You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

'உன் விருப்பம் என்ன?' உளம் சார்ந்த பகிர்வுகள் - கமெண்ட்ஸ்

ரோசி கஜன்

Administrator
Staff member
எழுத்தாளர்களோடு மோத பயமாயிருக்கு
ஹா..ஹா... மோதுறது என்று முடிவெடுத்தா அது ஆரா இருந்தாலும் என்ன ? ஒண்டும் யோசியாமல் வாங்கோ.

இது எல்லாருக்குமான கேள்விகள் தான் .
 

ரோசி கஜன்

Administrator
Staff member
உங்கள் விருப்பம் என்ன?
——————————-
எனது பார்வையில்......

(பரீட்சை காலக் கேள்விகள் போல படித்ததில் இருந்து மட்டும் அடுத்த தடவை கருத்தாடல் வைக்கும் படி செந்தூரம் குழுவினரிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். )

1) இது பற்றி என் பொதுப்படை கருத்து......
(உன் விருப்பம் என்ன)

இக் கேள்விக்கு என் விருப்பம் பற்றி பகிரப் போனால் ..இறந்த என் அம்மாவும், அப்பாவும் திரும்ப வரவேணும் என்பதுதான்.

இது சிறு பிள்ளைத்தனமான பதில் தான், நப்பாசை தான் , அந்த “உளவியல்” இங்குதானே முளை கொள்கிறது. நிவர்த்தியும்..நிராகரிப்பும் இங்கு தானே தடுமாறுகிறது...

ஒரு தனிமனித விருப்பு வெறுப்புக்களை சுயாதினத்திலிருந்து பிரித்தறிந்து எழும் வினா இது. எனது ஆசை , விருப்பம் கேட்கப்படுகிறதென்றால் , கேட்பவரால் நான் மதிக்கப்படுகிறேன் என்று தானே அர்த்தம்.

இது நாகரீகமான உளவியல் ஒத்தடம் தான். எனது விருப்பம் என் தெரிவாக மட்டும் மதிக்கப் படும் வரை.

2). இக் கேள்வியை எதிர் கொண்டுள்ளீர்களா?
யார் மூலம்? எந்த சந்தர்ப்பத்தில்?

• ஓம் இக் கேள்வியை எதிர்கொண்டுள்ளேன்.
• நான் சந்தித்த நல் மனிதர்களிடமிருந்து.
• படிக்கும் போது...பாடத் தெரிவின் போது.
சாப்பிடும் போது..shopping செய்யும்
போது...திருமணத்தின் போது..(இது என்ர
Husby கேட்டது..ஹாஹாஹா) ...ஆனால்
நாம் வாழும் நாடுகளில் இந்தக்
கேள்வியுமன் தானே தினம்
பயணிக்கிறோம்.
3). உங்கள் விருப்பை சமரசங்களில் சொல்
முடிந்ததா?
ஓம் ,

•அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?
திருமணத்தின் முன் பல விருப்பங்கள்
நிறைவேறவில்லைத் தான்..ஆனால்
இப்போதெல்லாம் என் விருப்பங்கள் வெற்றி
மட்டுமல்ல நிறைவும் பெற்றிருக்கு.
(ஆனால் சாப்பாட்டில் மட்டும் என்
விருப்பம் உதறப்படுகிறது.,,காணும் எழும்பு
சொல்லினம்)
4). இக்கேள்வியை நீங்கள் யாரிடம்
கேட்டுள்ளீர்கள்? எச்சந்தர்ப்பத்தில்?

• என் கணவன், மகன், நண்பர்கள்,
பிறநபர்கள்.

• முக்கியமாக நளபாகத்தின் போது...பரிசுப்
பொருட்கள் அவர்களுக்காக தேர்வு செய்யும்
போது.அவர்களுடனானநேரப்பகிர்தல்.,,எனப்
பல விடயங்களில்...

5). உங்களை நாடி வந்த அவர்களின்
விருப்புக்கள் உரிய அங்கீகாரம்
பெற்றனவா?

இந்தக் கேள்விக்குப் பதில் எழுதி என்னை
முழுமைப் படுத்த முடியவில்லை...அவர்களது
பல விருப்புகள் என்னால் நிறைவேற்றப்பட்டது ..

ஆனால் சில ..என் தடைகளால் அங்கீகரிக்கப் படாமல்.,,படாது.,

அது..
ராட்சஷ ராட்டின ஏற்றம்..
அனாவசிய இலத்திரணியல் பொருட் கொள்வனவு.
ஆழ் கடல் நீச்சல்.
Not allowed to keep girlfriend ..,
வேக காரோட்டம்..,இப்படி சில..
——————————————-
நீங்கள்சொல்லியுள்ள விதம் சுவாரசியமாக இருந்தது சுகி .


இது நாகரீகமான உளவியல் ஒத்தடம் தான். எனது விருப்பம் என் தெரிவாக மட்டும் மதிக்கப் படும் வரை.
உண்மைதான் .

பகிர்வுக்கு நன்றி சுகி
 

Sukinathan

Active member
நீங்கள்சொல்லியுள்ள விதம் சுவாரசியமாக இருந்தது சுகி .


உண்மைதான் .

பகிர்வுக்கு நன்றி சுகி
ரோசி அக்கா நன்றி கருத்துக்கு. சும்மா எழுதிப் பார்த்தது.
 
Top Bottom