You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

சிப்பிக்குள் முத்து – பவித்ரா நாராயணன்(இந்தியா) - இதழ் 1

ரோசி கஜன்

Administrator
Staff member
1541948983289.png

“நீ கவலைப்படாத சுஜா…எதுவா இருந்தாலும் ஒன்னும் பிரச்சனையில்லை. இன்னிக்கு முக்கியமான மீட்டீங்...இல்லன்னா உங்கூடவே வந்துடுவேன். நீ போய் டெஸ்ட் எடுக்கிறதுக்குள்ள வந்துடுவேன்மா. பார்த்து போய்ட்டு வா.” என்றபடி, மனைவியிடமிருந்து விடைப்பெற்றான் ஆனந்தன்.

ஆனந்தனின் மனைவி சுஜாதா. சுஜாதா ஏதோ ஐ.ஏ.எஸ் டெஸ்ட் எல்லாம் எழுத போகவில்லை. மகப்பெறு மருத்துவமனைக்குத்தான் போகிறாள். இருவராய் இருக்கும் அவர்களது உலகத்தில் மூன்றாவதாய் ஒரு குழந்தை வராதா என்று ஏக்கம் இருவருக்குமே உண்டு. அதுவும் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன.தினம் தினம் மாமியாரிடம் சுஜாதாவிற்கு மண்டகபடி உண்டு. எம்.காம் படித்த சுஜாவுக்கு படிக்காமலேயே ‘மலடி’ பட்டமும் கூடுதலாக உண்டு.எத்தனையோ டெஸ்ட்குகள் , கோவில்கள் என்று போய் பார்த்தும் ஒன்றும் ப்ரோயோஜனமில்லை.சிறுவயதில் க்ளாஸ் டெஸ்ட் என்றாலே பயப்படுவாள் சுஜா. காலேஜ் ஃபைனல் செமஸ்டர் எழுதி முடிச்ச பின் ‘அப்பாடா! இனி லைஃப்ல பரீட்சையே கிடையாது.’ என்று, தோழிகளும் அவளுமாக மகிழ்ந்த காலமெல்லாம் உண்டு.ஆனால், வாழ்வே ஒரு பரீட்சை தானே? அதுவும் ரிசல்டை முதலில் சொல்லி விட்டு அதன் பின் தான் பாடமே கற்க முடியும், வாழ்க்கை எனும் பரீட்சையில்.எம்மதமும் சம்மதம் என்று எல்லாம் மதத்துக் கடவுளையும் கும்பிட்டுக் கொண்டே ஆட்டோவில் வந்தாள்.மருத்துவமனையில் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போது அவளது இதயத்தின் ஓசை அவளுக்கே கேட்டது.இரண்டு மாதம் முழுக்க ட்ரீட்மெண்ட் எடுத்து இந்த மாதம் செக்கப்புக்கு வந்திருக்கிறாள். இந்த ட்ரீட்மெண்டிலாவது கரு உருவாகிறதா பார்க்கலாம் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.அவளது மாமியார் வேறு , “இந்த தடவ மட்டும் எனக்குப் பேரப்பிள்ளை உருவாகலன்னா, உன்னை வெட்டி விட்டுட்டு என் புள்ளைக்கு வேற கல்யாணம் செஞ்சு வைச்சிடுவேன்.” என்று மிரட்டி இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்கும் மிரட்டல் தான் இது. அவளது மாமியார் சுந்தராம்பா 24*7 என்னேரமும் அவளைத் திட்டிக் கொண்டே இருப்பார்.அவளது தாய் வீட்டுக்குப் போகிறேன் என்றால் கூட , “உன் அம்மா கொடுத்து வைச்சவ….அவளுக்கு லட்டு லட்டா ரெண்டு பேரப்பிள்ளைகளை உன் அண்ணி பெத்துக் கொடுத்துட்டா. உனக்கு அப்புறம் கல்யாணம் ஆன உன் தங்கச்சி ரெண்டு பிள்ளை பெத்துட்டா…உனக்கும் ஒன்னுத்துக்கும் கொடுத்து வைக்கல.” என்று ஏசுவார்.சுஜாவின் தோழிகள் யாராவது இவளைப் பார்க்க வந்தாலோ அவர்கள் போன பின்பு ,”உங்க அப்பாரு உனக்கு….ஊருக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி வைச்சாரு; உனக்குப் பின்னாடி கல்யாணம் செஞ்ச உன் ப்ரண்டுங்கலாம் புள்ள பெத்து பொறந்த நாளுக்கு அழைக்க வராளுங்க; வெறும் கட்டாந்தரையில கூட புல்லு முளைக்கும்; இங்க …..ஒரு புல்லு கூட முளைக்கல; என்ன பாவம் செஞ்சியோ…ஒரு வாரிசு இல்ல; என்ன பொறப்போ!” என்று திட்டி அவளைக் காயப்படுத்துவார்.அதனால், அவள் பிறந்த வீட்டுக்கோ இல்லை தோழிகளைப் பார்க்கவோ போக மாட்டாள். வீட்டிலேயே இருந்தாலும் அவரின் பேச்சைக் கேட்டு அவளுக்கு மனம் தான் கசக்கும். வேறு வழியின்றி மன அமைதிக்காக கோவிலுக்குத் தான் போவாள்.ஆனால் அதற்கும் அவர் , “கோவில் கோவிலா சுத்தி என்ன ப்ரோயஜனம்? போயிட்டு வர செலவுதான் தண்டம். இங்க ஒரு மாற்றமும் காணும். ஹாஸ்பிட்டலுக்கும் கோவிலுக்கும் அள்ளிக் கொடுக்கவே என் மகன் சம்பாரிக்கறதெல்லாம் சரியாப் போகுது!” என்பார்.அதனால் சுஜாதா பக்கத்துத் தெருவில் இருக்கும் கோவிலுக்குக் கூட போக மாட்டாள். கணவன் ஷாப்பிங் கூப்பிட்டாலும் அவளுக்காக எதுவும் வாங்க மாட்டாள். புதிதாக ஒரு புடவை வாங்கினால் கூட ,”புடவை புதுசு புதுசா வாங்கி என்ன செய்றது? புடவையில தொட்டில் கட்ட ஒரு புள்ளை இல்லையே!” என்று அதற்கும் குதர்க்கமாய்ப் பேசுவார்.சுஜாதாவுக்கும் குழந்தை மீது ஆசை இருக்கத்தான் செய்தது. திருமணமாகி ஒரு மூன்று ஆண்டுகள் வரையில் அவளுக்கும் குழந்தை வேண்டும் என்ற எண்ணம் அதிகமாய் இருந்தது. ஆனால், அவளது மாமியாரின் நச்சரிப்புக்கும் குத்திக்காட்டலுக்கும் பிறகு அவர்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதை விட மாமியாருக்கு ஒரு பேரப்பிள்ளை வேண்டும் என்பதுதான் அவளது எண்ணம்.


அவளது தனிப்பட்ட ஆசை, குழந்தை இல்லாத ஏக்கம், கவலை, கஷ்டம், வலி, வேதனை எதையுமே அவளது மாமியார் கண்டுகொள்ளவே மாட்டார். ஏதோ குழந்தை இல்லாமல் அவள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே அவளை வார்த்தையால் கடித்துக் குதறுவார்.இந்த விசயத்தில் அவளது கணவன் ஆனந்த் தங்கமானவன். இரண்டாம் முறை அவளுக்கு டெஸ்ட் எடுக்க சென்றபோதே அவனும் தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டான்.சுஜாதாவுக்குக் கணவனை நினைத்துப் பெருமையாக இருந்தது. தன் மீது குறை இருந்தாலும் மனைவி மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளும் ஆண்கள் இருக்கும் உலகில் அவன் தனித்து நின்றது அவளுக்குப் பலம் தந்தது. ஆனால் சோதனையில் முடிவில் ஆனந்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றுதான் வந்தது. சுஜாதாவிற்கும் எந்த குறையும் இல்லைதான். ஆனால், அவள் வயிற்றில் ஏன் கரு தங்கவில்லை என்பது அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்.மிகுந்த எதிர்ப்பார்ப்போடு முகமெல்லாம் வேர்த்து விறுவிறுக்க டாக்டரின் அறைக்குள் சென்றாள் சுஜாதா.


அலுவலகத்தில் முக்கியமான மீட்டீங்கை முடித்துவிட்டு கார் பார்க்கிங்கில் காரை எடுக்க போகும்போது ஆனந்தின் மொபைல் ஒலிக்க , அவன் தாயார் தான் அழைத்திருந்தார். ஆன் செய்து பேசியவனுக்கு அடுத்த பக்கம் சொன்ன செய்தியில் உயிர் ஒரு நொடி உறைந்து போனது.சுஜாதாவுக்கு அடிப்பட்டிருப்பதாகவும் அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் சொல்ல , அப்படியே துடித்துப் போய் விட்டான். அவனது நிலைக்கண்ட அவனது தோழன் சஞ்சய் அவனை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வந்தான்.மருத்துவமனைக்குச் சென்று பார்த்தால் அங்கு சுஜாவின் குடும்பம், அவனது குடும்பம் எல்லாம் கூடியிருந்தனர்.வேகமாகத் தன் தாயிடம் சென்ற ஆனந்த், “அம்மா…என்னாச்சு அவளுக்கு? சொல்லுங்க…” என அவரைப் போட்டு உலுக்க,“தெரியலடா...ஹாஸ்பிட்டலுக்குத் தானேடா போனா? இவளை இங்க அட்மிட் செஞ்சவர் தான் எனக்குப் போன் பண்ணினார்; அவர் கார்ல விழுந்திருக்கா!” என்று அழுது கொண்டே சொல்ல,அவளை அட்மிட் செய்த ஆகாஷ் வந்து , “சார்…உங்க மிஸஸ் மேல தான் தப்பு;. அவங்க தான் பார்க்காம வந்துட்டாங்க; ஷி வாஸ் நாட் இன் ஹேர் ஸ்டேட்.” என்று, தன் மீது தவறில்லை என்பதை உணர்த்த ,சஞ்சய் வந்து “ தாங்க்ஸ் சார்.. நோ இஷியுஸ்….அவங்களைகொண்டு வந்து அட்மிட் செஞ்சீங்களே அதுவே பெருசு சார். இப்போ அவனை டிஸ்டர்ப் செய்யாதீங்க! ப்ளீஸ்…உங்களுக்கு வேணும்னா யூ மே லீவ்!” என்று சொல்ல“I understand sir...its ok…i will stay sir…….அவங்க கண்முழிச்ச பின்னாடியே நான் போறேன்...நோ ப்ராப்ளம்…” என்றபடி அந்த ஆகாஷ் அமர,“என் சுஜிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு…உன்னை நான் சும்மா விடமாட்டேன்மா…” என ஆக்ரோஷமாக ஆனந்தன் கத்த ,“டேய்..ஆனந்த! என்னடா இது அம்மாக்கிட்ட போய்? அவளுக்கு ஒன்னுமாகாது…வந்து உட்காரு வா…” என்று அவன் தந்தை அதட்ட,“நீங்க பேசாதீங்க! என் பொண்டாட்டியை இவங்க பேசினப்போ ஒரு வார்த்தையாவது பேசியிருப்பீங்களா? நான் அம்மான்னு மரியாதைக்காக இத்தனை நாள் பேசாம இருந்தேன். இப்போ, எப்போ அவ இப்படி ஒரு நிலைமைக்கு வந்தாளோ இனிமே நான் அமைதியா இருக்கப் போறதில்லை.” என்று அவரிடமும் எகிற,“என்னடா..நீ? நான் என்ன செஞ்சேன் அவளை? அவளா போய் வண்டியில விழுந்திருக்கா…நான் என்ன செய்ய? உனக்கு ஒரு வாரிசு வேணும்னுதானே அவளைக் கேட்டேன். அவளை வேற என்னடா நான் கொடுமை செஞ்சேன்?” என்று சுந்தராம்பா அழுதுகொண்டே சொல்ல, 

ரோசி கஜன்

Administrator
Staff member
“நீ அவளைக் கொடுமை செய்யல, சித்ரவதை செஞ்ச! குழந்தை குழந்தைன்னு சொல்லி சொல்லி அவளை ஒரு நாளாவது நிம்மதியா இருக்க் விட்டிருப்பியா? யாராவது வீட்டுக்கு வந்தா அவங்க முன்னாடியே அவளைக் குத்திக் காட்டுவ. நான் உன்னை எதிர்த்துக் கேட்டா...அழுது சீன் போடுவ. அவளா போய் விழுந்தாளா? உனக்குப் பயந்து போய் விழுந்துருப்பா…இந்த தடவையும் குழந்தை உண்டாகியிருக்காது. அந்த வேதனையில என் பொண்டாட்டி தானா போய் விழுந்திருப்பா…அவளுக்கு ஏதாவது ஆகட்டும் உன்னை என்னை செய்றேன் பாரு….” என்று கர்ஜித்தான்.ஆனந்த் எப்போதுமே இப்படி அதிர்ந்து எல்லாம் பேச மாட்டான். அதுவும் தாய் தந்தையை எதிர்த்துப் பேச மாட்டான். அப்படியே பேசினாலும் மரியாதையாகத் தன் கருத்தை சொல்வான். சில முறை சுஜாவுக்காக அவரிடம் பரிந்து பேசியிருக்கிறான். ஆனால் இப்படி கத்தியதெல்லாம் இல்லை. அதனால் சுந்தராம்பா இன்னும் அழுது கொண்டே ,“நான் என்னடா செஞ்சேன் அவளை? பத்து வருசமாச்சு….அவளுக்கு அப்புறம் கல்யாணம் ஆன அவ அண்ணன், தங்கச்சிக்கெல்லாம் புள்ள இருக்கு…எனக்கு நீ ஒரே பையன்…உனக்கு வாரிசு வேணும்…எனக்கும் பேரப்பிள்ளையைக் கொஞ்சனும்னு ஆசையெல்லாம் இருக்காதா? அவளை ஏதோ மனசு கேட்காம நாலு வார்த்தை கோவத்துல திட்டியிருப்பேன். அதுக்காக அவ சாகனும்னா நான் நினைப்பேன்?”“மாப்பிள்ள கோவப்படாதீங்க……..சுஜாதாவுக்கு ஒன்னுமாகாது…..” என்று அவனது மாமியார் அவனை அமைதிப்படுத்த ,“அத்தை…அவங்க என் அம்மா...அதனால தான் அவங்களைத் திட்டுறேன். அவங்க மேல உள்ள அதே அளவு கோபம் உங்க மேல இருக்கு. என் வாயைக் கிளறாம…பேசாம இருங்க!” என்று அவரிடமும் சத்தம் போட ,“டேய்..ஆனந்த்…வாட்ஸ் திஸ்? எதுக்கு இப்படி எல்லார்கிட்டையும் கோவப்படுற? சுஜாவுக்கு எதுவும் ஆகாது..ஸ்டே ரிலாக்ஸ்ட்.” என்று சஞ்சய் சொல்ல“முடியலடா..பயமா இருக்கு…எனக்கு என் மேலேயே கோபமா வருதுடா…மீட்டிங்க் முக்கியம்னு போனேன்ல, என்னை சொல்லனும்டா! இத்தனைக்கும் ரிசல்ட் எப்படி வந்தாலும் பரவாயில்லனு சொன்னேனே அவகிட்ட. இப்படி அவ மனசொடிஞ்சுப் போய் தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்கு நினைப்பான்னு நான் நினைக்கலடா. என்னையே ரோட்ல அப்படி ஜாக்கிரதையா போக சொல்வாடா. இவ எப்படிடா காரைப் பார்க்காம போனா? முடியலடா!” என்றவன், நண்பனின் கரம் பற்றிக் கண்ணீர் வடித்தான்.“இவங்க தான் குழந்தை குழந்தைன்னு எங்களை நிம்மதியாவே இருக்க விடலடா. சந்தோசமா இருக்கிற நினைப்புப் போய்…குழந்தை வேணும்னு ஒவ்வொரு நாளும்…சை……….போடா!” என்று அவன் கசப்பும் வெறுப்புமாக சொல்ல,“டேய்…விடுடா……சரியாகிடும்.”“எங்களுக்கு மட்டும் குழந்தை இல்லன்னு ஆசை, ஏக்கமெல்லாம் இருக்காதாடா? இவங்களுக்காவது பேரப்பிள்ளை…பட்..எங்களுக்கு குழந்தைடா….ஆனா…என்னமோ……இவங்களுக்கு மட்டும் தான் கவலை இருக்கிற மாறி அவளைக் குத்திக் காட்டி காட்டியே டார்ச்சர் பண்ணுவாங்கடா…அவளும் இவங்களை எதுவும் சொல்லமாட்டா…கேட்டா நம்ம கிட்ட தப்பு இருக்கறதால தான சொல்றாங்கன்னு சொல்லி என்னையும் எதுவும் கேட்க விட மாட்டா…”“ஆடு மாடு கூட தானே டா புள்ளைப் பெக்குது? அதுதான் ஒரு பொன்னோட தகுதியாடா? ஒரு வேலை இவங்களை செய்ய விட மாட்டா டா…ஆனா கூட ஒரு குழந்தை இல்லன்னு சொல்லிக் காட்டியே மனசளவுல அவளைக் கொன்னுட்டாங்கடா…எப்போ குழந்தைங்களைப் பார்த்தாலும் அவ ஏக்கமா பார்ப்பாளே ஒரு பார்வை, இவங்க தான் டார்ச்சர்னு பார்த்து இவ அம்மா வீட்ல கொண்டு போய் விட்டா…அவங்க, ‘பக்கத்து விட்டுக்காரங்க சொன்னாங்க..அவங்க சொன்னாங்க…இவங்க சொன்னாங்கன்னு’…இவளை ஏதாவது டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போவாங்க…”“நிம்மதின்னு ஒன்னே எங்க வாழ்க்கையில இல்லடா. எங்க போனாலும் யாரைப் பார்த்தாலும் குழந்தை இல்லையான்னு கேட்டே சாவடிக்கிறாங்கடா. குழந்தை இல்லன்னு நான் படுற கஷ்டத்தை விட சுஜாவுக்குத்தான் டா கஷ்டம் ஜாஸ்தி. எத்தன டெஸ்ட், ஊசி, மருந்து, வலி………..சே! நாங்க ரெண்டு பேருமே எப்போவுமே குழந்தை பத்தி பேச மாட்டோம்…ஒருத்தருக்கொருத்தர் ஏன் அந்த வலியைக் கிளறனும்னு…”“இவங்க வேற….எனக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைப்பன்னு அவளுக்கு மெண்டல் ஸ்டெர்ஸ் கொடுக்கிறாங்கடா…உன்னைத் தவிர யாருமே என் லைஃப்ல இல்ல…உன்னை விட மாட்டேன்மான்னு சொன்னாலும்...அவளுக்கு இருக்கற அந்த இன்செக்குயுரிட்டி போக மாட்டேங்குது! ““குழந்தை இல்லன்னு கவலை ஒரு பக்கம், எங்க நான் அவளை விட்டுட்டுவேனோன்னு பயம் ஒரு பக்கம்னு அவ தினம் தினம் சாகுறாடா! நானும் எவ்வளவுதான் புரிய வைக்கிறது? பேசாம…ரெண்டு பேரும்………..தனியா ஏதாவது ஒரு இடத்துக்குப் போயிடலாம்னு தோனும்டா!”“குழந்தை இல்லன்னா வாழவே கூடாதா? கல்யாணம் செஞ்சா குழந்தைன்னு ஒன்னு கட்டாயமாடா? தப்பான வழியில கூட தான் புள்ளைப் பெத்துக்கிறாங்க…அதுக்காக அவங்களாம் நல்லவங்களாடா? அவளை மலடின்னு இவங்க சொல்லக் கேட்கும்போதும் உயிரே போகிற மாறி வலிக்கும்டா! எனக்கும் தான் புள்ள இல்ல…ஆனா ஏன்டா அந்த மாதிரி என்னை சொல்ல மாட்றாங்க? பொன்னா பொறந்த காரணத்துக்காக அவளை என்னலாம்டா சொல்றாங்க!”விதவை, மலடி, வேசி என்ற சொல்லெலாம் பெண்களுக்கானவை தான். ஆண்களுக்கும் அதே சூழ்நிலை வந்தால் கூட அவர்கள் எப்போதுமே ‘ஆண்கள்’ தானே.“இப்போ மட்டும் அவளுக்கு ஏதாவது ஆச்சு…. புள்ள புள்ளன்னு சொல்லி எங்களை டார்ச்சர் செஞ்சாங்களோ…அந்த புள்ளயே இல்லாம போய்டுவான்னு சொல்லுடா…அம்மான்னு சொல்ல என் சுஜாவுக்கு ஒரு குழந்தை இல்லன்னு குத்திக்காட்னாங்களே இனி நான் இருக்க மாட்டேன் அவங்களை அம்மான்னு சொல்ல…““ஆனந்த்!” என்று சுந்தராம்பா அதிர,“என்னம்மா இப்படித்தான் ஹாஸ்பிட்டல கத்துவீங்களா? மேனர்ஸ் இல்ல…” என்று செவிலிப்பெண் திட்டும்போதே, டாக்டர் வந்து , “ nothing to worry! தலையில லைட்டா அடி…தையல் போட்டுருக்கேன். baby is also normal…..take care !” என்று சொன்னவுடன் எல்லாரும் அதிர்ந்து போனார்கள்.“டாக்டர் என்ன சொல்றீங்க? என் மருமக மாசமா இருக்காளா?” என்று ஆனந்தின் தாய் கேட்க“ஆமா…..she is pregnant…..two months.” என்றார்.அடுத்தநோடி வேகமாக உள்ளே சென்ற ஆனந்துக்கு மனைவியின் முகம் பார்த்த பின் தான் உயிரே வந்தது. அவனுக்கு மனைவி நலமாக இருப்பதுதான் முக்கியம்...குழந்தை உண்டாகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட அவனுக்கு அவள் தான் எல்லாமே!கணவனின் முகம் பார்த்தவள் கண்ணீரோடு “ நமக்கும் குழந்தை வரப்போகுதுங்க…” என்றாள்.மனைவியைக் கண்ணாரக் கண்டவன் அவளை இறுக்கி அணைத்துக் கண்ணீர் விட்டான். அப்போது பார்த்து டாக்டரிடம் பேசி விட்டு அனைவரும் உள்ளே வர , ஆனந்த அணைப்பை விலக்கவில்லை.குழந்தை உண்டான சந்தோசத்தில் தான் அவன் இப்படி இருக்கிறான் என நினைத்தாள் சுஜாதா. அவளுக்குத் தெரியவில்லை, இவ்வளவு நேரம் அவனது உயிர் அவளுக்காகத் துடித்ததை.சஞ்சய் தான் , “டேய்…மச்சான்…..” என்று கத்த , அப்போதும் அவன் காதில் அதெல்லாம் கேட்கவில்லை. சுஜா தான் அவளுள்ளே ஒரு உயிர் துடிப்பதை உணர்ந்து கணவனை விலக்கினாள்.சுஜா சங்கோஜமாய் அனைவரையும் பார்க்க , சுந்தராம்பா தான் முதலில் வந்து , “மன்னிச்சிரும்மா…..அத்தை உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்…” என,“பரவாயில்லை அத்தை...மன்னிப்பெல்லாம் வேண்டாம். நீங்க பெரியவங்க…உங்க எண்ணம் எனக்குப் புரியுது…” என்று அவரை சமாதானப்படுத்த,“உனக்குப் புரியுதுமா…உன் புருசன் இருக்கானே நீ கண்ணு முழிக்கறதுக்குள்ள எங்களை ஒரு வழியாக்கிட்டான்…” என்று, அவளது மாமனார் கணபதி சிரித்துக் கொண்டே சொல்ல“அப்பா!” என்று பல்லைக் கடித்தான் ஆனந்த்.“என்னாச்சு?” என சுஜா கேட்க , நடந்தவற்றை ஒரு வரி பாக்கி விடாமல் ஒப்பித்தார் சுந்தாரம்பா.கணவனின் அன்பின் மீது சந்தேகம் கொண்ட தன் மீதே அவளுக்குக் கோபமாய் வந்தது.அதன்பின்னர் அவள் நடந்தவற்றை சொன்னாள். மருத்துவர் அவரை சோதித்து அவள் மாசமாக இருப்பதாக கூற, அவள் அடைந்த உவகைக்கு அளவே இல்லை. கண்ணீல் எல்லாம் நீர் நிறைய அந்த நொடி கணவன் தோள் சாய்ந்து அழத்தான் தோன்றியது.எத்தனை வலிகள், வசவுகள், வேதனைகள். இனி அவளையும் ‘அம்மா’ என்ற சொல்ல ஒரு உயிர் வரப்போகிறது.டாக்டரிடம் பேசி விட்டு வெளியே வந்தவள் நேரில் போய் அனைவரிடமும் சொல்லலாம் என்றெண்ணி ஒரு ஆட்டோ பிடித்து , கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கி விட்டு , வெளியே மீண்டும் ஆட்டோ பிடிக்க தெருவில் நடந்து வந்த போது அளவு கடந்த மகிழ்ச்சி, சொல்லில் வடிக்க முடியாத உணர்வில் இருந்தவளது கண்கள் கலங்கி விட, மசக்கையில் மயக்கமும் சேர்ந்து கொள்ள காரின் முன் விழுந்தாள்.ஒரு வழியாக மீண்டும் ஒரு முறை gynacoelogist டை கன்சல்ட் செய்து விட்டு வீடு வந்திருந்தனர். வீட்டிற்கு வந்த பின் தன் தாயாரிடம் சென்றவன் ,“சாரிம்மா…ரொம்ப பேசிட்டேன் நான். ஆனா…அவளுக்கு ஒன்னுனா…என்னால தாங்க முடியாதுமா! அவ வேதனையை டெய்லி பார்க்கிறவன் நான்…அந்த கோவத்துல…அவளுக்கு எதாவது ஆகிடுமோன்னு பயத்துல தான் பேசிட்டேன்மா...மன்னிச்சிடுங்க!” என்று கேட்க“என்னடா…நீ? எங்கிட்ட மன்னிப்புக் கேட்டுகிட்டு… நான் தான் உங்களைப் புரிஞ்சிக்கல. என்னை நீங்க மன்னிச்சா போதும். போ….போய்…உன் பொண்டாட்டியைக் கவனி…இந்தா இந்த பாலை எடுத்துட்டுப் போ…” என்று மகனை விரட்டினார் அந்த அன்பு தாய்.கட்டிலில் கணவனின் கையணைப்பில் இருந்தவள், “ஐ லவ் யூ!” என்றாள் அவன் மார்பில் சாய்ந்தவாறே.“இதை சொல்ல இத்தனை வருசமாச்சா உனக்கு? நம்ம பாப்பா வந்தவுடனே தான் உனக்கு சொல்லத் தோனுதாடி?”“ம்ஹூம்…சாரி…நான் உங்களைக் கஷ்டப்படுத்திட்டேன். உங்க அன்பைப் புரிஞ்சிக்கல.”“விடுமா…இன்னிலேர்ந்து நீ சந்தோசமா இருக்கனும். என்னனாலும் என்னைக் கேளுடி! இனிமே நீ அழவே கூடாது…சுஜிக்குட்டி!” என்றவன் அவளது சென்னியில் முத்தமிட்டான்.பின்னர் அவன் குனிந்து அவளது வயிற்றில் இரண்டு முத்தமிட ,“என்ன ரெண்டு கிஸ்?” என அவள் குறும்பாய்க் கேட்க,“இப்போ இந்த சிப்பிக்குள்ள முத்து வந்திடுச்சு இல்ல…அதான்…” என்றபடி அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்.அவளுக்குத் தெரியும் சிப்பிக்குள் முத்து இல்லாவிட்டாலும் கூட அவனது அன்பு குறையாதென!
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom