You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வில் ஒரு வரலாற்றுப் பதிவு -இதழ் 6

ரோசி கஜன்

Administrator
Staff member
செந்தூர உலாவில் இம்முறை கண்ணிற்பட்டது ஒரு பட்டமளிப்பு விழா. பட்டமளிப்பு விழாவில் என்ன சிறப்பு இருக்கப் போகிறது? அது வழமையாக எல்லா இடங்களிலும் ஒவ்வோராண்டும் எல்லாப் பல்கலைக் கழகங்களும் நடாத்துவது வழமை தானே? இ‌தி‌ல் என்ன புதுமை இருக்கப்போகிறது? இந்த வினாக்களைத் தாண்டி, ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வில் ஒரு வரலாற்றுப் பதிவாகத் திகழ்ந்தது இந்த‌ப் பட்டமளிப்பு விழா.

இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது பிரான்சின் தலைநகரான பரிஸ் நகரில். உலகின் நாகரீக நகரான பரிஸ் தற்போது ஏராளமான தமிழர்களால் நிறைந்திருக்கின்றது. இங்கு வாழும் தமிழர்களும் இதுவரை ஏராளமான விழாக்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இலங்கைப்பள்ளிகளின் பழைய மாணவர் சங்கங்கங்களின் ஒன்றுகூடல்கள், இழந்துவிட்ட சொந்த ஊர்களின் பெயரால் நடாத்தப்படும் கலை நிகழ்வுகள், கம்பன் விழா, எம்.ஜி. ஆர் நினைவு விழா, குடும்பத்தின் பெருமையை உலகறியச் செய்ய எண்ணி பணத்தை அள்ளி இறைக்கும் திருமணம் போன்ற குடும்ப விழாக்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், எம் சிறார்கள் தமிழ் பயிலும் பள்ளிகளின் ஆண்டு விழாக்கள், விளையாட்டு விழாக்கள்…. இப்படியான எண்ணற்ற விழாக்களை பரிஸ் நகரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். இந்த விழாக்கள் எல்லாவற்றிலுமிருந்து வேறுபட்டதாய் அமைந்தது இந்தப் பட்டமளிப்பு விழா. பொதுவாக, அனைத்து விழாக்களும் ஒரு பதிவாக அமையும். ஆனால், இந்தப் பட்டமளிப்பு விழாவோ பிரான்சில் எம்மினத்தின் இருப்புத் தொடர்பாக, நீண்ட காலமாக இருந்து வந்த கேள்வி ஒன்றுக்கான பதிலாக அமைந்திருந்து. அந்தக் கேள்வி இந்த உலாவின் இறுதிப் பந்தியில்.

பட்டமளிப்பு விழாவை நடாத்தியது பிரான்சின் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம். இது பிரான்சில் தாய்நிலம் காணாத் தலைமுறையாக வளர்ந்துவரும் எம் சிறார்கள், தாய்மொழியை மறந்து விடக் கூடாது என்ற உன்னத நோக்கையேற்று பிரான்சின் தமிழர் செறிந்து வாழும் பகுதியெங்கும் தமிழ்ச்சோலை எனும் தமிழ்ப் பள்ளிகளை நடாத்திக் கொண்டிருக்கின்றது. இதன் அடுத்த பரிணாமம் இப்போது தமிழியற் பட்டமளிப்பாக மிளிர்ந்திருக்கின்றது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து இந்தப் புதிய வரலாற்றைப் படைத்திருக்கின்றது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.

பட்டம் வழங்கியது இந்தியாவின் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம். வழங்கப்பட்ட பட்டம் இளங்கலைத் தமிழியல். இது இலங்கையின் கலைமாணிப் பட்டத்திற்கு நிகரானது; சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

பட்டம் பெற்றவர்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் எம் உறவுகள். தெருவெங்கும் தமிழோசை கேட்கும் தமிழர் தாயகத்தில், தமிழிலே பேசி மகிழ்ந்து, தமிழோடு விளையாடி, தமிழிலே சண்டையிட்டு, தமிழோடு இணைந்து வாழும் தமிழர்கள் பலருக்கே தமிழியற் பட்டம் என்பது எட்டாக் கனியாக உள்ள நிலையில், பிரான்சின் அதிவேக வாழ்வியற் சூழலில், உயர்கல்வி சார்ந்த , பணமீட்டல் தேவை நோக்கிய ஓய்வற்ற ஓட்டத்திலும் சங்கத்தமிழ் இலக்கியம், சிறுகதையும் புதினமும், உரைநடையும் நாடகமும்,

இக்காலக் கவிதையும் சிற்றிலக்கியமும், காப்பியங்களும் சங்க இலக்கியமும், மொழிபெயர்ப்பியல், சமயத்தமிழ் இலக்கியம், படைப்பிலக்கியம், இதழியல், இடைக்கால இலக்கியம், இலக்கணம், தமிழகப் பண்பாட்டு வரலாறு,காப்பிய இலக்கியம்,தமிழக வரலாறு, இலக்கியவரலாறு, மொழிவரலாறு, நாட்டுப்புறவியல், பண்டைய இலக்கியம், தமிழகக் கலைகள், இலக்கியத் திறனாய்வு என்று தமிழியல் நூல்களோடு வாழ்ந்து, பயண அலைச்சலிலும், தொடருந்திற்கும் பேருந்திற்குமான காத்திருப்பிலும், அவ்வப்போது கிடைக்கக் கூடிய சிறுபொழுது இடைவேளைகளிலும் விழி துஞ்சாது படித்து, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரிதாய்க் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் குடும்பத்தோடு இணைந்து குலாவும் வாய்ப்பினைத் துறந்து, உறவுகளின் விழாக்களில் கலந்து மகிழும் இனிமையை இழந்து, தமிழ் வகுப்பிற்குச் சென்று, கற்றுத்தேர்ந்து இந்தப் பட்டத்தைச் சூடிக்கொண்டுள்ளார்கள்.

பட்டமளிப்பு விழா தொடர்பான அழைப்பே கூடு கட்டும் தூக்கணாங்குருவியுடன் புதுமையாகத்தான் இருந்தது. தாயக நினைவின் வலிகளை சுமந்த பட்டகர்களின் தாயகம் நோக்கிய பயணத்தின் குறியீடாக இது அமைந்திருந்தது.

மேலும் விழா மண்டபத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தூக்கணாங்குருவிக் கூடுகள், வைக்கோலால் வேயப்பட்ட வட்டக்குடில், தமிழர் தாயகம் சார்ந்த மரபுசார் கருவிகள், செண்பகம், சிறுத்தை, கார்த்திகைப் பூ போன்ற எம் தாயகத்தின் குறியீடுகள், வந்தோரை வரவேற்று வழங்கப்பட்ட சர்க்கரைத் தண்ணீர், பனங்கட்டிக்கூழ் போன்ற பானங்கள், மண்டபத்தை அலங்கரித்த மகாகவி உருத்திரமூர்த்தி போன்ற தமிழறிஞர்களின் படங்கள் எல்லாம் இணைந்து, விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஒருமுறை தாயகத்திற்குக் கொண்டு சென்றன.

அதைவிட பட்டதாரி ஆண்கள், தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப, வேட்டியுடன் பட்டமளிப்பு ஆடை அணிருந்திருந்தது ஒரு புதுமை. பட்டம் வழங்கியவரும், நிகழ்விற்கு வந்திருந்த பிரமுகர்களும் அவ்வாறே வந்திருந்தனர். பட்டகர்ளையும் பிரமுகர்ளையும் வரவேற்று அழைத்துச்சென்ற தமிழ்ச்சோலை மாணவர்களின் தமிழர் மரபுசார் இன்னிய அணி, வரவேற்பு நடனமாய் அமைந்த மயிலாட்டம், இளைய தலைமுறையினரின் வடமோடிக் கூத்து, எனத் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களை முழுமையாகப் பிரதிபலித்தது இந் நிகழ்வு.

இந் நிகழ்வில் 29 பட்டகர்கள் இளங்கலைத் தமிழியற் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுள் வயதிலே மூத்தவர் திருமதி. சர்வேசுவரி சோமசுந்தரம் அவர்கள். தாயகத்திலிருந்து எண்பதுகளில் புலம்யெர்ந்து பிரான்சில் கால்பதித்தவர். இப்போது அறுபதுகளின் இறுதியில் இருக்கிறார். தமிழ்மீதுள்ள தீராக்காதலால் தமிழ்ப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்து உழைத்து வருபவர். படிப்பிற்கும் பட்டத்திற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை வார்த்தை தவிர்த்து, செயலால் உரைத்து முன்னுதாரணராகியுள்ளார். இவர்களுள் வயதில் இளையவர் செல்வி. சுவஸ்திகா. பிரான்சு மண்ணிலே பிறந்து, பிரெஞ்சு மொழியில் கல்விபயின்று இயற்பியலில் Phd பட்டம் வரை நிறைவு செய்தவர். தமிழ் மீதுள்ள ஆர்வமிகுதியால் இளங்கலைப் பட்டம் வரை தமிழையும் தொடர்ந்து வந்துள்ளார். வாழிட மொழி எதுவாக இருப்பினும் தமிழே எங்கள் தாய்மொழி எனவுரைக்கும் எம் சிறார்களுக்கு இவர் ஒரு முன்னோடி; ஒரு வழிகாட்டி. இந்த இருவருக்கும் இடையில் நிற்பது 27 என்ற எண்ணிக்கையல்ல; புலம்பெயர் வாழ்விலும் தலைமுறை தலைமுறையாக தமிழ் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை. இவர்களின் வழித்தடத்தில் அடுத்தடுத்த அணிகளில் இன்னும் பலர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் எனும் செய்தி இந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கிறது.

இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான வாழ்க்கைச் சூழலுக்குட்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் ஏதொவொரு தொழிலில் இருப்பவர்கள். சிலர் உயர்கல்வியைத் தொடர்பவர்கள். இவர்களுள் பலர் தமிழ்ச்சோலைகளில் ஆசிரியர்களாகச் சேவையாற்றிக் கொண்டிருப்பவர்கள். இவர்களை ஒன்றிணைத்தது தமிழ் மீதுள்ள தணியாத தாகம்.

பட்டம் பெற்ற பின் மேடையிலிருந்து இறங்கியவேளையில், அநேகமான பட்டகர்களிர் கண்களிலே உதிர்ந்தன சில நீர்த்துளிகள். அவை ஆனந்தக் கண்ணீரின் துளிகள். அத்துளிகளிலே ஒரு சில வேதனைக் கண்ணீரின் துளிகளும் கலந்திருந்கக் கூடும். இந்தப் பட்டப்படிப்பிற்காக அவர்கள் சந்தித்த தடைகள், இழப்புகள், வலிகள், அவமானங்கள் எல்லாமே ஒரு கணம் அவர்களின் மனக் கண்ணில் தோன்றி மறைந்திருக்கக் கூடும்.

பட்டமளிப்பு நிகழமுன் முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து எடுத்துவரப்பட்ட அரிக்கன் விளக்கில் சுடரேற்றப்பட்டதும், பட்டம் பெற்ற பின் பட்டகர்கள் ஒன்று கூடி, தமிழுக்கும் தமிழ்மண்ணுக்குமாய் என்றும் உழைப்போம் என்று உறுதியெடுத்துக்கொண்டதும் இந்நிகழ்வின் உச்சம்; எச்சத்திலிருந்தும் எழுவோம் என்ற செய்தி.

பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, பட்டகர்களால் படைக்கப்பட்ட 'விதைப்பு' எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டமையும், அவர்களால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் அரங்கில் சமர்ப்பிக்கப்பட்டமையும் விழாவின் சிறப்பினை மேலும் மெருகேற்றின.

மொரிசியஷ் தீவிலும், பிஜித் தீவிலும் வாழும் தமிழறியாத் தமிழர்கள் போல், புலம்பெயர் நாடுகளிலும் எம்மினம் சிதைந்து விடுமா? இங்கு எம் அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழின் வகிபங்கு என்ன? இப்படியான கேள்விகளுக்கு, வரலாற்றின் பக்கத்தில் தெளிவாக விடையெழுதிச் சென்றிருக்கிறது இந்தப் பட்டமளிப்பு விழா.
 
Rena

Active member

உண்மையிலேயே இது மிகவும் முக்கியமான வரலாற்று சிறப்பு
 
Top Bottom