You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தமிழ்ச் சொல் அறிக - கவிஞர் மகுடேசுவரன்

நிதனிபிரபு

Administrator
Staff member
நான் எழுதிச் செல்கையில் எல்லாவற்றையும் தமிழிலேயே சிந்தனை செய்கிறேன். அதன்வழியே எல்லாத் தொடர்களும் தமிழாகவே உருவாகும். தொடர்ச்சியான பயிற்சியால் எனது மனப்பழக்கத்தில் பிறமொழிச் சொற்கள் தாமாக நீங்குகின்றன.

கூற விரும்புவது தமிழ்ச்சொற்களாலும் தொடர்தொகைகளாலும் ஆகி நிற்கும். தொகை தொடர் சார்ந்த புலமையானது ஒன்றைச் சுருக்கிக் கூறுவதற்குப் பெரிதும் பயன்படுகின்றது.

எழுதிச் செல்கையில் பிறர் பிறமொழிச் சொற்களை வேறு வழியின்றிப் பயன்படுத்துமிடத்தில் நான் தமிழ்ச்சொற்களைத் தன்னியல்பில் கூறிவிடுகின்றேன். அதனை உணருமிடத்திலும் நான் இல்லை. இவ்விடத்தில் புதிதாய் ஒரு சொல்லினை ஆக்கியிருக்கிறீர்கள் என்று நண்பர்கள் கூறும்போதுதான் அது எனக்குப் புலப்படுகிறது.

என் கவிதை, கட்டுரைகளில் எங்கெங்கே புதுச்சொல் ஆக்கியிருக்கிறேன் என்று இனிமேல்தான் நான் தேடியெடுக்க வேண்டும். அவை தவிர நண்பர்கள் வேண்டியபோது ஆக்கியளித்த சொற்களும் பல. அவற்றினைத் தொகுத்து ஒரு சொல்லேடாக்கித் தரும் திட்டமுள்ளது.

தொடக்கத்தில் நான் ஆக்கியிருந்த புதுச்சொற்களைத் தோழர் காயத்திரி (Gayathri L) தொகுத்து வைத்திருந்தார். அவற்றினைக் கேட்டுப் பெற்றேன். அது முழுமையான தொகுப்பு இல்லைதான், எனினும் அவர் பார்வையில் புதிதாக உணர்ந்த சொற்கள் அவை. அச்சொற்களைக் கீழ்க்காணும் படச்சட்டமாக மேலைநாடுவாழ் தோழமை ஒருவர் ஆக்கித் தந்தார். அவற்றினைக் கடந்த ஆண்டில் தொடர்ந்து வெளியிட்டேன்.

நான் என்னென்ன சொற்களை ஆக்க முயன்றேன் என்பதற்கு எனக்கே ஒரு மறுபார்வை தேவைப்படுகிறது. அதனால் இப்பட்டியலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்பட்டியலில் உள்ள பல சொற்கள் நான் புதிதாக ஆக்கியவை. வேறு பல சொற்கள் முன்பே ஆக்கப்பட்டவை, தொடர்ந்து என்னால் எடுத்தாளப்பட்டவை. எல்லார்க்கும் தேவைப்படுகின்ற புதிய தமிழ்ச் சொற்களின் தொகுப்பு இஃது. இன்றைய அன்றாடப் பயன்பாட்டில் எங்கெங்கும் தேவைப்படுபவை. தமிழாகிய இச்சொற்கள் தேடப்படுகையில் கிட்டாமையால்தான் பிறமொழிச் சொற்கள் இடம்பெற்றுவிடுகின்றன.

மொத்தம் பத்துப் படங்கள். படத்திற்குப் பதினைந்து என்று நூற்றைம்பது சொற்கள். இச்சொற்களை அறிக, பதித்து வைத்துக்கொள்க, உரிய இடங்களில் ஆள்க.

- கவிஞர் மகுடேசுவரன்85247249_2916305621741241_3050144829972414464_n.jpg87065689_2916305531741250_4501975322278756352_n.jpg87153492_2916305188407951_22368017878876160_n.jpg87182161_2916304801741323_949583867184939008_n.jpg87270282_2916305335074603_3560476700963766272_n.jpg87279114_2916305021741301_5850633875432144896_n.jpg87492871_2916304771741326_7840258543088304128_n.jpg87531682_2916305178407952_3495493330379210752_n.jpg87840332_2916304788407991_4946427128003428352_n.jpg85171037_2916305511741252_4250882162535956480_n.jpg
 
Last edited:
Top Bottom