You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே

நிதனிபிரபு

Administrator
Staff member
கதை : ஏனோ மனம் தள்ளாடுதே....
ஆசிரியர் : நிதனி பிரபு
மிக மிக
அருமையான

சுவாரசியமான ஆன்டி ஹீரோ காதல் கதை.
முதல் விஷயம் இலங்கை தமிழ் நடையில் படித்தது மிகவும் வித்தியாசமான அனுபவத்தை தந்தது. கதைகளமும் அதை கையாண்ட விதமும் அழகு. முற்பாதி நாயகி பிரமிளாவுக்காக துடித்த மனம் பிற்பாதி நாயகன் கௌசிகனுக்காக துடித்தது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பு. ரஜிவன் - யாழினி காதல் கவிதை. தீபன்- தீபா காதல் முதிர்ச்சி.
மோகனனின் செயல் கடைசியில் எத்தனை பெரிய கோரத்தை நிகழ்த்திவிட்டது. பிள்ளைகளை வளர்க்கும் போதே கவனமாக வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்த கதை ஒரு சான்று.
படிக்காதவர்கள் தவறாமல் படியுங்கள் சகிஸ்..... லிங்க் இன்னும் சில நாட்கள் தான் இருக்குமாம்.
அருமையான

கதை....
வாழ்த்துக்கள்

நிதனி பிரபு சகி.....


- பர்வீன்.மை
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Sel Rag




ஏனோ மனம் தள்ளாடுதே - நிதனி பிரபு
ஆதிக்க குணம் நிரம்பிய நாயகன்..நேர்மைக்காக தன் கடமைக்காக எதை வேண்டும் என்றாலும் செய்யும் நாயகி..இருவரும் முட்டிக் கொள்கிறார்கள்..மணமும் முடிக்கிறார்கள்..அதன் பின்? அது தான் கதை..
சற்றே பெரிய கதை..சலிப்பில்லாது படிக்க உதவும் நாயகன்-நாயகி குண நலன்கள். இவள் இறங்கி வந்தால், அவன் சீண்டுவான்..அவள் கோபம் கொண்டால் அப்போதும் அவளைச் சீண்டுவான்..அவள் அடிப்பாள்.. முறைப்பாள் என்று இவர்கள் காதல் வெளிப்படும் இடங்கள் மெல்லிய மின்னல் கீற்று..
ஆனால் பல இடங்களில் நாயகி கை ஓங்கும்.அவளது உணர்வுகளின் வெளிப்பாடு இங்கே அதிகம்..அங்கே நாயகன் அவன் ஆதிக்க குணத்தை ஏனோ முற்றிலும் துறந்து விடுகிறான்..அது போல் அவள் காதல் எவ்வித குழப்பம் இல்லாது சித்தரிக்கப்பட்டு இருந்தாலும்..அங்கே அவளுக்கு குழப்பங்கள் ஏற்பட்டு காதல் அரும்பிருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது..
துணை கதாபாத்திரங்கள் கையாண்ட விதம் அருமை.. தேவையான நேரங்களில் சரியான பேச்சுக்கள் என்று 50 அத்யாயங்கள் கொண்டாலும் கதையின் ஓட்டம் சீராக உள்ளது
மோஹனன் மட்டும் கடைசியில் தனித்து என்ன ஆனான் என்று தெரியவில்லை.. தனி முடிவுரை இல்லாவிட்டாலும் நாயகன்-நாயகி சீரும் சிறப்பாக வாழ்வார்கள் என்று உணர்த்தி இருக்கிறார் ஆசிரியர்.
ஒரு நல்ல கதை தொடர்ந்து.. இடைவெளி விடாது படிக்கத் தூண்டிய நடை..முக்கியமா இலங்கைக்கு teleport ஆகி விட்டது போன்ற சிலோன் தமிழ்..(சொறி மற்றும் சேர் படிக்கையில் அது சாரி மற்றும் சர் என்று உணர நேரம் பிடித்தது..)மொத்தத்தில் நெடுநாள் கழித்த உணர்வு போராட்ட கதை
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Zeenath Sabeeha



நிதனி பிரபு சிஸ்டர் எழுதிய "ஏனோ மனம் தள்ளாடுதே"
தன் எழுத்தால் நம் மனதையும் தள்ளாட வைக்கிறார் ஆசிரியர்
கௌசிகன்... ஆன்ட்டி ஹீரோ போன்று இவன் திமிரும் தலைக்கனமும் அடாவடியும் செருக்கும் தான் நினைப்பதை மட்டுமே சாதிக்கும் அந்த அழுத்தமும்...பின்பு போன இடம் தெரியவில்லை... தன் மனைவியின் மீது இவன் கொண்டுள்ள அன்பும் காதலும் பாசமும் அதை சொல்ல முடியாமல் இவன் திணறுவதும் தன் மகளை நினைத்து இவனின் தவிப்பும் நம்மையும் கலந்த செய்கிறது
பிரமிளா... தைரியமான போராட்ட குணம் கொண்ட எளியவர்க்கு உதவும் எண்ணமும் அன்பும் பாசமும் கொண்ட ஒரு
அருமையான

பெண்... இவளின் தைரியமே இவளின் அழகு... இவளின் எதிர்த்து நிற்கும் குணமே கௌசிகனை இவள் முன் மண்டியிடச் செய்கிறது... தான் அன்பு வைத்திருப்பவர் களுக்காக தன் வாழ்க்கையை பணயம் வைக்க துணிகிறாள் இவள்.. தன் அன்பாலும் கோபத்தாலும் தன்னவனை மாற்றி இவளும் அவன் இல்லாமல் தான் இல்லை என்பதை உணர்ந்து அவனோடு இணைவதே கதை..
?
பிரதீபா.... தன் தமக்கையின் மேல் அதிக பாசம் கொண்டிருக்கும் இவள் அவளுக்காக சீரும் இடங்கள் அனைத்தும் அருமை கௌசிகனை கேள்வி கேட்பதும் அவளின் பக்கமுள்ள நியாயங்களை எடுத்துரைப்பதும் அவளின் ஒரு இக்கட்டான நிலைமையில் அதனை புத்திக்கூர்மையோடு கையாண்ட விதமும் அருமை
?

செல்வராணி ஒரு பாவப்பட்ட பெண்மணி... இவருக்கான நியாயங்களை இன்னும் கொஞ்சம் பெற்றுக் கொடுத்திருக்கலாம்
?

யாழினி... தந்தை தமயன்களின் மேல் பயம் இருந்தாலும் தனக்கான விருப்பத்தை தைரியமாகவே தெரிய படுத்துகிறாள்
?

ரஜீவன் மற்றும் தீபன் பிரமிளாவின் மேல் அதிக பாசம் கொண்டுள்ள
அருமையான

கதாபாத்திரங்கள்
?

தனபாலசிங்கம் மென்மையானவர் தன் பெண் பிள்ளைகளை தைரியமாகவும் நியாயவாதிகளாகவும் வளர்த்திருக்கும் இவர்...அவரின் பள்ளியின் மேல் கொண்டுள்ள காதலும் அங்கு படிக்கும் பிள்ளைகளின் மேல் இவர் கொண்டுள்ள அக்கறையும் அருமை
?

ஒரு பள்ளியில் ஆக்கிரமிப்பில் போராட்டத்தில் தொடங்கும் கதை விறுவிறுப்பாகவும் நெகிழ்வாகவும் வலியுடனும் பயணித்து
அருமையாக

முடிந்திருக்கிறது
?
?
?

Good luck dear
?
?
❤️

Keep rocking
?
?
?

உங்களின் இலங்கை தமிழ் அவ்வளவு அழகு
❤️
?
உங்களின் அனைத்து கதைகளிலும் இந்த தமிழில் படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்
?

⚡
SORRY லிங்க் கேட்காதீர்கள் பிரண்ட்ஸ்
⭐
லிங்க் நீக்கப்பட்டுவிட்டது... அமேசானில் விரைவில் ஃப்ரீ கொடுப்பதாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்... காத்திருப்போம்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
சித்ரா வெங்கடேசன்


#கதை_ரிவ்யூ
ஏனோ மனம் தள்ளாடுதே - நிதனிபிரபு
பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராடும் பிரமிளா, அதற்காக கௌசிகனை எதிர்க்க வேண்டி வர, பின் ஒரு கட்டாயத்தின் பேரில் அவனை திருமணம் செய்யும் சூழல் வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதி கதை. கதைக்களம் சுவாரசியமாகவே நகருகிறது.
கௌசிகனை முழுதாக ஆன்டி ஹீரோ என்று சொல்ல முடியாது. அதேசமயம் அவன் செய்தவகளை நியாயப்படுத்தவும் முடியாது. ஆனா அவன் பிரமிளாக்காக தன்னை நிறைய விஷயங்கள் மாற்றிக் கொண்டதும், அதேசமயம் முழுசா மாறினா அது செயற்கையா இருக்கும் என்று சொல்வதும் இயல்பு.
பிரமிளா கடைசி வரை தைரியமும் உறுதியுமாக இருந்தாலும் சில பிரச்சனைகளில் முந்திரி கொட்டையா போய் முன்னால் நிற்கிறாளோ என்றும் தோன்றியது.
மிரட்டலால் அடிபணிய வைக்கலாம், அன்பை பெற முடியாது என்பதை பிரமிளா மூலம் புரிந்துக் கொண்ட கௌசிகன், அவளின் அன்பை பெறுவதில் வெற்றியடைகிறான். கதை நான் கிண்டிலில் தான் படித்தேன். சைட் லிங்க் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
saran saru

கதையின் முதல் அத்தியாயத்தில் தொடங்கும் போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது போல் பரபரப்பாக நகர்ந்தது கதை. ஒரு முறைகேடான செயலை செய்யும் பள்ளி நிர்வாகம். அதற்கான நேர்மையான போராட்டம், ஒரு போராட்டத்தை நேரில் கண்டதை போல் காட்சிகள் விரிந்தன எழுத்தாளரின் எழுத்துநடையில்.
பிரமிளா - பிரமிப்பான பெண்தான். அவளது கொள்கை, நீதி, நேர்மை எல்லாம் பார்ப்பதென்பது அரிதான ஒன்று, தனக்கு நடந்துவிட்ட அநியாயங்கள், அவமானங்களோடு, உடல் முறைகேடு என பல மன உளைச்சல்களுக்கு ஆளான போதும் நிமிர்ந்து நின்றதும், அதை அவள் எதிர்கொள்வதும் பலருக்கு தேவையான ஒரு தெளிவுரை.
கௌசிகன் - சாணக்கிய தந்திரத்தை மட்டுமே பின்பற்றி அதிக செருக்குடன் தொழில் நடத்தும் ஒரு மூர்க்கன். Corporate Criminal என்று சொல்லலாம். ஆனால் கதையில் அவன் தரப்பில் சொல்லப்படும் நியாயங்கள் கூட பிரமிளா வழியே சொல்லப்படுகின்றது, அப்படி ஒரு அழுத்தக்காரன் என நினைக்கின்றேன்.
தனபாலசிங்கம் - முதல் அத்தியாயத்திலேயே இவருக்கு நடந்த அநியாயங்களும், இவரின் உணர்ச்சி போராட்டமும் கண்களில் நீர்படலத்தை ஏற்படுத்தியது. மிகுந்த பொறுமையும், அமைதியும் கொண்ட உதாரண புருஷர்.
செல்வராணி - இவரின் உணர்வுகள் அடக்கப்படும் ஒவ்வொரு காட்சியும் மனதை யாரோ கசக்கி எறிவது போன்று ஒரு உணர்வு. சுற்றி இருப்பவர்களுக்கு நடுவில் நின்றுக் கொண்டு எல்லோரின் திசை நோக்கி இரண்டடி எடுத்து வைப்பதும் பின் திசை மாறுவதும் என அல்லாடுபவரின் நிலை அப்படி ஒரு பரிதாபத்தை கொடுத்தது. கதையின் இறுதி அத்தியாயம் வரை இவரிடம் அன்பும், பரிவுமாக பேச ஒரு ஆள் வராதா என ஏங்க வைத்தது.
மோகனன் - ஆண் செருக்கை பார்த்து வளர்ந்ததாலும், அதிக செல்வத்தினால் கொண்ட கர்வமும், கௌசிக், பிரமிளா உறவை பறித்து, இன்னும் சில அப்பாவிகள் தீபா, தீபன், ரஜீவன், யாழினி, சரிதாவும் பாதிக்கபடுவது வேதனையையே கொடுத்தது.
பள்ளிப் போராட்டத்தில் கௌசிகன் செய்த அநீதிக்கா? இல்லை அவன் செய்த வேறு பல பாவத்திற்க்கா?
பாவம் செய்தவருக்கும், செய்யப்பட்டவருக்குமென தண்டனை கௌசிகனுடன் சேர்ந்து பிரமிளாவிற்கும் கிடைத்தது தாங்கிக்கொள்ள முடியாத வலியை கொடுத்தது. கதைதானே அக்கொடுமையை தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணம் இல்லாமல் இல்லை.
கற்பித்தலின் நோக்கத்தை, சேவையை உணரமுடிந்த கதை.
 
Top Bottom