You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

'உஷ்... இது இரகசியமல்ல!' - உஷாந்தி கௌதமன் - இதழ் 6

ரோசி கஜன்

Administrator
Staff member
கடந்த மாதம் இந்தப் பகுதிக்கான உங்கள் கருத்துப்பதிவுகள் மிகவும் ஆர்வத்தைத் தூண்டி விட்டிருந்தன மக்களே. ஒருவர் 2 என்னும் இலக்கத்தை என்னைப்போலவே அடிக்கடிக் காண்பதாகக் கூறினீர்கள். ஒருவர், உருவம் அடிக்கடி வருவதாகச் சொன்னீர்கள், ஒருவர் இன்னும் ஒருபடி மேலே போய் சமயங்களில் தான் குந்தவைதேவியாக மாறிவிடுவதாகக் கூறியதும் நான் அதிர்ந்துவிட்டேன். ஜெய் சந்திரமுகி! ஹா ஹா நானெல்லாம் வெறும் ஜுஜுபி போலிருக்கிறது! மேல்மனதுக்குத் தெரியாமல் ஆழ்மனம் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் தானே இவையெல்லாம்!


சிக்மன்ட் ப்ராயிட் மேல்மனம், ஓரளவு உணர்வுள்ள மனம், உணர்வேயில்லாத மனம் என்று மனதை மூன்றாகப் பிரிப்பார். நாம் நம் வசதிக்கு இரண்டாக வைத்துக்கொள்ளலாம்

இந்த ஆழ்மனம் என்பது என்ன? அதில் என்னென்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்? அதற்கு எவ்வளவு தூரம் விஷயங்கள் தெரியும்? எனக்குத் தெரியாத விஷயங்கள் எத்தனை அதில் இருக்கும்? நான் அதனால் தான் செலுத்தப்படுகிறேனா? கடவுள் என்ற ஒருவிஷயம் உள்ளதா? நம் ஆழ்மனதோடு அவர் தொடர்பு கொள்வாரா? ஓராயிரம் கேள்விகள் மனதில் வந்தபடியே இருக்கும் எனக்கு.

1544813937430.png

நாம் அறிந்த மேல் மனம் என்பது கடலில் மிதக்கும் பனிப்பாறை ஒன்றின் நுனி போன்றதுதான். நாம் அறியாத ஆழ்மனம் கடலுக்குள் இருக்கும் பாறையின் பெரும்பகுதி போன்றது. சுழியோடிப்பார்த்து அடி நுனியை கண்டு பிடித்திருந்தால் நானும் ஒரு சித்தரோ யோகியாகவோ ஆயிருப்பேன். மீ பாவம், சாதாரண ஆர்வக்கோளாறு மனுஷி ஃப்ரம் மதர் பூமி!

இந்த ஆழ்மனம் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமா என்ன?

1. வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் உயிரைக்கொடுத்து போராடியிருப்போம்; ஆனால், காரியம் நடந்திருக்காது; குய்யோ முய்யோ என்று விதியையோ, என்றைக்கோ செத்துப்போனப் பாட்டி தாத்தாவையோ திட்டியிருப்போம். ஆனால், உண்மையான கல்ப்ரிட் இந்த ஆழ்மனம் தான். அதன் ப்ரோக்ராமில் இல்லாத விஷயத்தை ஈவிரக்கமே இல்லாமல் செல்லாது செல்லாது என்று தட்டி விட்டுவிடும். மேல்மனமோ பாவம் இல்லாத பாடுபட்டு போராடிப்பார்த்து ஆழ்மனம் ஒத்துழைக்காமையால் தோல்வியைத் தழுவியிருக்கும்.

2 எங்கேயோ, என்றைக்கோ, தெருவில் நான் ஒரு செக்கன்ட் சைட் அடித்த முகத்தைக் கொண்டு வந்து, கனவில் என்னைக் கடத்திப்போகும் தீவிரவாதிக்குப் பொருத்தி, நான் அவனிடம் இருந்து எப்படியோ தப்பி வரும் வழியில், கடந்த பார்ட்டில் மறைந்து போய்விட்ட அவெஞ்சர்ஸ் ஐ கண்டுபிடித்துத் தானோசை கொன்று இந்த பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் கனவை, வேலை மெனக்கெட்டுக் கற்பனை செய்து, கனவாக எனக்குள் கொண்டு வந்து, எழுந்ததுமே மறக்கவும் வைக்கும்! காரணம், இவர் தொடர்பு கொள்வது உருவங்கள், காட்சிகள், சிம்பல் வழியாகத்தானே? பகல் முழுதும் விழிப்பாக இருக்கும் மேல்மனம் வழியாக அந்த இரைச்சல்கள் கவனக் கலைப்பான்களைத் தாண்டி, ஆழ்மனத்தைச் சென்றடையும் தகவல்கள் பிய்த்துப்போட்ட புகைப்படத்தின் ஒரு துண்டு போலத்தான் இருக்கும். பகலின் அத்தனை அலைச்சலுக்குப் பின், மேல் மனம் இரவில் ஹாயாக குப்புறப்படுத்துத் தூங்கும் போது ஆழ்மனம் மட்டும் ‘தூங்க மாட்டேனே நான் தூங்கமாட்டேனே’ என்று பிடிவாதமாய் விழித்திருந்து தனக்கு வந்த தகவல்களை இஷ்டப்படி கோர்த்து என்னையும் கன்ஃபியூஸ் பண்ணிவிடும். அதைவிடக்கொடுமை அது உடனே மறந்தும் போய்விடும். அதன் பிறகு நாம் கிடந்து தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியது தான்!

கிடந்து தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியது தான்!

3. மூன்றாவது நமக்கென நிகழும் அமானுஷ்யங்கள் எல்லாவற்றுக்கும் பொறுப்பு இவர். இவர் ஒன்றை நம்பி விட்டால் போதும். அது நமக்கு நூறுவீதம் நிகழும். கண்கட்டி வித்தை காட்டும் நமக்கே நமக்கான மாஜிஷியன் இவர்.

இன்னும் எத்தனை எத்தனையோ!



அதெல்லாம் சரி, ஆழ்மனதை நாம் கட்டுப்படுத்தலாமா?

சாதாரண மனிதர்களாய் கண்டிப்பாக முடியும். ஜோசப் மேர்பி சொல்வார், “As you sow in your subconscious mind, so shall you reap in your body and environment.” என்று,

ஆம்! ஆழ்மனத்தில் நாம் என்ன விதைக்கிறோமோ அதையே உடலிலும் நம்மைச் சுற்றியுள்ள சூழலிலும் அறுவடை செய்கிறோம். என்னைப் பொறுத்தவரை உலகை ஆள்வது எண்ணங்கள் மட்டுமே! நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். ஒரு விஷயத்தை முயன்று கிடைக்கவில்லை என்றால் அந்த விஷயம் நமக்கு அவ்வளவு முக்கியமானதில்லை. ஆழ்மனதில் அதற்கான கட்டளை பதியப்படவில்லை! அவ்வளவு தான். சந்தர்ப்பங்களையும் மனிதர்களையும் குற்றம் சுமத்துவது நமது இயலாமையை மறைக்க நம்மைச் சமாதனப்படுத்தச் செய்யும் செயல்தான்.

ஆனால், அந்தக் கட்டளையைப் பதியவைப்பது எப்படி?

தியானம், மூச்சுப்பயிற்சி, வழிபாடுகளின் போது குறிப்பிட்ட ரிதத்துடனான முறைகள் இவையெல்லாம், மிஸ்டர் ஆழ்மனம் கதவைத்தட்டும் வழிமுறைகள் தானே? மெல்லத் தளர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி ஒரு லயத்துக்கு மனதைக் கொண்டு வந்து, அதன் பின் நாம் செய்யவேண்டிய கட்டளைகளை மனதுக்குக் கொடுக்கும் போது மனம் அதைத் தன்னுடைய வேலை ஆக்கி நம் உடலையும் மேல்மனதையும் இயக்கி அந்தச் செயலைச் செய்ய வைக்கிறது. நாமா? தியானமா? அதெல்லாம் செய்ய முடியாது என்று சிரிக்கிறீர்களா? மனதை ஒருமுகப்படுத்த, சம்மணமிட்டுத் தியானம் தான் செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? அதெல்லாம் இந்தப் புராணக்கதைச் சீரியல்கள் கொடுத்த பில்டப்!

இவற்றை மறுக்க முடியுமா உங்களுக்கு?

விறகு வெட்டும் ஒருவன் நேரம் செல்ல செல்ல ஒரு லயத்துக்கு வந்திருப்பான். மெல்ல மெல்ல அவனுக்குப் புறச்சூழல் மறந்து அந்த மரம் பிளக்கும் ‘களக்’ சத்தத்தையும் அந்த லயத்துக்கேற்ற உடலின் அசைவையும் மட்டுமே மனம்


தொடரும். தியானத்தின் முடிவிலும் இதுதானே நிகழ்கிறது?

ஒரு படத்தை லயித்து வரைகிறீர்கள், இறுதிக்கட்டத்தில் அதைத் தவிர வேறேதும் நினைவில்லாமல் அந்த காட்சிக்குள் மூழ்கியிருப்பீர்கள். அப்போது மனம் ஒருமுகப்படுவதில்லையா?

இதே போலத்தான் மலையேறும் போது…

நீச்சலின் போது…

எந்தக் காரியத்தைப் புறச்சூழலின் கவனமற்று, மனமொருமித்துச் செய்கிறோமோ அப்போதெல்லாம் மனம் தியான மோடுக்குப் போய் ஆழ்மனம் அக்டிவேட் ஆகும். அந்த நேரத்தில் நாம் நினைக்கும் நினைவுகள் நம்மை அறியாமலே மனதில் படிந்து நம்மை இயக்கும்.

இதற்காக ஒவ்வொருவரும் நமக்கே நமக்கான வழிமுறைகளை நிச்சயம் வைத்திருப்போம். இதற்காகத்தான் செய்கிறோம் என்று நமக்கு பலவேளைகளில் தோன்றியிராது. உதாரணமாகச் சிலர் மனதில் குழப்பம் வந்தால் தனிமையில் நடக்கச் சென்று விடுவார்கள்.

சூழலின் அமைதி, நடத்தல் உடலுக்குக் கொடுக்கும் ரிதம், சிந்தனை மூலம் புற உலகத் தொடர்புகளை வெட்டி நம் மனதுக்கு முழு அட்டென்ஷன் கிடைத்தல் போன்ற காரணங்களினால் அமைதி ஏற்பட்டு அவர்களால் தெளிவாகச் சிந்திக்க முடியும். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் செய்வோம் என்றில்லை.

குழப்பம் வந்தால் தான் இதையெல்லாம் செய்யவேண்டுமா? இல்லையே, சின்ன சின்ன முயற்சிகள் மூலம் உங்களை ஒழுங்கமைத்துக் குழப்பங்களே வராமலே தடுக்க முடியுமே…!

பெரும்பாலும், அதிகாலைச் சந்தடியில்லாத நேரம், எழுந்ததும் கட்டிலில் அமர்ந்தபடி உங்களுக்குப் பிடித்த ஒரு விடயத்தைக் கற்பனை செய்யுங்கள்.

உதாரணமாய், கடற்கரையை நெருங்கி மணலில் கால்கள் புதைத்து நடக்கிறீர்கள் என்று கற்பனை செய்கிறீர்கள் என்றால்..

மணலில் கால் புதைவது

மணல் துகள்களின் மெல்லிய கீறல்

பாதங்களில் இடர்படும் சோகிகள்

அத்தனையையும் மனக்கண்ணில் கொண்டு வர வேண்டும்.

சற்றுநேரத்தில் மனம் உங்களை அறியாமலேயே ஒருமுகப்பட்டு நீங்கள் கடற்கரைக்கே போன உணர்வு வரும். பிறகு அன்றைய நாளில் நீங்கள் செய்ய வேண்டியதைத் திட்டமிடலாம். அதைச் செய்து முடித்தால் என்ன லாபம் என்று

எண்ணிப்பார்க்கலாம். அது அன்றைய நாள் முழுவதும் உங்களை இயக்கி, செய்து முடிக்கும்.

யார் யாருக்கோ எவ்வளவோ மணிநேரங்களை ஒதுக்கும் நமக்கு, நமக்காக ஒரு பத்து நிமிடங்களைச் செலவு செய்வது கஷ்டமா என்ன?

நெகட்டிவ் எண்ணங்களை உங்கள் மனத்தை விட்டு துரத்தியடியுங்கள். ஏனெனில், ஆழ்மனம் எப்போது விழிக்கும் எப்போது தூங்கும் என்று உங்களுக்குத் தெரியாது. அது அந்த நெகட்டிவ் எண்ணத்தைப் பிடித்துக்கொண்டால் அவ்வளவுதான் போச்சு, அந்தக் காரியம் கதம் கதம். ஆகவே, முன்னெச்சரிக்கையாகப் பாசிட்டிவாகவே சிந்திப்போம். அது, அதைப்பிடித்துக்கொண்டு நம்மை வெற்றியை நோக்கி உந்தித்தள்ளட்டும்.

எனக்கு நீண்ட பயணங்கள் பெரும்பாலும் ஆழ்மனதை ஆக்டிவேட் செய்யும் நேரங்களே! நீண்ட நெடிய கரிய பாதைகளின் வளைவுகள் என்னை அமைதிப்படுத்தும். அந்தப் பயணத்தையொட்டிய காலத்துக்கான திட்டங்களை நான் அப்போது மனதில் செய்து முடிப்பேன். இயற்கை, தனிமை எல்லாமே என்னையும் ஆழ்மனதையும் இணைக்கும் பாலங்கள் தான். உங்களுக்கு எப்படி? நீங்கள் இந்த ஆழ்மனதைக் எப்படிக் கையாள்வீர்கள்?




1544814523730.png



1544814572086.png
 
Top Bottom