தேவையானவை:
கறிவேப்பிலை 2 கப்
2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
2 பல்லு உள்ளி, மற்றும் சிறு துண்டு இஞ்சி
2 பச்சை மிளகாய்
1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச் சாறு.
செய்முறை:
உள்ளி, இஞ்சி, பச்சை மிளாகாய், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு என எல்லாவறையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். பின், கறிவேப்பிலையையும் சேர்த்துச் சிறிது நீரும் விட்டு நன்றாக அரையுங்கள். பின், தேங்காயையும் சேர்த்து மைபோல அரைத்தெடுத்து, சோறு, தோசை என்பவற்றோடு உண்ணலாம்.