• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எண்களைக் குறிக்கும் சொற்கள் காட்டும் மொழியின் தொன்மை - இதழ் 7

ரோசி கஜன்

Administrator
Staff member
7,8 இற்கு அடுத்தது ஏன் ஒன்பது (ஏன் ஒன்பு /ஒண்பு என இல்லை?)

70,80 இற்கு அடுத்தது ஏன் தொண்ணூறு (ஏன் ஒன்பது இல்லை?)

700, 800 இற்கு அடுத்தது ஏன் தொள்ளாயிரம் (ஏன் தொண்ணூறு இல்லை?)



இந்தக் குழப்பம் பலரிற்கும் இருந்திருக்கும். எழுபது,எண்பது அடுத்தது ஒன்பது என்ற சொல்தானே பொருத்தம் என சிறுவயதில் யோசித்திருப்போம். இந்தக் கேள்விக்கு விகடனில் KRS என்பவர் ரோமன் இலக்கத்துடன் தொடர்புபடுத்தி விளக்கியிருந்தார். அதாவது vii,viii இற்கு அடுத்தது ix (viiii அல்ல) . LXX, LXXX அடுத்தது XC { LXXXX அல்ல} . இதுவே தமிழிற்கும் அடிப்படை என்று கூறியிருந்தார்.



இதனைச் சற்றே விரிவாக சிந்தித்துப் பார்ப்போம். நாம் இப்போது பயன்படுத்துகின்ற எண்கள் (அரேபிய எண்கள்) ஆன 1,2,3.... என்பவை பொது ஆண்டு 5ம் நூற்றாண்டைச் (CE 5th cent) சேர்ந்தவை. உரோமன் எண்களோ பொது ஆண்டிற்கு முற்பட்ட (BCE) உரோம பேரரசுக் காலத்தைச் சேர்ந்தவை. எனவே, ஒரு மொழியின் தொன்மையினை அறிய அந்த எண்கள் சொற்களில் உரோமன் நடைமுறையினைப் பின்பற்றியுள்ளதா எனப் பார்க்கவேண்டும். ஆம், எனில் அது தொன்மையான மொழி எனத் துணியலாம்.



இப்போது ஆங்கிலத்தை எடுப்போம்-

. -Seven , Eight, next Nine .

. -Seventy, Eighty, next Ninety

இங்கு உரோமன் முறை பொருந்துகின்றதா? இல்லை. சிக்கல் இல்லை, ஏனெனில் ஆங்கிலேயர் தமது மொழியினை தொன்மையானது எனக் கூறியதேயில்லை.



அடுத்து சமற்கிரதத்தினை (தெய்வ பாசை) எடுப்போம்.

9= நவம் 10= தசம்

90= நவதி 100= சதம்

900= நவசதம் 1000= சகஸ்ரம்

உரோமன் எண் முறை பொருந்துகின்றதா? இல்லை. அவ்வளவுதான் சமற்கிரதத்தின் தொன்மை.



✌இப்போது தமிழினைப் பார்ப்போம்.



ஏழு, எட்டு அடுத்தது ஒன்பது (IX)

எழுபது,எண்பது அடுத்தது தொண்ணூறு(XC)

அச்சொட்டாகப் பொருந்துகின்றதா? ஆம். தமிழ் தொன்மையானது.



இதனையே தொல்காப்பியம் “ `தொண்`டு தலையிட்ட பத்துக்குறை” என்கின்றது . படம் காண்க. { தொள் என்ற தொல்காப்பியச் சொல்லே இன்று ஒன்பது எனப்படுகின்றது. தொள்- தொண்டு- தொன்பது-ஒன்பது}. [தொண்டு (9) என்ற சொல்லினை பரிபாடலில் “பாழ் என, கால் என, பாகு என,… தொண்டு..” என்று வருகிறது.



சரி, உரோமன் எண்கள் பழமையானவை என மேலே பார்த்தோம். அதிலுள்ள ஒரே குறை என்னவென்றால் சுழியம் (0) என்ற ஒரு எண் அங்கில்லை ( `Nulla ` என்ற சொல் ஒன்றுமில்லை என்ற கருத்தில் அங்குள்ளபோதும், அது வரிசையாக ஒரு எண்ணாக அங்கு பயன்படுத்தப்படவில்லை). ஆனால் தமிழில் அந்த குறையுமில்லை, ஏனெனில் எமக்குத்தான் பாழ் (0) என்ற எண் உண்டே (“பாழ் என, கால் என, பாகு என..”: பரிபாடல்) .



பார்த்தீரகளா! எமக்குச் சிறு வயதில் சிறு குழப்பம் தந்த ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் ஆகிய எண்களைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் இப்போது எமக்கு எவ்வளவு பெருமையினைத் தந்துள்ளது என!



நன்றி : திரு வி. இ. குகநாதன்
 
Top Bottom