You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கச்சிதமா காரியத்தை முடிப்போம் வாங்க

நிதனிபிரபு

Administrator
Staff member
என்னடா தலைப்பு இது என்று யோசிக்க வேண்டாம். சமையலை கச்சிதமா முடிக்கிறது எப்படி என்று எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லப்போறேன். அவ்வளவுதான்.

முதல் மரக்கறிகள் வெங்காயம் பச்சை மிளகாய் எது என்றாலுமே, எடுக்க முதல் இன்றைக்கு என்ன சமைக்கப்போறேன் என்று பிரிட்ஜை திறந்துவச்சு யோசிச்சு முடிவு செய்திடுவேன்.

அப்படியே ஒரு பாத்திரம் வச்சிருக்கிறன்.(மைக்ரோ வேவ் அவனுக்கு எதையாவது வச்சு சூடாக்கும்போது மூடுவோம் ஒரு மூடி. அதுதான் நான் இதுக்கு பாவிக்கிறது. ஹேஹே) அதுக்குள்ளே தேவையான வெங்காயம் பச்சை மிளகாய் உள்ளி இஞ்சி சமைக்கப்போற மரக்கறி தக்காளிப்பழம் தேவையா அது உருளைக்கிழங்கு என்று எல்லாமே அதுக்குள்ளே எடுத்து வச்சிடுவேன். அதே மாதிரி இன்னொரு பாத்திரத்தில் தண்ணி எடுத்து வச்சு இதுல தோள் உரிப்பதை அந்த தண்ணியில் போட்டுக் கழுவி அப்படியே வெட்டி எடுத்தும் வச்சிடுவேன்.

இதுல ஒரு குட்டி ஈஸி வே ஒன்று என்ன என்றால், முதலில் வெங்காயம் பச்சை மிளகாய் உள்ளி எல்லாம் ஒரு பிளேட்டில் வெட்டி வைத்துக்கொண்டு, அடுப்பில் ஒரு கறிக்கு தாளிக்க வெங்காயத்தை போட்டுவிட்டு அது வதங்கும் நேரத்தில அதுக்கான மரக்கறியை வெட்டினால் அது முடிந்தபோது வெட்டும் வேலையும் முடிந்திருக்கும்.

அதேமாதிரி உரிக்கும் தோள்களை அந்த 'மைக்ரோ வேவ் அவன்' பாத்திரம் இருக்கே அதற்குள் தான் போடுவேன். வேறு எங்கு ஒரு துண்டு இருப்பதும் பிடிப்பதில்லை. அப்படியே அவற்றை கழுவுவதும், ஒரே தண்ணீர் பாத்திரத்தில் தான். (மரக்கறிகளை எடுத்து வைக்கும்போதே நமக்கு விளங்கிவிடும் எப்படியான பாத்திரத்தில் நீர் எடுக்கவேண்டும் என்று. அதற்கு ஏற்றார் போன்று பாத்திரம் குட்டியாகவோ பெரிதாகவோ முடிவு செய்துகொள்ளலாம்.)

இதற்குமேல் முடியாது புது நீர் மாற்றவேண்டும் என்றால் மாற்றிக்கொள்வேன். அப்படிச் செய்கையில் நீரும் மிச்சம், வேலையும் துப்பரவாக நடக்கும், கூடவே ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறையும் சிங்கிள் வைத்துக் கழுவுகையில் நீர் சிந்தித் தரையோ சமைக்கும் இடமோ குப்பையாக்குவதை தடுக்கலாம். (கடைசியாக சமையலறை கிளீன் செய்கிறபோது நமக்குத்தான் இலகுவாக இருக்கும்.)

எல்லாவற்றையும் வெட்டி முடித்து இனி வெட்டுவதற்கு ஒன்றுமில்லை என்றபிறகுதான் அந்த மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தை குப்பை வாளிக்குள் குப்பைகளைக் கொட்டிவிட்டுக் கழுவுவேன்.

தட்ஸ் இட்! காரியம் கச்சிதமா முடிஞ்சுது!

நீங்களும் நீங்க நீங்க பயன்படுத்தும் குட்டிக் குட்டி ஐடியாக்களைப் பகிர்ந்துகொள்ளலாம். எல்லோருக்குமே உதவும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
thank u for your tips Akka..... Nan fridge open panni yosikkkkkkum pothu hus thaliala oru Kuttu potty door close seithuttu poiduvar...... Avlo neram yosippenkka.....

ஹாஹா... நானும் என்னவோ சீரியஸா பதில் சொல்லப்போறீங்க என்று கவனிச்சு வாசிச்சேன் மா.. சிரிப்பை அடக்க முடியலை..
 

Nandhunalin

Active member
ஹாஹா... நானும் என்னவோ சீரியஸா பதில் சொல்லப்போறீங்க என்று கவனிச்சு வாசிச்சேன் மா.. சிரிப்பை அடக்க முடியலை..
ஹாஹா... நானும் என்னவோ சீரியஸா பதில் சொல்லப்போறீங்க என்று கவனிச்சு வாசிச்சேன் மா.. சிரிப்பை அடக்க முடியலை..
Haha.... u know akka... Today Inga tips follow pannen.... Eppavum nan tap open panni than wash pannuven vegetable.... Neenga sonna Matthiri follow panni water waste Panama, kitchen neat ah vachu today completed....unmaiya ithu romba easya follow pannalam.... But nithakka solli kekkanumnu irunthurukku.... Thank u for your tips

Nanum 1 tips soldrenkka

Onion, garlic ithellam Eduthu hubbytta kuduthutta news parthutte urichu kuduthu
 
Top Bottom