You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தன்னம்பிக்கை தரும் பெண்மணி! - கோடீஸ்வரி நிகழ்ச்சி

ரோசி கஜன்

Administrator
Staff member
கோடீஸ்வரி யாரெல்லாம் பார்க்கிறீங்க? நான் தொடர்ந்து பார்ப்பதில்லை . ராதிகா தொகுத்து வழங்குகிறார் என்றதும் ஆரம்பத்தில் சிலதுகள் பார்த்தேன். இடையிடை நேரம் கிடைக்கையில் தட்டுவேன் .சுவாரசியமாக இருந்தால் அப்படியே முழுதும் பார்ப்பதும் உண்டு.

இன்ஸ்டாவில் கோடிஸ்வரியின் ப்ரோமோ பார்த்துவிட்டு இந்த எபிசோட் பார்க்கவே வேண்டும் என்று பார்த்தேன் .

மிஸ் மின்னல் விரல்கள் வென்ற கணம் தொடங்கி, பரிசுத் தொகை + கோல்கேட் கிப்ட் ஹாம்பர் சகிதம் விடைபெறும் வரை தன் ஒவ்வொரு செய்கையாலும் ராதிகாவையும் அரங்கிலிருந்தோரையும் பார்வையாளரைம் தன் வசப்படுத்தி வைத்திருந்த பெண்மணியை, கோடீஸ்வரி நிகழ்ச்சி என்றும் மறக்காது என்றிருந்தார், ராதிகா.

நானுமே என்றைக்குமே மறக்க மாட்டேன். அநேகமாக பார்த்திருந்த யாராலும் மறக்க முடியாது.

பூச்சுகளும் வேசமுமாக ஒருவரே பலமுகங்களைக் காட்டுவதுமான உலகில், தொலைக்காட்சியொன்றில், எந்தவிதமான அலங்கார பாவனையுமின்றி, தான் தானாக இருந்து, வாழ்க்கையில் ஒரு குடும்பஸ்திரி, அதுவும் ஒரு அளவுக்குப் படித்த நடுத்தரத்துக்கும் கீழ் மட்டத்திலுள்ள ஒரு இல்லத்தரிசி, ஒட்டுமொத்த இல்லதரிசிகளுக்கும் பிரதிநிதி போலவே பல சம்பவங்களை போகிற போக்கில் சொல்லிச் சென்றதை வெகுவாகவே இரசித்தேன். சிரித்துக்கொண்டே பார்த்தேன். வியப்பும் ஏற்படாதில்லை.

திருமணமான புதிதில் தன் எதிர்பார்ப்பை, அது இதுவரை நிறைவேறாததை, பனாரஸ் புடவை கட்ட வேண்டும் என்ற தன் ஆசையை, அதுவும் ராதிகாவைப் பார்த்து உங்கள் புடவைகள் எல்லாம் அவ்வளவு அழகு என்று சொல்கையில் இலேசாக என் கண்களும் கலங்கிப் போயின.

கணவர் பற்றி அவர் சொன்ன விதம் ஹா..ஹா..சிரித்தாலும் அதிலும் யதார்த்தம் இருந்தது.
பிள்ளைகளுக்கு நல்ல உணவு கொடுத்துவிட்டுத் தானும் கணவரும் அப்படி இப்படி உண்போம் என்றதில் அளவு கடந்த பாசமும், வைத்தியருக்குக் கொடுப்பதைவிட அப்படியான உணவை உண்ணோம் என்றதிலும் தன்னை அப்போட்டிக்குத் தாயார்ப்படுத்திவந்து இயன்ற மட்டிலும் முறையாக விளையாடியதில் சமயோசிதமும் புத்திசாலித்தனமும், சிறு ஹோட்டல் ஒன்றில் என்ன என்ன எல்லாம் செய்வார்கள் என்று விலாவாரியாக விளக்கியதிலும், கணவருக்குத் தெரியாது ஹோட்டல் ஆரம்பித்து ஹா..ஹா..ஹா..அவர் குஷியாக இருக்கையில் சொன்னது என்றார் பாருங்க...ஹா..ஹா..அதிலெல்லாம் அவரின் வெகுளித்தனமும் இருந்ததென்றால், 'எனக்குப் பாடுவது என்றால் அவ்வளவு பிடிக்கும்' என்றவர், நிகழ்ச்சி முழுவதும் பாடல்களை அள்ளிவிட்டத்தில் அவர் துணிவும் தெரிந்தது.
'விலகுகிறேன் என்று சொன்னேனே' என்று கடைசியில் சொன்னார் பாருங்க...உண்மையில் மிகுந்த கெட்டிக்காரி. சட்டென்று அவர் அப்படிச் சொன்னது என் விழிகள் விரிந்தன. இன்னமும் கொஞ்சம் பரிசு கிடைச்சிருக்கலாமே என்றிருந்தது, எனக்கு.

பரவாயில்லை, தனக்குப் பிடித்த தொழிலைத் தொடங்கி அமோகமாக வந்துவிடுவார் என்றே எண்ணுகின்றேன் .

அதற்கு அன்பான வாழ்த்துகள் ரோசி!

நிகழ்ச்சி முழுவதும் ராதிகாவின் சிரிப்பு அவ்வளவு அழகு! அந்தப் பெருமையும் ரோசிக்கே!

பார்க்காதவர்கள் நீங்களும் பாருங்களேன்!


07-02-2020 Kodeeswari-Colors Tamil tv Show


தன்னம்பிக்கை தரும் பெண்மணி!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
உங்கட உபயத்தில் நானும் பாத்தேன் ரோசி அக்கா. உண்மையாகவே மஞ்சள் படிந்த கைகள் கள்ளமில்லாத சிரிப்பு, அவர் தண்ணீர் குடித்துவிட்டுத் தானே கொண்டுபோய் வைத்ததில் தெரிந்த வெகுளித்தனம், நான் இறங்கிட்டேன் கேம் ல இருந்து விலகிட்டேன் என்று அடம் பிடித்ததில் தெரிந்த கெட்டிக்காரத்தனம், ராதிகா சற்றே கண்டிப்பானவர் என்கிற எண்ணம் எனக்கு உண்டு. அவரையே பலமுறை அடக்கமாட்டாமல் சிரிக்க வைத்த பங்கு. அதைவிட எத்தனை பாடல்களை வெகு இயல்பாக பாடினார்.

அருமையான பெண்மணி. எனக்கு என்னவோ நாம் வகுக்கும் கதைகளின் நாயகிகள் யாருமே இவர் அருகில் வரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
 

Sugiy

Member
உங்கள் புண்ணியத்தில் நானும் பார்த்தேன். என்னமா அந்த ரோசி அம்மா கதைக்கிறார் ?:).
 
Top Bottom