You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இது நீயிருக்கும் நெஞ்சமடி...! - Comments

Chitra ganesan

Active member
அருமையான பதிவு.கடைசி வரை அவன் சொல்ல வந்ததை கேட்கவே இல்லையே அவள்.பிரணவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்காமல் அழுது கிட்டே கிளம்பிவிட்டாளே.
 

Rena

Active member
சிறிது நேரத்தில் இறங்கி வந்தாள் ஆர்கலி. முதல்நாள் இரவு முழுக்க அழுத்திருக்கிறாள் என்று அப்பட்டமாகத் தெரியுமளவுக்கு கண் மடலெல்லாம் வீங்கி முகம் முழுக்கச் சிவந்திருந்தது. சோர்ந்துமுகம் வாடிப்போயிருந்தாள். ஓடிப்போய் அணைத்துக்கொள்ளத் துடித்த கைகளை அடக்கிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான் பிரணவன். எதிர்பாராமல் அவளின் விழிகள் அவனைச் சந்தித்துவிட்ட கணத்தில் சட்டென்று குளமாகிப் போயிற்று அந்தக் கண்கள்.

அவன் அவளை அவளை பார்க்க அதை உணர்ந்தவளோ தலையைக் குனிந்துகொண்டாள். உதடுகள் நடுங்கி மீண்டும் அழத் தயாராகிக்கொண்டிருந்தது.

‘இப்படிப் பாக்காதடா! நீ இரக்கப்பட்டுத் தந்தாலும் பரவாயில்ல, நீதான் வேணும் எண்டு வெக்கம் கெட்டுப்போய் சொன்னாலும் சொல்லிடுவன். அந்தளவுக்கு ரோசம் கெட்டுப்போய் நிக்குது என்ர மனம்!’ எழுந்து அவன் கைகளுக்குள் புகுந்துவிட வேண்டும் என்று எழுந்த ஆழமான உந்துதலில் பயந்து சோபாவின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டாள் ஆர்கலி.
அவள் படும்பாட்டைப் பார்க்கப் பார்க்க எதையாவது தூக்கிப்போட்டு உடைக்கவேண்டும் போல அவ்வளவு கோபம் வந்தது பிரணவனுக்கு.


‘ஏன்டி ஏன்டி நீயும் கஷ்டப்பட்டு என்னையும் சாகடிக்கிறாய்!’ என்று கத்தவேண்டும் போலிருந்தது.

அவர்களை அழைத்துச் செல்ல வாகனமும் வந்துவிட, கல்லாக இறுகிப்போய் நின்றான் பிரணவன்.

மற்றவர்கள் பெட்டிகளை ஏற்ற, பொருட்களை எடுத்துவைக்க என்று வேலைகளைப் பார்க்க, அதையெல்லாம் செய்யவேண்டியவனோ அசையாமல் நின்று அவளை எப்படித் தனியாகப் பிடிக்கலாம் என்று பார்த்திருந்தான்.

அழுத தடயத்தை அழிக்க ஆர்கலி வேகமாக மாடியேறினாள். முகம் கழுவிவிட்டு துவாலையால் முகத்தை துடைத்துக்கொண்டு வந்தவள் கதவடைக்கும் சத்தத்தில் அதிர்ந்து நிமிர்ந்தாள். அவளையே முறைத்தபடி பிரணவன் நிற்க, மனம் படபடக்கத் துவங்கியது. காட்டிக்கொள்ளாமல் அவள் வெளியேர பார்க்க, அவளைப் பிடித்துத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து தன் மேலேயே போட்டுக்கொண்டான் பிரணவன்.

அவள் அவன் முகம் பாராமல் விடுபடப் போராட, கணத்தில் தன் மனதை உணர்த்தும் வழியாக கோபத்தோடு அவளின் உதடுகளைக் கைப்பற்றினான் அவன்.

உயிரையே தனக்குள் கடத்துவது போலிருக்க, கண்ணீர் வழிய அவன் கைகளுக்குள் அடங்கினாள் ஆர்கலி. ஆத்திரம் அடங்குமட்டும் முத்தமிட்டவன், “அழாம போய்ட்டுவா!” என்றான், செருமிச் சீர் செய்த கரகரத்த குரலில்.

அவள் கண்ணீருடன் விலக, “கடைசிவரைக்கும் என்ன சொல்ல வாறன் எண்டு கேக்கவே இல்ல என்ன நீ?” கோபத்தோடு குமுறினான் அவன்.

அவள் கண்ணீர் வடிக்க, “என்னைப் பாத்தா உனக்கு இரக்கப்பட்டு ஓம் எண்டு சொன்னவன் மாதிரியா இருக்கு?”

அவளோ அவனிடமிருந்து விடுபடுவதில் மட்டுமே முனைப்பாக இருக்க, மீண்டும் ஆவேசமாக இழுத்துத் தன்னருகே கொண்டுவந்தான். “ஒரு வார்த்த போயிட்டு வாறன் எண்டு சொல்லேலாது என்ன உனக்கு? அவ்வளவு பிடிவாதம்? போடி!” என்று கோபத்தில் தள்ளிவிட்டான்.

அவள் கட்டிலில் விழ, பெட்டியைத் தூக்கிக்கொண்டு விறுவிறு என்று இறங்கிப் போய்விட்டான் அவன்.

“கொழும்புக்கு வாறியா பிரணவா?” வாகனம் புறப்படத் தயாராகக் கேட்டார் சுந்தரேசன்.

“இல்ல மாமா. அப்பாவும் அம்மாவும் வாறீனம் தானே. நான் நிக்கிறன்.” என்றவனின் கண்கள் அவளிடம் பாய்ந்தன. ‘நீ கூப்பிடு, நான் வாறன்!’

துடைக்கத் துடைக்கப் பெருகிய கண்ணீருடன் தன்னைச் சமாளிக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள் அவள். பார்த்தவனின் இதயத்திலும் பாரம். பெரும் கோபமும் வந்தது. பிரியப்போகும் நேரத்தில் கோபத்தைக் காட்டி என்ன செய்யப்போகிறான்? ஜன்னலினூடு அவளின் கரம் பற்றி அழுத்திக்கொடுக்க, கலங்கிச் சிவந்திருந்த விழிகளினூடு அவள் பார்க்க, “போயிட்டு வா!” என்று உதடுகளை அசைத்தான் பிரணவன்.

கண்ணீரோடு விடைபெற்றுக்கொண்டாள் அவனது பொம்மா!

தொடரும்..

பெரும்பாலும் திங்கள் அல்லது செவ்வாய் கடைசி அத்தியாயத்தோடு சந்திப்போம்!
Acho mudiya pogoda
 
Top Bottom