You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இலங்கை தொதல்

ரோசி கஜன்

Administrator
Staff member
ஊரில் இருக்கையில் தொதல் அடிக்கடி செய்வோம் . அந்தச் செய்முறைதான் இது.

thothal site 5.jpg




தேவையானவை:


- நல்ல செத்தல் தேங்காய் 6 ( சிறியதாயின் 8 . தேங்காயின் கண்கள் பெரிதாகக் கறுப்பாக இருப்பின் அவை எண்ணெய்த் தேங்காய் . தொதலுக்கு நல்லது.)

- பச்சை அரிசி 1 சுண்டு அல்லது 250 g ( டின்பால் டின் தான் சுண்டு )

- சர்க்கரை 500g

- பிரவுன் சீனி 500g ( வெள்ளைச்சீனியில் ஒரு மேசைக்கரண்டியளவில் எடுத்துக் கரமல் செய்தும் பாவிக்கலாம். கரமலுக்கு pan ஒன்றை மிதமான சூட்டில் வைத்துச் சீனியை அதனுள் இடுங்கள் . மெல்ல மெல்ல உருகி வரும். பிரவுன் ஆகும்வரை வைத்திருந்து எடுத்து, பால்+ மாக் கலவையில் சேர்க்கலாம். )


- ஏலப்பொடி இரண்டு தேக்கரண்டி

- 75 g பொடித்த கஜூ , அல்லது தோல் நீக்கிய கச்சான் , அல்லது பொடித்த ஆமெண்ட் (Almond - தோலுடன் இருந்தால் கொதி தண்ணீரில் விட்டுச் சிலநிமிடங்களில் தோலை அகற்றலாம்)


- 1/8 தேக்கரண்டி உப்பு

- ஒன்றிலிருந்து இரண்டு மேசக்கரண்டியளவில் வறுத்த பயறு அல்லது மெல்லிதாக வறுத்த சவ்வரிசி. (இது கட்டாயம் இல்லை )



செய்முறை:

- அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து நன்றாக குறுநல் இல்லாது அரைத்தெடுங்கள்.

- தேங்காயைத் துருவி 500 ml அளவின் தண்ணீர் விட்டு கெட்டியாக முதற்பால் பிழிந்தெடுங்கள்.

இது போலவே இரண்டால், மூன்றாம் பாலையும் எடுங்கள். அவற்றுக்கு மொத்தமாக இரண்டு லிட்டர் அளவில் தண்ணி பாவியுங்கள்.

- சர்க்கரையைப் பொடிசெய்து முதற்பாலில் கரைத்து வடித்தெடுத்து வையுங்கள்.

- அரிசிமா, இரண்டாம் மூன்றாம் பால், உப்பு, சீனி, காரமல் என்றால் அது இவற்றைக் கலந்தெடுங்கள். மாவில் கட்டி இல்லாது கரைத்துக்கொள்ளுங்கள்.

-அடி கனமான அகன்ற தாச்சி அல்லது நொன் ஸ்டிக் பானில் இந்த மாக் கலவையை இட்டு அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். கைவிடாது துலாவுங்கள்.


thothal site 2.jpg

கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களில் இக்கலவை தண்ணீர்த் தன்மை மாறி தடித்து வரத் தொடங்கும். அப்போது முதற்பால் சக்கரைக் கலவையை விட்டுக்கிளறுங்கள்.

மேலும் ஒரு அரைமணித்தியாலத்தில்,

thothal site 3.jpg


பயறு அல்லது சவ்வரிசி போடுவதென்றால் போட்டுக் கிளறவும்.

கஜூ, ஏலக்காய்த்தூள் இவற்றையும் சேருங்கள்.

இக்கலவை தடித்து வருகையில் மெல்ல மெல்ல எண்ணெய் கசியும் . அவற்றை இன்னொரு கரண்டி பாவித்து எடுத்துவிடுங்கள். நல்ல எண்ணைய்த் தேங்காய் என்றால் அரைப் போத்தலுக்கு மேலே எண்ணெய் எடுக்கவேண்டியும் வரும் .


இப்படியே கிளறி, தொதல் உருண்டு சேர்ந்து வருகையில் தட்டொன்றில் கொட்டி அமர்த்தி விட்டுவிடுங்கள் .

thothal site 4.jpg


ஆறியதும் துண்டுபோடலாம் . தொதல் உடனே சாப்பிடுவதைவிட இரண்டுநாட்கள் கழித்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஈரம் படாதிருந்தால் கெடாதிருக்கும் .

கிட்டத்தட்ட மூன்று அல்லது மூன்றரை மணித்தியாலங்கள் எடுக்கும் .

அதிகம் தண்ணீர் பாவித்துப் பால் பிழிந்திருந்தால் நேரம் அதிகம் எடுக்கும்.





இப்போ இப்பத்தைய கதைக்கு வாறேன் . இங்கு எனக்கு நல்ல தேங்காய் கிடைப்பதில்லை . தேங்காய்ப்பால் இல்லையோ சாப்பாடு சமையல் இல்லை என்றதெல்லாம் ஊரில் . இங்கு பெரும்பாலும் என் சமையலில் பாலுக்கு இடமிருப்பதில்லை. தனியே பருப்பு, கத்தரிப் பால்கறி , சொதி இவற்றுக்கு மட்டுமே பால் பாவிப்பேன் . பசுப்பால்தான் சேர்ப்பேன்.

மற்றும்படி ஒலிவ் ஒயில், கீரைக்கு மிச்ச கறிகளுக்குத் தேவையென்றால் தயிர் சேர்ப்பேன்.

so இங்கு வந்தபின் தொதல் ஆசைவந்தால் பிரான்ஸ் போகையில் கடையில் வாங்கும் தொதல் தான்.

நம்மட வீிட்டு தொ்தலுக்கு தூ ரத்துச் சொந்தமாக இருந்தாலும் 'ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சக்கரை' என்றளவில் வாங்கிச் சாப்பிடுவேன்.

அடுத்து, இங்கு தேங்காயில் பால், ஊரில் போல் வருவதுமில்லை . சோ தொதல் செய்யும் வேலைக்குப் போனதில்லை.

இப்படியிருக்கையில் நிதாவின் உபயம், டின்னில் வரும் தேங்காய்ப்பாலில் தொதல் செய்யலாம் என்று தெரியவந்தது .

மேலே உள்ள முறையில் செய்துவரும் தொதலுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை . இனி, அடிக்கடி நான் தொதல் செய்வேனாம்.



நேற்று அப்பத்துக்கும் போட்டிருந்தேன். வரிசையாக தேங்காய்ப்பால் டின் எடுத்து வெளியில் வச்சிருக்க கஜனுக்கு மூக்கில வியர்த்திட்டு.

தயவு செய்து பலகாரம் செய்யாதீங்கப்பா. கொஞ்ச நாளைக்கு லீவு விடுங்கோ. (பலகாரச் சூட்டுக்கு!)

கதை எழுதுறது விட்டாச்சோ? எழுதலாமே! (பலகாரச் சூடு குறையுமே எண்டுதான்)

இல்ல, வெளில கண்டபடி போகேலாது. விளையாட்டு அப்படி இப்படி ஒண்டுமில்ல. பிள்ளைகள் வீட்டுக்க இருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டு ...என்னவோ செய்யுங்க.

( இப்படிச் சொல்லுறவர்தான் முதல் ஆளா நிக்கிறது எண்டது வேற கதை . எண்டாலும் அளந்துதான்.)


சரி அதைவிடுவம். செய்முறை பார்ப்போமா?


தேவையானவை :



- ஒன்றரை cup அரிசி ( சிவத்த பச்சை அரைவாசி , பாசுமதி அரைவாசி - கப் ரைஸ் குக்கரோடு வருமே அது.நீங்கள் சிவத்த பச்சை தனியாக எடுக்கலாம் . வெள்ளை பச்சை தனியாக எடுக்கலாம் .பாசுமதி தனியாகவும் எடுக்கலாம் )

- 4 டின் தேங்காய்ப்பால் . ( ஒரு டின் 400 ml) டின்னில் வரும் பால் இரண்டுவகையுண்டு. கெட்டியான பாலும் வரும். இது சாதாரணமானது . கெட்டியானது என்றால் இன்னும் நல்லது.

- Dark brown bastard suger 400g ( என்னிடம் சர்க்கரை இருக்கவில்லை . பொதுவாகவே நான் சர்கரைக்குப் பதில் பொங்கல், மோதகம் எல்லாவற்றுக்கும் இதைத்தான் பாவிப்பேன் )

- white suger 400g

- 75 g பொடிசெய்த Almond

- துளி உப்பு

- ஒரு மேசைக்கரண்டி வறுத்த சவ்வரிசி



செய்முறை:


-அரிசியை இரண்டுமணிநேரம் ஊறவிட்டு நீர் வடித்து அரைத்தெடுங்கள் . மேலே சொன்னது போலவே .

தேங்காய்ப் பால் , அரிசிமா, சீனி வகைகள், உப்பு நான்கையும் கட்டியில்லாது கலந்துகொள்ளுங்கள்.

மேலேசொல்லியுள்ளது போலவே கைவிடாது கிண்டுங்கள்.சவ்வரிசி, கஜூ , ஏலப்பொடி சேர்த்துக் கிண்டுங்கள்.

குக்கர் மீடியம் பிளேம் வைத்துக்கொள்ளுங்கள். அந்தரம் அவசரம் என்றால் சிம்மில் விட்டுட்டு ஓடிட்டு வரலாம் . ஹா...ஹா...

இறுகி வர எண்ணெய் வரும் . எடுத்துவிடுங்கள். எனக்கு 50ml அப்படித்தான் வந்தது .
சுற்றித் தெறிக்கும் . கிளீனிங் எக்ஸ்ட்ரா வேலை. செய்திட்டாப்போச்சு . நமக்குத் தொதல் முக்கியம்!

சுருண்டு ஒன்றாக வர, தட்டில் கொட்டி சமப்படுத்தி விடுங்கள்.

2 தொடக்கம் இரண்டரை மணித்தியாலம் பிடிக்கும் .

நொன் ஸ்டிக் அடிப் பிடிக்காது.

மேலேயுள்ள படங்கள் நேற்று நான் இந்தமுறையில் செய்கையில் எடுத்தவை.



சரி, இனி யார் யாரெல்லாம் தொதல் செய்யப்போகிறீர்கள் . உங்கள் படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாஹா... அக்கா உண்மையிலேயே கோரோனோ ஒரு பக்கம் பெரும் வேதனையையும் பயத்தையும் தந்தாலும் நமக்கு என்னவோ மறக்க முடியாத நாட்களாகத்தான் கழிகிறதா நான் நினைக்கிறேன். விருப்பமான பலகாரம், நினைத்தநேரம் செய்துகொண்டு பிள்ளைகளோடு அடிபட்டு என்று சொல்லத்தெரியாத ஒரு சந்தோசம். இந்த செய்முறையை விட, நாம டின்பாலில் தொதல் கண்டு பிடிச்சு செய்ததும் கஜன் அண்ணாவின் கதையும் தான் சிரிப்பு.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
ஹாஹா... அக்கா உண்மையிலேயே கோரோனோ ஒரு பக்கம் பெரும் வேதனையையும் பயத்தையும் தந்தாலும் நமக்கு என்னவோ மறக்க முடியாத நாட்களாகத்தான் கழிகிறதா நான் நினைக்கிறேன். விருப்பமான பலகாரம், நினைத்தநேரம் செய்துகொண்டு பிள்ளைகளோடு அடிபட்டு என்று சொல்லத்தெரியாத ஒரு சந்தோசம். இந்த செய்முறையை விட, நாம டின்பாலில் தொதல் கண்டு பிடிச்சு செய்ததும் கஜன் அண்ணாவின் கதையும் தான் சிரிப்பு.
உண்மை நிதா.

பிள்ளைகள் வளர முழுநேரம் பள்ளி . வீடு வந்தாலும் படிக்க இருக்கும் தானே? என்னதான் என்றாலும் அவர்களோடு் கதைத்துப் பேசும் நேரம் குறைந்துவிட்டது என்ன? நான் அது அடிக்கடி feel பண்ணுவேன்.

இப்போ இது மாதிரியான சந்தர்ப்பம் ஒரு வரம்.

கஜன் தான் பாவம். வேலை busy.

பிள்ளைகளுக்கு வகுப்பு என்று இருந்தாலும் நானும் கூடவே இருக்கிறேன். சேர்ந்து சமைக்கிறோம் . விளையாடுறோம் . டிவி பார்க்கிறோம் . இளம் பிள்ளைகள் மனதை விருப்பு வெறுப்பை, கருத்துக்களை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள முடியுது.
 

Sukinathan

Active member
உண்மை நிதா.

பிள்ளைகள் வளர முழுநேரம் பள்ளி . வீடு வந்தாலும் படிக்க இருக்கும் தானே? என்னதான் என்றாலும் அவர்களோடு் கதைத்துப் பேசும் நேரம் குறைந்துவிட்டது என்ன? நான் அது அடிக்கடி feel பண்ணுவேன்.

இப்போ இது மாதிரியான சந்தர்ப்பம் ஒரு வரம்.

கஜன் தான் பாவம். வேலை busy.

பிள்ளைகளுக்கு வகுப்பு என்று இருந்தாலும் நானும் கூடவே இருக்கிறேன். சேர்ந்து சமைக்கிறோம் . விளையாடுறோம் . டிவி பார்க்கிறோம் . இளம் பிள்ளைகள் மனதை விருப்பு வெறுப்பை, கருத்துக்களை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள முடியுது.
அப்ப ஒரு ...இல்ல இல்ல ..,பல பிளானோடதான் செந்தூரம் இருவரும் தொடங்கி இருக்கிறீங்கள். இனி ரெசிப்பி தேடுற ஆட்கள் எல்லாம் இங்கால வரப் போகினம். இலங்கைத் தொதல் என்று எழுதிப் போட்டு வெளிநாட்டு தொதல் ரெசிப்பியக் கூட கலந்த மாதிரி இருக்கு. இருப்பினும் வாசிக்க ஏதோ எங்களுக்கு எழுதியிருக்கிற படியால் செய்முறை தவிர்த்து வாசித்தோம். நன்றி (ஹிஹிஹிஹி)
 
Top Bottom