You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இன்னுயிராவாய் என்னுயிரே...! கருத்து திரி

Meera

New member
கதை மிகவும் நன்றாக இருந்தது. தர்சன் சொல்லும் விளக்கத்தில் வெண்பாவின் நிலையிலிருந்தும் சிந்திக்க தூண்டுகிறது. நாமும் எப்போதும் தவறுகளுக்கு மற்றவரையே கை காட்டுகிறோம். இதற்கு நான் எந்த வகையில் காரணமானேன் என்று சிந்திக்க மறந்து விடுகிறோம். அதேபோல் தர்ஷன் இலக்கியாவிடம் சொன்ன எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எனது செய்கைகள் அதை உணர்த்தவில்லையா என்று கேட்டதும் என்னை சிந்திக்க வைத்தது. நானும், கதைப் புத்தகங்களின் உபயமோ தெரியாது அன்பை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. அவரின் செயல்களை நாம் உணர வேண்டும் எனபதுதான் உண்மை. இது எனக்கும் உதவி செய்தது. நன்றி.
 
Jayachandran

New member
First read your novel randomly. But I am reading it just for you. Yes you have a majic. Every novel have hero heroine they love they fight and finally they unit. But the sucess is how to carry the way of writing. No one can explain the happiness and the pain of love more than you.I am just addicted to your novels.
 
நிதனிபிரபு

Administrator
Staff member

மிகவுமே அருமையான கமெண்ட் மீரா. நடைமுறையில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பது மிகப்பெரிய உண்மை. அதேநேரம் சொல்லுவது என்பதும் அவ்வளவு இலகுவல்ல. அதற்கு மிகப்பெரிய மனபலம் வேண்டும். அப்படியே சொல்லிவிட்டோம் என்றால் அதன் பாரம் மொத்தமாய் அகன்றுவிடும். ஆனால், அதன் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்கிற கேள்வியும் உண்டு இல்லையா. ஆனால், நானுமே.. சிலரின் செய்கைகளில் இருந்து அவர்களை விளங்கிக்கொள்ள முயல்வேன். அதுவே கதையிலும் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களைப்போலவே பல கதைகள் தான் புதிதாகப் பலவற்றை சிந்திக்கவும் தூண்டியிருக்கிறது. மிக்க மிக்க நன்றி அருமையான கருத்திடுகைக்கு.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
First read your novel randomly. But I am reading it just for you. Yes you have a majic. Every novel have hero heroine they love they fight and finally they unit. But the sucess is how to carry the way of writing. No one can explain the happiness and the pain of love more than you.I am just addicted to your novels.
வாவ் ஜெயசந்திரன். உங்கள் கமெண்ட் படித்து நான் என்ன உணர்கிறேன் என்று சொல்லத் தெரியாமல் நிற்கிறேன். மிகவுமே மகிழ்ச்சி, சந்தோசம் எல்லாம். உண்மைதான். காதல் மோதல் கல்யாணம். எங்கு சுற்றினாலும் இதுதான் சுருக்கம் கதைகளில். அதை எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் வெற்றி தோல்விகள். ஆனால், உங்களை போன்றவர்களின் அருமையான வார்த்தைகள் தான் இன்னுமின்னும் உழைக்கத் தூண்டுபவை. மிக்க நன்றி!
 
Top Bottom