You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

'உன் விருப்பம் என்ன?' உளம் சார்ந்த பகிர்வுகள் - கமெண்ட்ஸ்

Sugiy

Member
காதல் நிறைவேறவில்லை வேறொரு திருமணம் செய்கிறோம். அந்த கணவருடனான வாழ்க்கை அவ்வளவு சந்தோசமாக இருந்தால் அந்த மனிதரின் மீது நேசம் வந்து விடும். பழைய காதலனை குறித்து நினைப்போமா?

அம்மாவிடம் இருப்பது ஒரே பாயாச ரெசிப்பி தான். ஆனால் அம்மா பத்து வருசத்துக்கு முதல் செய்த பாயாசம் தான் இன்று செய்து கொடுத்ததை விட நினைவில் ருசிக்கும்.

நினைவுகள் அழகானவை. நிகழ்காலத்தில் நம் மனதில் திருப்தியின்மையும் கவலையும் இருக்கும் போது நான் என்னுடைய பழைய விருப்பங்கள் நிறைவேறியிருந்தால் என்று வருத்தமடைகிறோம். நான் விரும்பிய பாதையில் சென்ற என்னுடைய நண்பன் இப்போது ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கிறான் என்று கண்டால் அந்த fantasy தலை தெறித்து ஓடி விடும்.

பூமியில் நம் வாழ்க்கையே தக்கன பிழைத்தல் கொள்கைக்கு உட்பட்டது தான். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும். நம்முடைய ஒவ்வொரு முடிவுகளும் நமக்கு எது இலாபம் என்ற கணித்தல்களின் அடிப்படையில் வந்தவை தான். தியாகம் எல்லாம் அந்த கணித்தல்களுக்கு நாம் சூட்டிக்கொள்ளும் அழகான பெயர்கள். அதன் பின்னே ஒரு நமதோ அல்லது நம் அன்புடைய ஒருவரதோ அல்லது நம் சமூகத்தினதோ அல்லது பூமியினதோ இலாபம் இருக்கும். ஆக, கடந்த காலத்தை விட்டு விட்டு நிகழ்காலத்தில் எதை சிறப்பாக செய்யலாம் என்பது தான் என்னுடைய கொள்கை. கொள்கை என்று தான் சொன்னேன். அதை நான் கடைப்பிடிக்கிறேன் என்று அர்த்தமில்லை. :D

பல சமயங்களில் உணர்வு பூர்வமான மனம் பல சிக்கல்களை பூண்டு வைத்திருக்கும். அதை இப்படி தர்க்க ரீதியாக சமாதானம் செய்து விட முடியாது. ஆனால், எவ்வளவு அழுதாலும் கடைசியில் நிகழ்காலம் தான் முக்கியமானது, அது தான் எதிர்காலத்தை திறக்கும் சாவி என்பதை மனத்தில் வைத்திருந்தால் சரிதான். அதற்கு self love ரொம்ப முக்கியம். நம்மில் பலருக்கு அது தானே இல்லை.


வேலை செய்யும் இடத்தில் ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என் குடும்பத்தாரிடம் இருந்து என எல்லா நிலைகளிலும் என் விருப்பம் கேட்கப்படும். ஆனால் நானும் பலரிடம் கேட்டிருக்கிறேன். அவை ஏற்கப்பட்டும் இருக்கின்றன. மறுக்கப்பட்டு இல்லாவிட்டால் கேலி செய்யப்பட்டும் இருக்கின்றன. நான் அடுத்த தடவை கொஞ்சம் பெட்டராக விரும்ப கற்றுக்கொள்கிறேன்.

சிலரின் விருப்பங்களை கேட்டால் அதை எப்படி சிறப்பாக எடுத்து செல்ல முடியும் என்று சொல்லுவேன். விஷ் பண்ணுவேன். நலன் விரும்பியாக சப்போர்ட் செய்வேன். சில சமயம் என்னிடம் தங்கள் விருப்பங்களை சொல்லும் போது எனக்கு பகீரென்று இருக்கும். கண்ணைத்திறந்து கொண்டு குழியில் விழுகிறார்களே என்று! ஏனெனில் சில சமயங்களில் வாழ்க்கைக்கு வெளியில் நின்று பார்க்கும் பிறருக்கு தான் முழுமையான வடிவம் கிடைக்கும். உள்ளே இருந்து உழல்பவர்களுக்கு தெரிவதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில் நான் மெல்ல அவர்களை சிந்திக்க வைத்தும் வைத்திருக்கிறேன்.

இந்த இரண்டு விசயங்களையும் எனக்கும் பலர் செய்திருக்கிறார்கள். மாற்றிக்கொண்டிருக்கிறேன். சில சமயம் கேட்காமல் அடம்பிடித்து விரும்பியதையே செய்து பிறகு ஐயோ என்று வருந்தியிருக்கிறேன்.

ஆக, விருப்பங்கள் எனப்படும் கருதுகோள்கள் எப்போதும் சரியானவையாக இருக்க வேண்டியது இல்லை என்று திறந்த மனதோடு இருந்தால் இந்த விருப்பம் என்ற விசயத்துக்கு இவ்வளவு ஹெவி வெய்ட் கொடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

சில சமயங்களில் நம் விருப்பம் என்னவென்று நமக்கு சரியான தெளிவில்லை. நம்மிடம் விருப்பம் என்னவென்று கேட்டால். இங்கே இருக்கு ஆனால் இங்கே வரவில்லை என்று வாயை காண்பிப்பேன். அந்த மாதிரி சமயங்களில் நம் வாழ்க்கையில் நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணங்கள். யாராவது வழிகாட்டியிடம் மனம் திறந்து பேச முயல்வேன். எல்லோரும் அப்படித்தான் என்று நினைக்கிறன். கவுன்சிலரிடம் கூட போவோம்.

எல்லா விருப்பங்களையும் இந்த வரையறைகளுக்குள் அடைத்து விட முடியாது. சில நம்மை விடாமல் துரத்தும். அது இல்லாத என் வாழ்க்கை டல்லாக இருக்கிறது. அதை அடைந்தவனை பார்த்து பொறாமைப்படுகிறேன் என்றால் நானாக இருந்தால் காலம் கடந்தாலாவது அதை அடைந்து விடத்தான் முயல்வேன். அப்படியான விருப்பங்களை நம்மால் அடையாமல் இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்.

லேனா சொல்வார். அவசியம் ஏற்பட்டால் நாமும் கடலை குடிப்போம். அவசியம் தான் ஆற்றலை தருகிறது என்று. எல்லாவற்றையும் ரொமான்டிசைஸ் செய்து ஹெவி வெய்ட் கொடுப்பது அவசியமில்லாது. பல சமயங்களில் எல்லாம் தெரிந்திரிந்தும் நம் சொந்த வாழ்க்கை என்று வரும் போது கட்டிலுக்கு கீழே படுத்துக்கொண்டு அழுவது தான் இயற்கை!
அருமை உஷாந்தி ! சொல்வதற்கும், எழுதுவதற்கும் எவ்வளவு இலகுவாக இருக்கிறது. ஆனால் எமக்கென்று வரும்போது எவ்வளவு குழம்பித் தவிக்கிறோம். // ஆனால், எவ்வளவு அழுதாலும் கடைசியில் நிகழ்காலம் தான் முக்கியமானது, அது தான் எதிர்காலத்தை திறக்கும் சாவி என்பதை மனத்தில் வைத்திருந்தால் சரிதான். அதற்கு self love ரொம்ப முக்கியம். // எவ்வளவு உண்மையான வரிகள். முதலில் எம்மை நாமே காதலிப்போம் :love:
 

Sukinathan

Active member
நல்லதொரு கருவோடு களமிறங்கி இருக்கிறீர்கள். உண்மையில் அழகான சிந்தியல் தூண்டலுக்கான பகிர்வுக்களம்.

இது நாளாந்த நகர்வுகளில் இடறிச் செல்லும் வினா தான்.
ஆனால் அதற்கான விடை நிரப்பல் யார் வசம்?

“இது தான் என் விருப்பம்” என்ற பதிலுடன் நிமிர்ந்து நிற்க முடிகிறதா எம்மால்?

இந்த விடை தேடல்தானே எங்களை மனிதம் என்கிறது. என் விருப்பு எனக்குள்ளே புதைந்தது தெரிந்தவர்கள் எத்தனை பேர்?

இப்படியெல்லாம் இது சிந்திக்கத் தூண்டுகிறது.நல்லதொரு தேடல் தளம். வாழ்த்துக்கள் விடை தந்தோருக்கும் தருவோருக்கும்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
அருமை உஷாந்தி ! சொல்வதற்கும், எழுதுவதற்கும் எவ்வளவு இலகுவாக இருக்கிறது. ஆனால் எமக்கென்று வரும்போது எவ்வளவு குழம்பித் தவிக்கிறோம். // ஆனால், எவ்வளவு அழுதாலும் கடைசியில் நிகழ்காலம் தான் முக்கியமானது, அது தான் எதிர்காலத்தை திறக்கும் சாவி என்பதை மனத்தில் வைத்திருந்தால் சரிதான். அதற்கு self love ரொம்ப முக்கியம். // எவ்வளவு உண்மையான வரிகள். முதலில் எம்மை நாமே காதலிப்போம் :love:
அதுவே மிகத் தேவையானது சுகி .
 

ரோசி கஜன்

Administrator
Staff member
நல்லதொரு கருவோடு களமிறங்கி இருக்கிறீர்கள். உண்மையில் அழகான சிந்தியல் தூண்டலுக்கான பகிர்வுக்களம்.

இது நாளாந்த நகர்வுகளில் இடறிச் செல்லும் வினா தான்.
ஆனால் அதற்கான விடை நிரப்பல் யார் வசம்?

“இது தான் என் விருப்பம்” என்ற பதிலுடன் நிமிர்ந்து நிற்க முடிகிறதா எம்மால்?

இந்த விடை தேடல்தானே எங்களை மனிதம் என்கிறது. என் விருப்பு எனக்குள்ளே புதைந்தது தெரிந்தவர்கள் எத்தனை பேர்?

இப்படியெல்லாம் இது சிந்திக்கத் தூண்டுகிறது.நல்லதொரு தேடல் தளம். வாழ்த்துக்கள் விடை தந்தோருக்கும் தருவோருக்கும்.
உங்களை கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் சுகி
 

ரோசி கஜன்

Administrator
Staff member
* உன் விருப்பம் என்ன?...

* இக் கேள்வி மேலோட்டமாக பார்க்கும் போது சாதாரணமாக தோன்றும். ஆனால் அப்படியல்ல... ஒருவகையில் நம் உரிமையை நமக்கு வழங்கும் சந்தர்ப்பம் தான் இக்கேள்வி.

* என்னை நோக்கி வந்த இக்கேள்வி வெகு சொற்பம். என் ஒரு கை விரல்கள் கூட தேவைப்படவில்லை. நாம் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து ஒருபோதும் கேட்கப்படாத கேள்வி.. ஆனால் எதிர்பாராமல் நம் மழலையே நமக்கு அந்த வாய்ப்பை வாரி வழங்கும்..
* ஆனாலும் நம் எண்ணமும் சொல்லும் அரங்கேறுவதில்லை. நம் கடமையை நினைவுபடுத்துபவர்களுக்கு நம் உரிமை நினைவில் இருப்பதில்லை.

* எனக்கு குடும்பமும் சொந்தமும் முக்கியம். நான் சார்ந்தவர்களிடமும் என்னைச் சார்ந்தவர்களிடமும் இந்த வாய்ப்புகளை என்னால் முடிந்தவரை ஏற்ப்படுத்துகிறேன்.

* சிரிக்கும் முகங்களை பார்த்து சிரிப்பவள் நான்.. அதனால் முடிந்தவரை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கும் எண்ணம் கொண்டு செயல்படுகிறேன். அதில் குழந்தைகளுக்கு முதலிடம்..அதுதானே நம்மை உயிர்ப்புடன் வைக்கும் மந்திரம்.
உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டாலும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிவிடும் உங்கள் மனதுக்கு வாழ்த்துகள் சுபா .
 

ரோசி கஜன்

Administrator
Staff member
எல்லோருக்கும் வணக்கம்!

'உன் விருப்பம் என்ன?' பகுதியில் வெளியிடப்படும் பகிர்வுகளுக்கான உங்கள் கருத்துப்பகிர்வுகளை இத்திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.



 
Last edited:

Sukinathan

Active member
திவ்யா சிவக்குமார், தன் மனதில் தோன்றியதை நச்சென்று சொல்லியிருக்கிறார்.

ஆர்வத்தோடு உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி திவ்யா!



1.எந்த ஒரு உறவோ, நட்போ ஓர் இடத்தில் கை கோர்க்கும் போது பரஸ்பர புரிதலுக்கு இக்கேள்வி அவசியமே.

(தன்னை பற்றி/தான் மட்டுமே எடுக்க வேண்டிய முடிவுகளுக்கு இக்கேள்வி அவசியமற்றது)

2. ஆம். எதிர்கொண்டு உள்ளேன்.

தாய் வீட்டில் இருக்கும் போது,முக்கிய முடிவுகள் எடுக்கும் போது,ஏதேனும் பொருட்கள் வாங்கும் போதும் அம்மா அப்பா இருவரும் எங்கள் விருப்பு வெறுப்புகளை அறிந்தே செய்வர்.


3.சொல்ல முடிந்தது .பல நேரங்களில் வெற்றி பெற்றுள்ளன.


4.பள்ளி கல்லூரியில் பயிலும் போது குழுக்களாக இணைந்து செயல்படும் போது சக மாணவிகளிடம்,

குடும்ப சூழலில் எடுக்கும் முடிவுகள் கணவரிடம்.


5. என்னால் இயன்ற அளவு மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறேன்.
Short and sweet. But meaningful and Sensational words.
 

Sugiy

Member
3. உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்களின்றிச் சொல்ல முடிந்ததா? அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?

என்னால் என் மனதில் படுவதைச் சொல்லாமல் இருக்கவே முடியாது! ஆனால், எல்லாமே நிறைவேறுமா என்றால் இல்லைதான். அப்படி இல்லாத பட்சத்தில் எனக்கு அதற்கு முறையான விளக்கம் வேண்டும். அந்த விளக்கத்தை 'ஆமாம்! அது சரிதான்' என்று என் மனம் ஏற்கவேண்டும். அது தவிர்த்து, என் விருப்பத்தை நான் முக்கியமற்றதாக தூக்கிப்போட்டுவிட்டு போகிறேன் என்றால் அந்த விடயத்தின் மீது எனக்கு பெரிய ஆவல் இல்லை என்று பொருள்.

இதையும் தாண்டி என் விருப்பங்களை நான் சொல்லாமல் விடுகிற ஒருவர் என்றால் என் அம்மாதான். அதற்கு காரணமும் அதை நான் சொல்வதால் அவர் காயப்பட்டுவிடுவாரோ என்கிற ஒற்றை யோசனை மட்டுமே! அவரிடம் நான்தான் சமரசம் ஆவேன். ஏனோ, சின்னதாய் அவரின் மனதை சினுங்க வைக்கக்கூட என்னால் முடிவதில்லை. அப்பா, அவர் இருந்தவரை ஒரே ஒரு விடயத்தை தவிர எதற்கும் என்னை கட்டாயப்படுத்திய நினைவு இல்லை. அதனாலோ என்னவோ அவரின் விருப்பங்களை நானே கவனித்து நிறைவேற்ற ஆசைப்பட்டிருக்கிறேன்.


4. இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்.

5. உங்களை நாடிவந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?

இந்த இரண்டு கேள்விக்குமே பொதுவான பதில் தரலாம் என்று நினைக்கிறேன்.

அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அவர் விரும்பியதை செய்தும் கொடுத்திருக்கிறேன். சகோதரிகளின் குழந்தைகளுக்கும் அதே. சகோதரிகளிடம் கேட்கவே மாட்டேன். சண்டைக்கு வேண்டுமென்றால் நன்றாகப் போவேன்.

அப்பா; அவரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். எதையுமே வாய் திறந்து சொல்லவே மாட்டார். நானாகக் கவனித்து அவருக்குப் பிடித்தவற்றைச் செய்து கொடுத்திருக்கிறேன். 'நான் தான் ஒண்டும் வேண்டாம் எண்டு சொன்னனான் எல்லா பிள்ளை' என்று சொன்னாலும், மெல்லிய சந்தோசச் சிரிப்பில் சுருங்கும் அவரின் கண்ணோரத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகை.

என் கணவர், அவர் கேட்டால் தலைகீழாக நின்றேனும் செய்வேன். அப்படி அவர் கேட்பது மிக மிகக் குறைவு.

அடுத்து என் குழந்தைகள்: அவர்கள் என்ன கேட்டாலும் செய்துகொடுக்க விருப்பம். நியாயம் இல்லை, அல்லது அது அதிகம், இந்த வயதில் தேவை இல்லை என்றால் நிச்சயம் மறுத்துவிடுவேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அத்தியாவசியம் அல்லாத ஆனால் அவர்கள் விரும்புகிற ஒன்றாக இருந்தால், அதைச் செய்யலாம் பாதகமில்லை என்று உணர்ந்தால் நிச்சயம் அதற்கு ஒரு விலை வைப்பேன். கூடுதலாக நான் சொல்வது இன்ன பாடத்தில் நீங்கள் இன்ன மார்க்ஸ் எடுத்தால் அதை செய்து தருவேன் என்பது.

இவர்களை எல்லாம் தாண்டி நான் நேசிக்கும் மனிதர்கள். உண்மையிலேயே அந்தளவு மனதுக்கு நெருக்கமானவர்களாக யாரையுமே கொண்டுவரமாட்டேன். அப்படிக் கொண்டுவந்தால், அப்போதும் அவர்களிடம் கேட்டு ஒன்றைச் செய்ய நான் விரும்புவது குறைவு. அவர்களுக்கு என்ன விருப்பம் என்று அவர்களே அறியாமல் அறிந்து செய்வதில் ஒரு அலாதிப் பிரியம் உண்டு!
மொத்தத்தில் நம்மிடம் எதோ ஒருவகையில் பல ஒத்த இயல்புகளை, அக்கறைகளைக் காணமுடிகிறது நிதா. ஆரோக்கியமான கருத்தாடல்கள் தொடர வேண்டும். :love::love::love:
 

Sugiy

Member
எழுத்தாளர் யாழ் சத்யா ....
மண்டை காயவைத்தாலும் எளிமையான வகையில் உங்கள் மனதில் தோன்றியதை சொல்லியு்ளீர்கள்.

நன்றி யாழ் சத்யா!




விருப்பம்

இப்போது சில நாட்களாக என்னை சுற்றிச் சுழல விட்டு மண்டை காய வைத்துக் கொண்டிருக்கும் மிகச் சாதாரணமான சொல். சுகிர்தாக்காவின் கேள்வி இதுவரை எனக்குச் சரியாகப் புரிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்வேன். அதனால் தான் கேள்விகளைத் தவிர்த்துப் பொதுவாகப் பகிரலாம் என்று முடிவெடுத்தேன். அதிலேயே கேள்விகளுக்கான விடைகளும் அடங்கலாம் என்று எண்ணுகிறேன்.

முதலில் "விருப்பம்" என்பது என்ன? ஒரு பொருளோ செயலோ எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதுதானே.. அதை விரும்பும் பட்சத்தில் அதை அடைய முயல்கிறோம். அது நல்லதா, கெட்டதா, சரியோ, பிழையோ எல்லாமே விருப்பத்தின் முன்பு இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறது.

சிறு வயதில் என்னை எல்லோரும் அடம் பிடிப்பதாகச் சொல்வார்கள். விரும்பியவை சிலது தானாய் கிடைக்கும். அப்படிக் கிடைக்காதவற்றை பிடிவாதமாகப் பெற்றுக் கொள்ளப் பழகியிருந்தேன்.

வளர வளர மூளைக்கு நல்லது கெட்டது புரிய ஆரம்பிக்கவும் பெரியவர்கள் நமது நன்மைக்குத்தானே சொல்கிறார்கள் என்று முக்கியமான விடயங்களில் இந்தப் பிடிவாதம் பின்நின்று விருப்பத்தை மனசுக்குள்ளேயே பூட்டி வைத்தாயிற்று.

ஆனால் வயது கூடக் கூட அனுபவங்கள் தரும் வாழ்க்கைப் பாடத்தில் நான் புரிந்து கொண்ட ஒன்று எம் விருப்பங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவேற்றவில்லையோ எங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பது தான்.

அதாவது எங்கள் மனம் உவந்து தியாகம் புரிந்தால், அங்கே எமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். சிறு உதாரணமாக, எனக்கு கிறீம் பிஸ்கெட்டுகள் என்றால் சரியான விருப்பம் இப்பவும். ஆனால் இப்போது கிறீம் பிஸ்கெட்டுகள் வாங்கினால் உண்ண மனம் வராது. மகனுக்குப் பிடிக்குமே என்று ஒன்றைக் கூடச் சாப்பிட மாட்டேன் வீட்டில்.

காரணம் அது நானாய் மனமுவந்து என் பிள்ளையின் விருப்பத்துக்காய் என் விருப்பத்தைத் தியாகம் செய்வது. அது எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கிறது. அங்கே என் விருப்பம் அடிப்பட்டுப் போகிறது. அந்த விருப்பம் நிறைவேறாமல் போவதில் சுகம் மட்டுமே.

சில நேரங்களில் என் வாழ்க்கையில் நான் விரும்பி எடுக்கும் முடிவுகள் தவறாக அமைந்தாலும் கூட அதை முயன்று பார்த்த திருப்தி எனக்குக் கிடைக்கிறது. அனுபவம் போல சிறந்த ஆசான் ஏது?

மகன் இன்னமும் சிறு வயதுதான் என்பதால் அவருக்கு எது நன்று என நானே பார்த்துச் செய்கிறேன். ஆனாலும் ஒரு புதிய ஆடை அணிகையிலோ அல்லது புதிய விளையாட்டை விளையாடும் போது, "பிடிச்சிருக்கா?" என்று இயல்பாகவே கேட்டு விடுகிறேன். அவரும் தானாகவே தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறார். உதாரணமாக, "அம்மா! இண்டைக்கு கேக் செய்வம்.."

என்னிடம் என் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்றால் உடனே ஞாபகம் வருவது என்னுடைய ப்ரெஞ்ச் நண்பி ஒருவர் தான். பிரெஞ்ச்காரர் வழக்கப்படி பரிசை தருபவர் முன்பே பிரித்துப் பார்ப்பது வழக்கம். நான் உடனே பிரித்ததும் பத்துத் தடவையாவது கேட்டு விடுவாள். "பிடிச்சிருக்கா?" என்று. அதுபோல அவள் பரிசும் கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்ததாக மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

உதாரணமாக ஒரு தடவை எனக்கு A4 கலர்சீட் பெரிய பெட்டி ஒன்று தந்தாள். எனக்குக் கைவேலைகளில் ஆர்வம் அதிகம் என்று. இன்னொரு தரம் சிறு பிள்ளைகள் சமையல் செய்யக் கூடிய போல ரெசிப்பி புத்தகம். மகனோடு சேர்ந்து அதிலுள்ளது போல சமைப்பேன். இப்படிக் கரிசனையாகக் கிடைக்கும் பரிசுகளில் பார்த்த உடனேயே விருப்பம் வந்து விடுகின்றன. விலை உயர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருப்பதில்லை எனக்கு.

இதேபோல ஒருவரோடு நெருக்கமாகப் பழகும் போது எனக்கும் அவர்களது விருப்பங்கள் புரிகிறது. அதற்கு மதிப்பளித்தே பெரும்பாலும் நடந்திருக்கிறேன். உதாரணமாக தாய்லாந்து நண்பியோடு வெளியே உணவுண்ணச் சென்றால் அவளுக்கு எங்களது உணவுகளில் நாட்டம் அதிகம். அதனால் இந்தியன், ஸ்ரீலங்கன் ரெஸ்டோரண்ட்டுக்கே அழைத்துச் செல்வேன். என் விருப்பம் புரிந்து அவள் தங்கள் நாட்டு உணவுகள் சமைத்துத் தந்ததும் உண்டு.

ஒட்டு மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை, புரிந்துணர்வு உள்ள இடங்களில் பெரும்பாலும் வாய் விட்டு சொல்லாமலேயே விருப்பங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

யாரும் கேட்காவிட்டாலும் வாழ்க்கை சம்பந்தமான முடிவுகளில் வாய்விட்டு சொல்லியே தீர வேண்டும். அதன் பின்விளைவுகளையும் நாம் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நாம் எம் விருப்பத்தை நிறைவேற்ற முதல் தீர ஒன்றுக்கு நூறாய் சிந்தித்து முடிவெடுப்பது பின்னாளில் கவலைப்படாதிருக்க வழி வகுக்கும்.

ஆனால் நாம் விரும்பியதெல்லாம் கிடைத்து விட்டால் எம் வாழ்க்கையில் சுவாரஸ்யம் தான் ஏது?

எனக்கு ஏனோ இப்போது இந்தப் பாடல் தான் ஞாபகம் வருகிறது.

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை,
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை,
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே,
தொடர்ந்த கதை முடிந்ததில்லை
மனிதன் வீட்டினிலே,

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை...

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்,
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது,
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்,
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது,
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
இன்பம் ஏதுமில்லை,
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை....

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.....

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது,
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது,
பாதை எல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்,
மாருவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்......

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...."
சத்யா, வாழ்க்கை என் முன்னே நீண்டு கிடக்கிறது. அனுபவங்கள் எம்மை வழிநடத்தும் போது, எமக்கான விருப்புக்களை நிறைவேற்றிக்கொள்ளும் பக்குவமும், பிறரின் விருப்பை மதிக்கும் பண்பும் தானாக வந்துவிடும். இல்லையோ, நாம் எங்கோ தவறுகிறோம் என்பதால் எம்மை நாமே திருத்திக்கொள்வோம். :love::love::love:
 
Top Bottom