You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஒரு என்ற சொல்லும், ஓர் என்ற சொல்லும் ஒரே பொருளுடையதா?

நிதனிபிரபு

Administrator
Staff member
ஒரு என்ற சொல்லும், ஓர் என்ற சொல்லும் ஒரே பொருளுடையதா?

ஒன்று என்பது எண்ணுப்பெயர் அடையாய் ஒரு என்று மாறி வரும்.

உயிரெழுத்துக்குமுன் ஒரு - ஓர் என்று மாறி வரும்.

ஓர் + இரவு = ஓரிரவு
ஒரு + வகை = ஒருவகை

உயிர் எழுத்து வந்தால் ஒரு - ஓர் என்றே மாறிவிடும். மாற வேண்டும்.
ஆனாலும், பேச்சு வழக்கில் ஒரு ஊர் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது.

ஒரு - ஓர் என்று மாற வேண்டும் என்கிற விதி இருக்கிறது. ஆனால்,
ஓர் என்பது உயிரெழுத்து வந்தால் மட்டுமே வர வேண்டும் என்கிற விதி எதுவும் சொல்லப்படவில்லை.

ஓர் என்பதை உயிர்மெய் எழுத்துக்கும் முன்னும் பயன்படுத்தலாம்.

ஓர் யான் மன்ற துஞ்சா தேனே (குறுந்தொகை 6)

நோதக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் (கலித்தொகை 51)

பழைய தமிழ் நூல்களில் ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகளைப் பார்க்க முடியும்.

முடிவுகள்

  1. உயிரெழுத்து வந்தால் ஒரு - ஓர் என்று மாறும்.
  2. ஒரு - உயிர் மெய் எழுத்துக்கு முன் வரும்.
  3. ஓர் - உயிர் எழுத்தின் முன் வரும். உயிர்மெய் எழுத்தின் முன்னும் வரும்.
  4. ஓர் என்பது உயிர்மெய் எழுத்தின் முன் வரக்கூடாது என்கிற விதி எதுவும் இல்லை.

இணையத்தில் இருந்து பெற்றது
 
Top Bottom