வீட்டுக்காரி
எனக்கானவைகள் எல்லாம்
அப்படியேத் தான் காத்திருக்கின்றன.
துடைப்பதற்கான தரை
என்னைப் பார்த்தபடி
காத்திருக்கிறது.
அழுக்குத் துணிகளும்
அவற்றோடு பாத்திரங்களும்
சேர்ந்தேக் காத்திருக்கினறன.
சிறுநீர் கழித்துவிட்டு குழந்தையும்
தேனீருக்கான காத்திருப்பில்
மொத்தக் குடும்பமும்
எனக்காகக் காத்திருக்கிறது.
பிசையவேண்டிய மாவும்
அரைத்தலுக்காய் தேங்காயும்
பார்த்தபடி காத்திருக்கிறது.
அசதி என்று நான்
அசந்துவிட முடியாது.
போர்முனையில் படைவீரன் போல
எப்போதும் நான் இயங்கியபடியே தான்
எனக்கானவைகள் எல்லாம்
அப்படியே தான் காத்திருக்கின்றன.
-கோபிகை
எனக்கானவைகள் எல்லாம்
அப்படியேத் தான் காத்திருக்கின்றன.
துடைப்பதற்கான தரை
என்னைப் பார்த்தபடி
காத்திருக்கிறது.
அழுக்குத் துணிகளும்
அவற்றோடு பாத்திரங்களும்
சேர்ந்தேக் காத்திருக்கினறன.
சிறுநீர் கழித்துவிட்டு குழந்தையும்
தேனீருக்கான காத்திருப்பில்
மொத்தக் குடும்பமும்
எனக்காகக் காத்திருக்கிறது.
பிசையவேண்டிய மாவும்
அரைத்தலுக்காய் தேங்காயும்
பார்த்தபடி காத்திருக்கிறது.
அசதி என்று நான்
அசந்துவிட முடியாது.
போர்முனையில் படைவீரன் போல
எப்போதும் நான் இயங்கியபடியே தான்
எனக்கானவைகள் எல்லாம்
அப்படியே தான் காத்திருக்கின்றன.
-கோபிகை