You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உங்களின் பெயரால்....!

Sugiy

Member
உங்களின் சாபங்களில் நான் உயிர்த்தெழுகிறேன்!
உங்களின் நச்சரிப்புக்களால் நான் நிதானமடைகின்றேன்!
உங்களின் புறக்கணிப்புகளால் என் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கின்றேன்!
உங்களின் வஞ்சப்புகழ்ச்சிகளால் தடக்கிவிழாமல் நிதானித்துநிற்கின்றேன்!
எனவே,
என் அன்பானவர்களே
என்னை நீங்கள்
சபியுங்கள்!
உங்களின் பெயரால்

நான் வாழ்ந்துவிட்டுப்போகின்றேன்!

நன்றி: படம்- Google
10991177_910102859034298_230583788515399971_n.jpg
 
Last edited by a moderator:

Rena

Active member
உங்களின் சாபங்களில் நான் உயிர்த்தெழுகிறேன்!
உங்களின் நச்சரிப்புக்களால் நான் நிதானமடைகின்றேன்!
உங்களின் புறக்கணிப்புகளால் என் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கின்றேன்!
உங்களின் வஞ்சப்புகழ்ச்சிகளால் தடக்கிவிழாமல் நிதானித்துநிற்கின்றேன்!
எனவே,
என் அன்பானவர்களே
என்னை நீங்கள்
சபியுங்கள்!
உங்களின் பெயரால்

நான் வாழ்ந்துவிட்டுப்போகின்றேன்!

நன்றி: படம்- Google
View attachment 448
Sema
 

Sukinathan

Active member
மே-18

எம்
இனிய தேசமே!
எப்படியுள்ளாய்..?

நீ
நலமா? எனக் கேட்க
நா வறழ்கிறது......
சுகமா எனக் கேட்க
சுவாசம் குறைகிறது

இருப்பினும்
எப்படியுள்ளாய்?
எம் தமிழ் மண்ணே!

புலி சுமந்த தேசமது-இன்று
வலி சுமந்து நிற்கிறதே...எம்
துகிலுரித்த பாதகரின்....
சாவறிய மனம் தவிக்கிறதே....!

சாபமிடு தாயே....
எம்மினம் அழித்தோரை...
கொன்றொழிக்க...!
சாபமிடு....!!

உலகமே கூடி நின்று..
உறவாடிக் கை குலுக்கி..
விடிவு வருமென்று ......
காத்திருந்த நிமிடமதை....

வஞ்சனையால் ..நாம்
வீழ்ந்த நாளதனை....
நெஞ்சமது மறந்திடுமா...

ஆன துயர் ஆனதுவே..
என்றொதுங்க முடியலயே..
எப்படிப் பொறுக்கின்றாய்...
எம்மினத்தின் வலியெல்லாம்..

குருதி தோய்ந்த எம் பொழுதுகளை
வருடிக் காத்த தாயன்றோ....இன்று
எப்படியுள்ளாய்?

எங்கள் நிலம்....
எங்கள் வளம்.....
எங்கள் பலம்...என்றிணைந்த
எங்கள் கரம்
ஏதுமற்றுப் போனதுவோ..

எங்களது சூரியனும்..
எமைக் காத்த எம்படையும்..
சூழுரைத்த வெற்றிகளை..
நந்திக் ...கடல் ...கரைத்துப் போனதுவோ...

எம்மினத்தின்..
குடலுருவி.....
குருதி குடித்து...
குதம் குடைந்து....
பெண்மை பறித்தோரெல்லாம்
ஐ. நா. வின் அதிதிகளாம்..

எங்கள் அழுகுரலும்..
ஓலங்களும்.......
அந்தச் செவிடர் ..
காதை எட்டலயாம்...

நச்சுக் குண்டுகளும்....
மொய்த்து வீழ்ந்த..
கந்தகத் தூறல்களும்...
கொண்டு சென்ற -எம்
உறவுகளின் எண்ணிக்கை..
பொய்த்துத் தான் போனதன்றோ.....

அந்த..
புண்ணிய புதல்வர்களின்..
எண்ணங்கள் என்றுமே..
உன்னோடு தான்...
காற்றலையாய் கலந்திருக்கு..
காத்து நில் அவர் கல்லறையை..
காவியமாய் யுகமறியும்..

———————————————-
இரணையூர் சுகி
 

Rena

Active member
மே-18

எம்
இனிய தேசமே!
எப்படியுள்ளாய்..?

நீ
நலமா? எனக் கேட்க
நா வறழ்கிறது......
சுகமா எனக் கேட்க
சுவாசம் குறைகிறது

இருப்பினும்
எப்படியுள்ளாய்?
எம் தமிழ் மண்ணே!

புலி சுமந்த தேசமது-இன்று
வலி சுமந்து நிற்கிறதே...எம்
துகிலுரித்த பாதகரின்....
சாவறிய மனம் தவிக்கிறதே....!

சாபமிடு தாயே....
எம்மினம் அழித்தோரை...
கொன்றொழிக்க...!
சாபமிடு....!!

உலகமே கூடி நின்று..
உறவாடிக் கை குலுக்கி..
விடிவு வருமென்று ......
காத்திருந்த நிமிடமதை....

வஞ்சனையால் ..நாம்
வீழ்ந்த நாளதனை....
நெஞ்சமது மறந்திடுமா...

ஆன துயர் ஆனதுவே..
என்றொதுங்க முடியலயே..
எப்படிப் பொறுக்கின்றாய்...
எம்மினத்தின் வலியெல்லாம்..

குருதி தோய்ந்த எம் பொழுதுகளை
வருடிக் காத்த தாயன்றோ....இன்று
எப்படியுள்ளாய்?

எங்கள் நிலம்....
எங்கள் வளம்.....
எங்கள் பலம்...என்றிணைந்த
எங்கள் கரம்
ஏதுமற்றுப் போனதுவோ..

எங்களது சூரியனும்..
எமைக் காத்த எம்படையும்..
சூழுரைத்த வெற்றிகளை..
நந்திக் ...கடல் ...கரைத்துப் போனதுவோ...

எம்மினத்தின்..
குடலுருவி.....
குருதி குடித்து...
குதம் குடைந்து....
பெண்மை பறித்தோரெல்லாம்
ஐ. நா. வின் அதிதிகளாம்..

எங்கள் அழுகுரலும்..
ஓலங்களும்.......
அந்தச் செவிடர் ..
காதை எட்டலயாம்...

நச்சுக் குண்டுகளும்....
மொய்த்து வீழ்ந்த..
கந்தகத் தூறல்களும்...
கொண்டு சென்ற -எம்
உறவுகளின் எண்ணிக்கை..
பொய்த்துத் தான் போனதன்றோ.....

அந்த..
புண்ணிய புதல்வர்களின்..
எண்ணங்கள் என்றுமே..
உன்னோடு தான்...
காற்றலையாய் கலந்திருக்கு..
காத்து நில் அவர் கல்லறையை..
காவியமாய் யுகமறியும்..

———————————————-
இரணையூர் சுகி
மறக்க முடியாத ,மறக்க கூடாத நினைவுகள்.காலம் பதில் சொ ல்லும்,கயவர்கள் அழிவை கண் கூட பார்ப்போம்.காலம் பல கடந்தாலும் அக்காட்சிகள் மனக்கண் முன் வரும் போது அடிவயிறு எரிகிறது.
 
Top Bottom