சூரியன்! எங்கள் வீட்டுக் கடைக்குட்டி!
பன்னிரண்டு வயதுதான்; ஆனால்...என்னோடு வழக்காடத்தொடங்கினால் ...கடவுளே! வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் மனதில் அலற விடுவார்.(தலைகீழாக நின்றாலும் கடைசி வார்த்தை என்னுடையதுதான். அதற்குள்...அப்பப்பா!) மறுபுறம் அடாவடியான பாசக்காரன்.
அண்ணாக்களோடு போட்டி போட்டுக்கொண்டு படிப்பு, விளையாட்டு என்று மல்லுக்கு நிப்பார். அதுபோலத்தான் வரையத் தொடங்கியதும் . அவர்கள் சிறுவர்களாக இருக்கையில் 'கேம்' என்பதை நான் கண்ணிலும் காட்டவில்லை . தொலைக்காட்சி பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கியிருந்தேன். நானும் வீட்டில் இருப்பதால் இதையெல்லாம் செய்யவும் முடிந்தது. அதனால், டென்னிஸ் விளையாட்டுத் தவிர்த்து, பொழுது போக்கு என்பதில் புத்தகம் வாசிப்பதும் வரைவதும் முக்கிய இடம் பிடிக்கும்.
பிள்ளைகள் மூவருமே வரைவார்கள். நிறைய வரைந்துள்ளார்கள் . இருந்தும் சூரியன் மட்டும் தொடர்ந்து மிக ஆர்வமாக இப்போதும் வரைகிறார் . அண்மையில் அவர் வரைந்த படங்கள் சில இங்கே போடுகிறேன் . தொடர்ந்து அவரது சித்திரங்களை இங்கே பதிவிடுவேன்.

Last edited: