You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கேரட் கேக் (carrot cake)

ரோசி கஜன்

Administrator
Staff member
97311435_293787874979412_3325280344759861248_n.jpg

தேவையான பொருட்கள்:

250g கோதுமை மா

150 g சீனி

200ml வெஜிடபிள் ஒயில் / உருக்கிய மாஜரின் / உருக்கிய பட்டர் (உங்கள் வசதிப்படி ஏதாவது ஒன்று)

4 முட்டைகள்

2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

50g நட்ஸ் (விருப்பத்துக்கு ஏற்ப கஜூ அல்லது ஆமெண்ட் )

50g பிளம்ஸ்

2 தேக்கரண்டி வனிலா

5 பெரிய காரட் (250 தொடக்கம் 350 கிராம் வரை சேர்க்கலாம் )

செய்முறை :

- சீனியை மிக்சியில் இட்டு பவுடர் செய்து கொள்ளுங்கள்.

- அதோடு, அதே மிக்சியில் முட்டைகளைச் சேர்த்து ஒருநிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள் . பின்னர் ஒயிலையும் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளுங்கள்.

- இக்கலவையை ஒரு கேக் மிக்சிங் பௌலுக்கு மாற்றிவிடுங்கள்.

- மாவையையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாகச் சலித்தெடுத்து , சீனி முட்டை எண்ணெய்க் கலவையோடு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும் . இது ஒரு மர அகப்பையால் கலக்கலாம் .

-அடுத்து, பொடியாகத் துருவிய கேரட், நட்ஸ், பிளம்ஸ், வனிலா என்பவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு கிரீஸ் பண்ணிய தட்டில் ஊற்றி 135 c ல் 70 நிமிடங்கள் வரை வேகவிட்டு, நடுவில் குச்சியால் குத்தி ஒட்டவில்லையோ இறக்கி ஆறவிட்டுப் பரிமாறலாம்.

சுவையை மேலும் அதிகரிக்க மேலே அலங்காரம் செய்து கொள்ளலாம்.

- 100 - 150 கிராம் அசிங் சீனியில் இரண்டு மேசைக்கரண்டி சுடுநீர் விட்டுக் கலந்துவிட்டு ஆறிய கேக்கின் மேலாகக் கலந்து காயவிட்டுப் பரிமாறலாம் .

-அல்லது 3 மேசைக்கரண்டி சீனியை காரமல் காய்ச்சி மேலே விட்டு அலங்கரம் செய்யலாம்.

carrot Cake.jpg

இது எங்கள் மூத்த மகன் செய்த காரட் கேக் . sea salt காரமல் டாப்பிங் போட்டார்.

- -cream cheese frosting போட்டாலும் மிகுந்த சுவையாக இருக்கும் .
 
ரோசி கஜன்

Administrator
Staff member

காரட் கேக் -2 (CARROT CAKE)

தேவையான பொருட்கள்:

250 கிராம் கோதுமை மா
2 தேக்கரண்டி பேக்கிங் சோடா soda
1/2 தேக்கரண்டி உப்பு
1 1/2 தேக்கரண்டி கறுவாப்பட்டை பவுடர்
295 ml வெஜிடபிள் ஒயில்
200 கிராம் சீனி
200 கிராம் லைட் பிரவுன் சுகர்
1 தேக்கரண்டி வனிலா
4 பெரிய முட்டைகள்
300 அளவில் காரட் துருவல் (5 அல்லது 6 மீடியம் சைஸ்)
100 கிராம் பொடிசெய்த நட்ஸ் ( கஜூ, ஆமண்ட், pecans எதுவென்றாலும் )
65 grams பிளம்ஸ் அல்லது Raisins

கிரீம் ஃபொரொஸ்டிங்:

225 கிராம் கிரீம் சீஸ் (room temperature)
140 கிராம் பவுடர் சுகர் / ஐசிங் சுகர்
80 ml ஹெவி கிரீம்
50 கிராம் பொடிசெய்த நட்ஸ். கேக்கில் எந்த நட்ஸ் பாவித்தீர்களோ அதையே போடுங்கள்

செய்முறை:

- மா, பேக்கிங் சோடா , உப்பு மற்றும் கறுவாப்பட்டை பவுடர் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து எடுத்து வையுங்கள்.

- இன்னுமொரு பாத்திரத்தில் எண்ணெய் சீனி வனிலா சேர்த்து நன்றாக அடியுங்கள். விஸ்க் அல்லது மர அகப்பையே போதும் . ஹாண்ட் மிக்ஸ்ர் என்றாலும் சரிதான்.

- முட்டைகளையும் சேர்த்து நன்றாகக் கலந்து சீனி கரைந்து வரும் வரை அடியுங்கள்.

- அடுத்து மாக்கலவையை சிறிது சிறிதாக கலவுங்கள். இதற்கு மரஅகப்பை அல்லது rubber spatula உபயோகியுங்கள்.

- இக்கலவை ஸ்மூத்தாக வந்ததும் துருவிய காரட், நட்ஸ் பிளம்ஸ் சேர்ந்து கலந்துகொள்ளுங்கள்.

இக்கலவையை, கிரீஸ் பண்ணிய / அல்லது பட்டர் பேப்பர் இட்ட 9 இன்ச் வட்ட கேக் பானில் இரு பகுதிகளாக விட்டு 175 c ல் 35 தொடக்கம் 45 நிமிடங்கள் பேக் பண்ணி எடுங்கள். ( 175 c ல் பத்து நிமிடம் oven ஐ ப்ரீ ஹீட் செய்துவிட்டே பேக் செய்யுங்கள்)
நடுவில் food pick/ toothpick ஒன்றினால் குத்திப்பார்த்தால் அதில் கேக் கலவை ஒட்டியிராவிட்டால் இறக்கலாம்.

- இல்லையோ 22 இன்ச் வட்ட பானில் ஒன்றாக விட்டு 175 c ல் 70 - 80 நிமிடங்கள் பேக் செய்தாலும் சரி. பின்னர் இரு பகுதிகளாக்கி ஃ பொரொஸ்டிங் போட்டுக்கொள்ளலாம்.

- இறக்கிய கேக்கை நன்றாக ஆறவிடுங்கள்.

கிரீம் ஃபொரொஸ்டிங்:

-கிரீம் ஸீஸை மீடியம் ஸ்பீடில் ஒரு நிமிடம் பீட் பண்ணி ஐசிங் சுகர் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பீட் பண்ணி, கடைசியாக கிரீம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வரை அடித்து எடுத்து, அதனை, கேக் லேயர் இடையிலும் மேல் பகுதியிலும் பூசி நட்ஸ் கொண்டு அலங்கரித்து எடுக்க, சுவையான, கண்ணுக்கு விருந்தளிக்கும் காரட் கேக் ரெடி.

ஏற்கனவே செய்தபொழுது எடுத்த போட்டோ உடனே கிடைக்கவில்லை. பின்னர் add பண்ணி விடுறேன்.

முதல் முறையை விட இது ரிச்!
 
ரோசி கஜன்

Administrator
Staff member
இவை தவிர்த்து வேறு முறைகளில் யாரவது செய்ததுண்டா? பகிர்ந்து கொள்ளுங்கள், நானும் செய்து பார்ப்பேன் .
 
Sameera

Active member
Kaj

Kaji na yenna sis.... unga story la kus kus dish la kooda use pannenga....
Appadiye antha kus kus recipe podunga
 
ரோசி கஜன்

Administrator
Staff member
Super a irukku Akka.na oru time cake senjen.en ponnu ,amma ne cake la seiya venam ,kadailaye vangikkalam ,kallu mari irukku nu sollitanga. Aduvum appa age kooda five dan.neenga update podum podu marupadium try pana thonudu .comments a pathu payappadama ,I'll try.
ஹா..ஹா...இதில உள்ள அளவுகளில் அரைவாசில முதல் செய்து பாருங்க . அல்லது கால்வாசில
 
Last edited:
Top Bottom