தேவையானவை:
½ கிலோ (கஜு(raw)
1 தே.கரண்டி பேக்கிங் பவுடர்
1 தே.கரண்டி மஞ்சள் தூள்
1 தே.கரண்டி தனி மிளாகாய்த்தூள்
2 பெரிய கரட்( சிறு சிறு சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்)
200 கிராம் பச்சைப்பட்டாணி
1 கறுவாப்பட்டை
1 பெரிய வெங்காயம் (சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள்)
கறிவேப்பிலை கொஞ்சம்
சமையல் எண்ணெய் சிறு மேசைக்கரண்டியளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்கப் கெட்டியான தேங்காய் பால்
செய்முறை:
கஜுவை, அதை மூடுமளவுக்குச் சுடுநீர் மற்றும் ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்து ஒரு இரவு ஊற வையுங்கள்.
அடுத்தநாள், எஞ்சிய நீரை வடித்து விடுங்கள்.
பாத்திரமொன்றில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணையிட்டு, அதனுள் சிறிதாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதங்க விடுங்கள்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வருகையில் கறிவேப்பிலை, பட்டை என்பவற்றையும் சேர்த்து வதக்குங்கள். வதங்கி வருகையில் கஜு, மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூள், உப்பு என எல்லாவற்றையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடுங்கள்.
கஜு நன்றாக வெந்ததும் கரட், பட்டாணி சேர்த்துச் சில நிமிடங்கள் வேக விடுங்கள். கடைசியாகத் தேங்காய் பாலையும் சேர்த்து, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கிப் பரிமாறலாம்.