தேங்காய்ப்பூ டொஃபி – ராகவி
தேவையான பொருட்கள்:
½ கிலோ - சீனி
½ கிலோ - துருவிய தேங்காய்ப்பூ
1 டின் டின்பால்
வனிலா இரண்டு தேக்கரண்டி
பச்சை அல்லது ரோஸ் ஃபூட் கலரிங்
செய்முறை :
அடி கனமான பாத்திரமொன்றில் சீனியைப் பாகு காய்ச்சி, நல்ல பாகு பதம் வந்ததும் தேங்காய்ப்பூச் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளுங்கள்.
இந்தக் கலவை இறுகிக்கொண்டு வரும்போது, டின் பால் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். (அடுப்பை நன்றாகக் குறைவாக வைத்துக்கொள்ளுங்கள்.)
இந்தக் கலவையினுள் வனிலா, கலரிங் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். சட்டியில் ஒட்டாத பதம் வருகையில் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் இட்டு மட்டப்படுத்தித் துண்டுகளைக் கீறி விடுங்கள். ஆறியதும், அந்த அடையாளங்களில் கழன்று அழகிய துண்டுகளாக வரும்.