You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

சொக்லேட் கேக் - இதழ் 6

ரோசி கஜன்

Administrator
Staff member
எல்லார் வீட்டிலும் அறைகள் இரண்டு மூன்று இருக்கும். கூடம், சாப்பாட்டு அறை, வரவேற்பறை கூட இரண்டு இருக்கும். ஏன் குளியலறை கழிவறை கூட இரண்டு மூன்று இருக்கும். சமையல்கட்டு இரண்டு, அதுவும் ஒரே அறைக்குள் இருக்கக் கண்டு இருக்கிறீங்களா? என் வீட்டில் இருக்கிறது. இரண்டு சமையல்கட்டுகள். கண்டபாட்டுக்குக் கற்பனையைத் தட்டிவிடக்கூடாது சொல்லிவிட்டேன். இது அந்…த இரண்டு சமையலறைக் கதையில்லை. இது வேறு! மாமியார் இல்லாத குறையைப் போக்குவதற்கு என்றே பிறப்பெடுத்து வந்த மகள் சிந்து. ‘டெஷிந்தா’ என்கிற இயற்பெயர் கொண்ட ராட்சசி. கைவேலைகளில் மிகவுமே பிரியம். ஆர்வமாகக் கற்றுக்கொள்வார். கண்பார்க்கக் கை செய்யும் என்பார்களே, அந்த ரகத்தைச் சேர்ந்தவர். எதுவாயினும், விரும்பிச் செய்வார். அலங்காரம், நகத்துக்கு ஒவ்வொரு வடிவங்களில் நகச்சாயம் இடுவது, கேக்குகள் செய்வது என்று எல்லாமே வரும். (கவனிக்க; அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டது)

எல்லாவற்றையும் செய்துவிட்டு அப்படியே போட்டுவிட்டுப் போவதால் சமையலறைக்குள் நான் விடுவதில்லை. பப்பரப்பா என்று பல்லைக் காட்டும் பாத்திரங்களைக் கண்டாலே ஆத்திரம் அடுப்புச் சூட்டைவிட வேகமாக ஏறிவிடும். அதனால், அப்பாவைக் கரைச்சல் பண்ணித் தனக்கென்று ஒரு சமையலறைப் பகுதியை உருவாக்கிக்கொண்டவர் என்றால் பாருங்கள். எனக்கோ அப்பா, மகள் மீது பெரும் கோபம். நான் ஆசையாசையாகப் பாவிக்கும் சமையலறையில் ஒருபக்கச் சுவரில் என்னுடையது என்றால் மறுபக்கத்தில் சிந்துவினது.

அவா குப்பையாகப் போட்டுவிட்டுப் போனால் அது என்னையும் சேரும் என்று, நான் என் பக்கத்தில் ‘வெல்கம் டு நிதாஸ் கிட்சன்’ என்று அழகாக எழுதி லெமினேட் செய்து ஒட்டிவிட்டு மாலை வந்து பார்த்தால், அவவின் பக்கத்தில் ‘வெல்கம் டு டெஷிந்தாஸ் கிட்சன்’ போட் என்னுடையதை விட அழகாகப் பூக்கள் எல்லாம் வரைந்து என்னைப் பார்த்துப் பல்கலைக் காட்டுகிறது. வந்த ஆத்திரத்துக்கு என்னுடையதைக் கிழித்து எறிந்து விட்டேன். அடுத்தடுத்த நாட்களில் அவவினதையும் காணவில்லை.

நான் என்ன செய்தாலும் அதைத் திருப்பிச் செய்வதையே முதன்மையான தொழிலாக வைத்திருப்பா. எங்கள் சொந்தக்காரர் கேட்டதற்கு இணங்க, ஒரு புதுவகையான கேக்கைச் செய்து அவர்களுக்குக் கொடுத்து நான் பாராட்டுப் பெற்றுவிட்டேன் என்கிற பொறாமையில், அடுத்தநாளே நான் செய்த அதே செய்முறைக் கேக்கினைத் தானும் செய்து, என் கேக்கை விட தன்னது ‘சாஃப்ட்’ ஆக வந்திருக்கிறதாம் என்று ஊருக்கே கதையை அடித்துவிட்டுவிட்டார்.

செய்து, என் கேக்கை விட தன்னது ‘சாஃப்ட்’ ஆக வந்திருக்கிறதாம் என்று ஊருக்கே கதையை அடித்துவிட்டுவிட்டார். எனக்கெதிராகக் கூட்டுச் சதி செய்வதற்கு என்றே என் குடும்பத்தில் பல வில்லன்கள் உண்டு. என் கணவர் தலைமையில் நான் பெற்ற மகன் துவங்கி, என் தம்பியில் இருந்து அத்தான் வரை எல்லோருமே எனக்கு எதிரானவர்கள். இவ்வளவு நாட்களாக ‘சாப்பிட என்ன செய்து வச்சிருக்கிறாய்?’ என்று என்னிடம் கேட்ட கூட்டம் இப்போதெல்லாம், ‘உங்கட அம்மா செய்றது ஒரு சதத்துக்கும் உதவாது, சிந்து என்ன செய்து இருக்கிறீங்க?’ என்று அவாவிடம் கேட்கத் துவங்கிவிட்டது அந்த நன்றி கெட்ட கூட்டம். உப்பிட்டவரை உள்ளளவும் மறக்கக் கூடாது என்பார்கள். கேக்கில் நான் உப்புப் போடவில்லை என்பதற்காக இப்படியா நன்றி மறப்பது? நியாயத்தை நீங்களே சொல்லுங்கள்!

இனி,என் வாழ்க்கையில் விளையாடிய அந்தக் கேக் செய்யும் முறையைப் பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

300g மா

250g சீனி

4 முட்டை

200ml எண்ணை

200ml பால்

1 பாக்கட் பேக்கிங் பவுடர்

1 பாக்கட் வனிலா

3-4 தேக்கரண்டி கொக்கோ பவுடர்(சொக்லேட் பவுடர்)

1545342750263.png

முதலில் முட்டைகள், ஒரு வனிலா மற்றும் சீனி மூன்றையும் ஒன்றாகப் போட்டு ‘ஹாண்ட் மிக்ஸர்’ மூலம் நன்றாக அடிக்கவும். முட்டையின் திரவத்தன்மை மறைந்து சீனியும் முட்டையும் நன்றாகக் கலந்து, கரைந்து பட்டர் அல்லது வெள்ளை நிறத்திலான கிறீம் போன்று வரும்வரை அடிக்கவும். அதற்குள் எடுத்து வைத்திருக்கும் பாலையும் எண்ணையையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கலந்து அடித்துக்கொள்ளுங்கள்.

பின்னர், மா, கொக்கோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் மூன்றையும் கட்டி இல்லாமல் அரித்து எடுத்து மிக்ஸரில் அடித்து வைத்திருக்கும் கலவையில் கையால், அல்லது ஒரு கரண்டியால் மிக நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.

கரண்டியால் மிக நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இதன்போது மிக்ஸர் பயன்படுத்தாமல் ஏதும் ஓர் அகப்பை பயன்படுத்துவது சிறந்தது. அப்போதுதான் கேக் மிகவும் சொஃட்டாக, பொங்கி வரும்.

இந்தக் கலவையினை ஒரு தட்டிலிட்டு 180-200 பாகை செல்ஸியஸ் வெப்பத்தில் ஏறத்தாழ 40 நிமிடங்களில் வைத்து எடுத்தால் மிகவுமே ருசியான, சொஃட்டான சொக்கோ கேக் தயார்.

பின்குறிப்பு: இன்னும் இனிப்பு வேண்டும் என்பவர்கள் பேக் பண்ணி வந்த கேக்கின் மீது ‘ஐசிங்ஷுகர்’ தூவியோ அல்லது சொக்லேட் கிறீமினை ஊற்றியோ பரிமாறலாம்.

Rena

Active member

View attachment 222

Hi nitha cake la adigamm seya matom.oru time pane.en paiyane ,amma tayavu seidu cake la seyadama kadilaye vangikakalam nu soollitan .apdi oru tasty cake senjen.
 
Top Bottom