• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதழ் 4

ரோசி கஜன்

Administrator
Staff member
வரும் நாள் எப்போதோ?





1543602009094.png




காத்திருக்கும் காலங்கள் யாவும்
கணங்களாய் கடக்க




காணப்போகும் தருணத்தை
எதிர்நோக்கும் கண்களை




கண்களால் சிறை செய்து
கன்னியின் மனதை கொள்ளையடித்து
செல்லப்போகும் கள்வனே
எப்போது வருவாயோ?




~ ஸ்ரீ ~
 

ரோசி கஜன்

Administrator
Staff member
பேதையின் பிதற்றலில் பெண்மனதின் பொருள்



1543602443611.png




எப்போது? எப்படி? என எதிர்பார்த்த தருணத்தைத் தர
கனவை நனவாக்க வருபவனே
உன்னுடனான என் முதல் சந்திப்பு எப்படி இருக்கும்?


உன் உருவத்தைப் பருகும் வகையில் உன்னை பார்ப்பேனோ?உன்னைக் கண்டதால் உண்டான நாணத்தால் மண்ணைப் பார்ப்பேனோ?

மனநிறைவுடன் அமைதியாய் அத்தருணத்தை ரசிப்பேனோ?
மனமகிழ்ச்சியில் அலைக்கடலாய் ஆர்ப்பரிப்பேனோ?

பிரிவில் வாடிய பேதையாகி பேசாமடந்தையாவேனோ?
பலயுகம் தாண்டி கண்ட களிப்பில் அளவில்லா வாயாடுவேனோ?

நம்மிருவருக்கும் இடையில் வாய்மொழி வேண்டும் என எதிர்பார்ப்பேனோ?
மொழிகளற்று உணர்வுகள் மட்டும் பரிமாற ஏங்குவேனோ?

என் எண்ணத்தை நான் அறியேன்
நீயேனும் என்னை உணர்வாயோ?

என் செயலின் பொருளை அறிவாயோ? - இல்லை
பிச்சி பிதற்றுகிறாள் என மீண்டும் பிரிந்து செல்வாயோ?


~ஸ்ரீ~






 

ரோசி கஜன்

Administrator
Staff member
பிரிவாற்றாமை


1543603357816.png



தனிமைச் சிறை வாசத்தில் அவள்

மனம் எங்கிலும்

அவன் வாசமே அவளுக்கு

அவனின் வாசம்

தன் வசம் இழக்கச் செய்ய

கண்களில் கண்ணீர் கோடுகள்



இரண்டு மாத மண வாழ்வில்

அவனின்றி அவள் தனிமையில்

கழிக்கும் இரவிது

எண்ணங்கள் யாவிலும்

திண்ணமாய் அவளவனே

ஓரிரவே தீரா நாளாய் பயணிக்கையில்

எங்ஙனம் தாங்குவாள் பெண்ணவள்

வருடக்கணக்கான பிரிவை



அவனை கண்ட நொடி...

இனிக்க இனிக்க பேசிப்பழகி

தேன் மிட்டாயாய்

அவளுள் காதலாய்

அவன் ஊடுருவிய நாட்கள்

விரிகிறது மனத்திரையில்



வரமாய் தோன்றிய நாட்கள்

நினைவுகளாய் மனதின் இடுக்குகளில்

அந்நினைவே மனதை

கொல்லும் ரணமாய்

விடியா இரவும் முடியா இரவானது



இனி நிமிடமும் நகருமே நரகமாய்

அவனின்றி

அவளைப் பிடித்தமில்லை எனக்கூறி

விலகவில்லை அவன்



வார்த்தை சண்டையில்

சச்சரவாகி் பிரியவுமில்லை அவன்

தலைகண யுத்தமும் நிகழவில்லை

அவர்களுக்கிடையில்

உன் புன்னகை போதும் பெண்ணே



பொன் நகை வேண்டாமென

மணந்தவனாதலால்

வரதட்சனை பிரிவுமில்லை இது

தம்பதிகள் தனித்து வாழும்

ஆடி மாத பிரிவுமில்லை இது



மேலான துயரத்தில்

உழன்றிருந்தான்

அவளனவனும்

அவளின் நினைவில் தூரதேசத்தில்



நன்மையிலும் தீமை இதுதானோ??

சுகத்தில் மறைந்திருக்கும் சோகமும் இதுதானோ??



லட்சங்கள் மேல் கொண்ட லட்சியத்திற்காய்

குடும்ப பொறுப்பையேற்ற

கணவனாய்

கிடைத்த வாய்ப்பை

பயன்படுத்துபவனாய்

அதில் பயன்பெறுபவனாய்

சென்றுவிட்டான் அந்நியதேசத்திற்கு

பணிநிமித்தமாய்



அணுவிலும் அவளவன் நினைவாய்

திசுக்களிலும் அவன் நினைவை

சுவாசமாக்கி

காத்திருக்கிறாள் காரிகையும்

நுழைவிசைவிற்காய்

அவனுடன் பயணிக்க



- நர்மதா சுப்ரமணியம்
 

ரோசி கஜன்

Administrator
Staff member
1543603603754.png


நின் விலகல் என்னுள் எவ்வித
துயரத்தையோ சோகத்தையோ
ஏற்படுத்திச் செல்லவில்லை!
மனமுடையவில்லை!
இமை மீறி வாதை

கரைகடக்கவில்லை!
இதயம் குழம்பித் தவிக்கவில்லை!



மாறாக
ஒரு வெற்றிடம்
ஒரு தனிமை
ஒரு விரக்தி
இனி யாராலும்
ஏன் உன்னால் கூட
நிரப்பவியலாத ஏதோ ஒன்று!




சாவின் வாடை


எனைச் சூழும் வரையான
மரணதேவன் உயிரை


சொட்டுச் சொட்டாய்
உறிஞ்சி முடிக்கும் வரையான
வெற்றிடம் இது!




-கயூரி புவிராசா
 

ரோசி கஜன்

Administrator
Staff member
பிரிய மகனுக்கு!


1543603718868.png

மகனே...
பூவுலகைக் காண எண்ணிக் காத்திருக்கின்றாய்
அம்மாவும் தான்
நீ வயிற்றில் உதைக்கும் நொடியில் உன் அப்பாவும் நானும் அகமகிழ்ந்து ஆர்ப்பரிக்கிறோம்.



கண்ணா
பொம்மைகளையோ கார்களையோ
வாங்கி நான் சேமிக்கவில்லை
நூல்கள் கொண்டு உனக்காய்
தனி உலகை நெய்கிறேன்
மனிதம் தவழும் சூழலில்
உனை வளர்க்க விளைகிறேன்




நீ தமிழோடும்
இசையோடும்
இயற்கையோடும்
உறவாட வேண்டும்!
உன் பேனா பல சரித்திரங்கள்
சமைக்க வேண்டும்!



கால நீட்சியில் முகமூடியில் புதைந்த
மனிதர்களை அடையாளங்காணப் பழகு!
பசுத்தோல் போர்த்த புலிகளிடம் விலகியிரு!
நல்ல நண்பர்களைத் தேடு!



உன் பாதையில் நிமிர்வுடன் செல்!
உறவுகளுடன் நெருங்கியும் விலகியும் இரு!
அம்மாவின் பாதுகாப்பை விட அறிவுரைகள்
கூட வரும் கண்ணா!



உன் கையே உனக்குதவி
தந்தை உன்னையெண்ணி கனவு வளர்க்கிறார்
அதை நனவாக்கு!



காயங்கள் பல கண்டு மீண்ட
எங்கள் காதலின் சாட்சி

கண்ணா உன் உயிர்ப்பு!
நீ ஜனிக்கும் நாளை உறங்காமல்
எதிர்பார்த்திருக்கிறேன் கண்ணா...!


- கயூ
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom