலக்சனாவுக்கு சூர்யாவைப் பற்றியும் தெரியும் என்பதால், அவனோடு சென்றதைப் பற்றி அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவளுக்கு.
அவள் யோசிக்காமல் விட்ட ஒரு விடயம், அவர்கள் இருவருக்குள்ளும் என்ன உறவு என்பதுதான். அப்படி அவள் யோசிக்காததற்கு ஜெயன் ஒரு காரணம் என்றாள், அன்று பிறந்தநாள் விழாவில் வைத்து சூர்யாவின் தாத்தா சொன்ன, ‘சூர்யாவுக்கு ஒரு பெண்ணைப் பார்த்தாயிற்று’ என்பதும் மற்றொரு காரணமாக இருந்தது.
“கண்களில் எரிவு மாதிரி.. அப்படி ஏதும் வித்தியாசம் தெரிகிறதா..?” என்று கேட்டாள்.
தமக்கையின் அன்பிலும், தன் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையிலும் குன்றிப்போனாள் சனா.
“அப்படி எதுவும் இல்லைக்கா..” என்றாள் குரலடைக்க.
“இனி அப்படி ஏதும் மாற்றம் தெரிந்தாலும் சொல்லு..” என்றவளுக்கு, மகள் புஸிலோடு இன்னும் போராடுவதைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.
“இவளுக்குச் கொஞ்சம் உதவி செய் சனா. என்னைப்போட்டு படுத்தி எடுத்துவிட்டாள்..” என்றாள் சனாவிடம்.
“போங்கம்மா உங்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் எப்படியாவது இதைப் பொருத்தித் திபியிடம் காட்டவேண்டும். அவள், தனக்கும் தன் சித்தாப்பாவுக்கும் தான் எல்லாம் தெரியும் என்று பெருமை பேசுகிறாள்…” என்றாள் சைந்து தன் வேலையிலேயே கவனமாக.
சுலக்சனாவிடம் பொய் சொன்னோமே என்று குன்றியிருந்த அந்த நேரத்திலும் சைந்து சொன்ன, ‘திபியின் சித்தப்பா’ என்ற சொல்லிலேயே சனாவின் உள்ளம் இனிதாக மலர்ந்தது.
“பாருங்கள் அக்கா இந்தப் பெரிய மனுஷியின் பேச்சை…” என்று தமக்கையிடம் சொல்லியபடி சைந்துவின் தலைமுடியை கலைத்துவிட்டவளின் குரலில் துள்ளல் இருந்தது. அந்தத் துள்ளல் அக்கா மகளின் பேச்சாளா அல்லது அவள் சொன்ன ‘சித்தப்பா’ வாளா என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
“ம்ம்.. எல்லாம் அவள் அப்பா கொடுக்கும் செல்லம். போதாக்குறைக்கு நீ வேறு…” என்று செல்லமாக மகளைக் சீராட்டியபடி உள்ளே சென்றாள் சுலோ.
“இது இங்கே வரவேண்டும் சைந்து. அதை அங்கே வை..” என்று அவளுக்குக் காட்டிக்கொடுத்தவள், “செய்துகொண்டிரு. சித்தி உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்…” என்றுவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
உள்ளே சென்று கதவை அடைத்தவள், கைபேசியில் சூர்யாவுக்கு அழைத்தாள்.
“ஹேய் லட்டு! இப்போதானே போனாய்.. அதற்குள் அழைக்கிறாய். என்னை விட்டு உன்னால் கொஞ்ச நேரமும் இருக்க முடியவில்லையா…?” அவள் கொடுத்த முத்தத்தின் மோகம் முற்றிலும் தீராத குரலில் கேட்டான் அவன்.
அக்காவிடம் பொய் சொன்னோமே என்கிற குற்ற உணர்வில் இருந்தவளுக்கு அவன் பேச்சு கோபத்தைக் கிளப்ப, “சூர்யா! உங்களை..” என்று கடுப்பானவளிடம், “என்னை.. ம்.. சொல்லுசொல்லு! என்னை என்ன செய்யப் போகிறாய் லட்டு? திரும்பவும் முத்தமிடப் போகிறாயா? எனக்குச் சம்மதம். ஆனால் முத்தமிட வேண்டிய இடம் மட்டும் வேறு..” என்றான் உல்லாசமாக.
“இந்தப் பேச்சை முதலில் நிற்பாட்டுங்கள் சூர்யா!” என்றாள் கோபத்தில்.
அவள் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்து, “இப்போது என்ன..?” என்று கேட்டவனிடம் மெல்லிய சலிப்பிருந்தது.
“அக்கா லென்ஸ் வைத்ததைப் பற்றிக் கேட்டார்கள்..” என்றவளின் குரல் ‘அதை வைக்கச் சொன்னது நீதான்’ என்று அவனைக் குற்றம் சாட்டியது.
“அதற்கு என்ன இப்போது?” சுருக்கமாகக் கேட்டவனுக்கு எரிச்சல் வர ஆரம்பித்திருந்தது.
“என்ன சூர்யா இப்படிக் கேட்கிறீர்கள்?”
“வேறு எப்படிக் கேட்க? அதையும் நீயே சொல்லு, அப்படியே கேட்கிறேன்…”
“ப்ச்! விளையாடாதீர்கள். எனக்கு எவ்வளவு சங்கடமாக இருந்தது தெரியுமா…?”
“சங்கடமா? ஏன்?” அவனுக்குச் சத்தியமாகப் புரியவில்லை.
“பின்னே.. பொய் சொன்னால் சங்கடமாக இராதா..?”
“பொய் சொன்னாயா..? எதற்கு? என்ன பொய் சொன்னாய்..?” என்றவன் அவள் என்னவோ சொல்ல வரவும், “முதலில் இப்படித் துண்டு துண்டாக சொல்வதை விட்டுவிட்டு, என்ன நடந்தது என்பதைச் சொல்லு…” என்றான் பொறுமை இழந்த குரலில்.
“உங்களோடு வந்து லென்ஸ் வைத்ததற்கு அக்காவிடம் என்ன காரணம் சொல்ல முடியும் சூர்யா? ‘அவர் என் காதலன், அதனால் அவரோடு போனேன்’ என்றா..?” அவன் வாயை அடைத்துவிடும் இடக்கோடு கேட்டாள் லட்சனா.
“அப்படிச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. அதோடு சொல்ல மறுப்பவளும் நீதான். இதிலே எனக்குப் புரியாதது என்னவென்றால், நீ சொன்ன பொய்க்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்பதுதான்.” என்று அவன் கேட்க, அவளுக்கோ தன் தலையை எங்காவது சுவரில் முட்டிக்கொண்டால் என்ன என்று தோன்றியது.
பின்னே, அவன் குணம் தெரிந்தும், இப்படி ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்வான் என்று அனுபவ ரீதியாக அறிந்திருந்தும் அவனிடம் ஏறுப்பட்டது அவள் தவறுதானே.
“ஐயோ சாமி! உங்களுக்கும் இதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. நான் மட்டும்தான் காரணம். தெரியாமல் கேட்டுவிட்டேன். விட்டுவிடுங்கள். என்னால் முடியவில்லை சூர்யா…” கோபமாக ஆரம்பித்தவளின் குரல் முடிக்கையில் ஓய்ந்திருந்தது.