You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் வாசமே என் சுவாசமாய் ! கதையிலிருந்து…

ரோசி கஜன்

Administrator
Staff member
உன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒன்று, நினைக்க நினைக்க துன்பம் தருமானால், உன்னை வாட்டி வதைக்குமானால், உன்னைத் தன்னிஷ்டத்துக்கு அகங்காரத்தோடு ஆட்டி வைக்க முயலுமானால், அப்படிப்பட்ட ஒன்றுக்கு உன் சிந்தையில் நீ இடமே தரலாகாது.

அப்படி இடம் தருபவளாள்/னால் வாழ்வை வெற்றிகொள்ள முடியவே முடியாது.


கடக்கும் ஒரு கணத்தையேனும் நிம்மதியாக, அமைதியாகக் கழிக்கவே முடியாது.


உன் வாழ்வில் நீ வெற்றி பெற்றவளாக/னாக இருக்க விரும்பினால் பயனற்ற சிந்தனைகளுக்கு எப்போதுமே இடம் தராதே!



நரகத்தில் கிடந்து உழல நினைப்பவளுக்குத்தான்/னுக்குத்தான் கடந்தகால கசப்புகள் அமிர்தமாக இருக்கும்.



‘இல்லவே இல்லை அது நஞ்சு, என்னில் கலந்து என்னைத் தினம் தினம் வதைத்து என் வாழ்வைப் பலி கொள்கிறது’

என்று, சத்தம் போட்டுக் கத்துபவர்களும், சத்தமே இல்லாது, கடந்த கால கசப்பு எனும் அமிர்தம் தரும் மயக்கத்தில் மூழ்கிக் கிடப்போரும், கணம் கணம் அழிவுப் பாதையில் செல்ல நினைப்பவர்கள்.



அதனால், துன்பம் தந்து உன்னை நிலைகுலைய வைக்கும் எந்த நினைவுக்கும் முக்கியத்துவம் தந்து பழகாதே!’
 
Top Bottom