You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இத்தாலி - வெனிஸ் - இதழ் 6 ( யாழ் சத்யா )

ரோசி கஜன்

Administrator
Staff member
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

நலம், நலமறிய ஆவல்! தீபாவளிச் சிறப்பு மாதத்தில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதலில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

“என்ன சத்யா தொடர்ந்து ஒரு நகரத்திலுள்ள இடங்களைப் பற்றியே எழுதுகிறீர்களே… எங்களை வேறு நாட்டுக்கும் அழைத்துச் செல்வது தானே? என்று, போவோமா ஊர்கோலம் பகுதியின் தொடர் வாசகி ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார்.

அவரின் விருப்பத்திற்கிணங்க, தீபாவளிச் சிறப்பாக செந்தூரத்தின், போவோமா ஊர்கோலம்? பகுதியில் உங்களை ஒரு சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்ல எண்ணியுள்ளேன். தயாரா எல்லோரும்? போவோமா மக்களே?

சுற்றி வர நீலக்கடல் சூழ்ந்திருக்க ஆங்காங்கே பெரிய பெரிய கட்டடங்களோடு எழுந்து நிற்கிறது இந்த அதிசய நகரம். எப்போது உருவாக்கப்பட்டது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் கூட நான்காம் நூற்றாண்டு சரித்திரங்களில் இடம்பெற்றிருக்கும் இந்நகரம் தனது தொன்மையைப் பறை சாற்றி நிற்கின்றது.

1545517409378.png

யுனெஸ்கோவினால் world heritage ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நகர், தனது பிரத்யேகக் கட்டடக் கலைகளாலும் கலாச்சாரத்தாலும் உலகப் பிரசித்திப் பெற்று விளங்குகின்றது. நூற்றுக்கும் அதிகமான சிறு தீவுகளையும், போக்குவரத்திற்காக நூற்றைம்பதிற்கு மேற்பட்ட சிறு கால்வாய்களையும், பலநூறு பாலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த மிதவை நகரத்தில், அதுவே இந்த பிரதேசத்தின் அழகைப் பலமடங்காக்குவதற்குக் காரணமாகவும் இருக்கின்றது.


தொன்மையான பல கிறிஸ்தவத் தேவாலயங்கள் அவற்றின் கட்டட வடிவமைப்புக்களாலும் உள்ளே காணப்படும் சித்திர, சிற்ப வேலைப்பாடுகளாலும் மெய்மறந்து பார்க்க வைக்கின்றன.

1545517462586.png வெள்ளை மாபிளால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம் Church of Madonna della Salute.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கலைத்திறன் மிக்க Basilica of St.Mark. இதன் உயர்ந்த சுவர்களில் காணப்பட்டவை ஓவியங்கள் என்று எண்ணிப் பார்வையிட்டுக் கொண்டிருந்த எனக்குக் கிடைத்த அதிர்ச்சி. அவை வர்ணம் தீட்டப்பட்ட சித்திரங்களல்ல, மிகச்சிறிய மாபிள் துண்டுகளால் அமைக்கப்பட்டவை என்பது மிக நெருங்கிப் பார்த்த போதே புரிந்தது.

1545518100971.png 1545518112676.png






1545518131876.pngஇன்னொரு அழகிய தேவாலயம் Church of S.Giorgio Maggiore பத்தாம் நூற் றாண்டில் கட்டப்பட் டது.


இவற்றை விட Carmini, Madonna dell’ Orto, San Polo, San Sebastiano, Santa Maria Assunta, Santa Maria dei Miracoli, இன்னும் எத்தனையோ புராதன தேவாலயங்கள் இன்றும் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன.

Grand canal இற்கு முன்னால் அமைந்திருக்கும் St.Marco square. ஒரு பக்கம் Doge's Palace ஆட்சி புரியும் கவர்னர் மாளிகையாகவும், நீதிமன்ற மாகவும், சிறைச்சாலையாகவும் விளங்கும் இந்த மாளிகை அதன் பிரமாண்டத்திலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும், சிற்ப, சித்திரக் கலை வேலைப்பாடுகளிலும் பிரமிப்பைத் தருகின்றது. இந்த மாளிகையில் என்னைக் கவர்ந்த ஒரு விடயம் அங்கே இருந்த குறிப்பு ஒன்று. ஆம்! இந்த மாளிகை உலகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதாம்.


1545518162565.png






1545518179805.png மறுபக்கம் Basilica of St.Mark, இன்னொரு புறம் மணிக்கூட்டுக் கோபுரம், பல உணவு விடுதிகளும், அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகளுமாக கண்கவர் பிரதேசம் இது வென்றால் மிகையாகாது.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
மிதவை நகராம் வெனிஸின் அழகுக்கு அழகு சேர்ப்பது அங்கிருக்கும் கால்வாய்களில் அங்குமிங்குமாக சென்று கொண்டிருக்கும் கொண்டோலா எனப்படும் படகுச்சேவை. நீலமும் வெள்ளையும் அல்லது சிவப்பும் வெள்ளையும் கிடையாய்க் கோடுகள் போட்ட ரீசேர்ட் அணிந்து, தலையிலே தொப்பியும் சீருடையாய் அணிந்தவர்கள் படகைச் செலுத்துவார்கள்.


1545518220153.png


அரை மணி நேரம் அந்தப் படகில் குறுக்கும் நெடுக்குமாய் கால்வாய்களில் சுற்றுவதற்கு, நாம் விரும்பினால் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு பாடல்கள் பாடும் சிறு குழுவினரையும் எங்களோடு அழைத்துச் செல்லலாம்.


கொண்டோலா படகின் அமைப்பு அத்தனை அழகாய் இருக்கும். சிம்மாசனம் போன்ற கலை வேலைப்பாடுமிக்க அந்தப் படகின் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் போது நாம் ஏதோ அரச காலத்தில் பயணப்படுகிறோம் என்ற உணர்வு தோன்றாமலில்லை.


Taxi என்று பெயர் பொறிக்கப்பட்ட படகுகளைக் காணும் போது சிரிப்பாக இருந்தது. காரில் மட்டுமே டாக்ஸியைப் பார்த்த எனக்கு இந்தப் படகு டாக்ஸி புதுமையான அனுபவம் தான். பப்ளிக் போக்குவரத்து சேவைகளும் இடம்பெறுகின்றன. எந்த ஊருக்கு எந்த எண் பஸ் என்று பார்த்து ஏறுவோமோ அது போல படகுத் தரிப்பிடங்களுக்குச் சென்று உரிய இலக்கப் படகுகளில் ஏறிச் செல்ல வேண்டியதுதான்.


பீட்ஸாவுக்குப் பெயர் போன இத்தாலியில் அமைந்துள்ளமையால் பீட்ஸாவும், கடலின் நடுவே அமைந்திருப்பதால் கடல் உணவுகளும் இங்குள்ள உணவுச்சாலைகளின் பிரதான மெனுக்களாக அமைந்திருந்தன. சுவையும் பிரமாதம்.


1545518248259.png 1545518259481.png




ஒவ்வொரு ஆண்டும் தைமாதத்திலிருந்து பங்குனி மாதப் பகுதிக்குள் இரு கிழமைகள் நடைபெறும் Carnival உலகப் பிரசித்தம். கிறிஸ்தவ மதச்சார்புடையதாக நடைபெறும் இந்த முகமூடித் திருவிழாவில், பிரத்யேக வரலாறுகளைக் கொண்டு விளங்கும் முக மூடிகளை அணிந்து, அதற்குரிய ஆடை அணிகலனும் உடுத்தி படகுகளில் உலாப் போவார்கள்.

1545518278067.png
இதைக் கண்டுகளிக்க உலகின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்து குவிவார்கள். விதம் விதமாய் அலங்காரங்களும் பாட்டும் நடனமுமாய் வெனிஸ் நகரே கோலாகலப்படும்.

இப்படிப் பல அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகின்றது வெனிஸ் நகரம். சுருங்கச் சொன்னால் எங்களுக்கு எப்படிக் கேரளாவோ, அது போல ஐரோப்பியர்களுக்கு வெனிஸ்.


காதலர்களின் கனவு தேசங்களில் ஒன்றான வெனிஸின் அருகே இருக்கும் Burano, Murano தீவுகளுக்கு உங்களை அடுத்த இதழில் அழைத்துச் செல்லும் வரை உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.
 
Top Bottom