You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தேங்காய் பூ லட்டு

ரோசி கஜன்

Administrator
Staff member
தேங்காய் பூ லட்டு


1543602583332.png


தேவையான பொருட்கள்:

டின் மில்க்(சிறிய டின்) 1

துருவிய தேங்காய் பூ 300 கிராம்

(கடையில் விற்கும் காய்ந்த தேங்காய் பூவும் பயன்படுத்தலாம். பெரிய பூவாக இருப்பின் ஒருமுறை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள்)

வனிலா சிறிது




செய்முறை:

ஐம்பது கிராம் அளவு தேங்காய் பூவை வேறாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மிகுதிப் பூவை டின் மில்க் ஊடன் சேர்த்து அளவான நெருப்பில் கிளறுங்கள். (அடிகனமான பாத்திரம் ஒன்றில்)

கலவை நன்றாகச் சூடானதும் நெருப்பை நன்றாக குறைத்து, சட்டியில் ஒட்டாத பதம் வரைக் கிளறி, வனிலா சேர்த்து இறக்கி சற்றே ஆறவிட்டு, எண்ணெய் தடவிய கையால் லட்டுகளாக உருட்டி, எடுத்து வைத்துள்ள மிகுதிப் பூவில் பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

சுவையான லட்டுகள் தயார்.

--உங்களுக்கு விரும்பினால் கலரிங் சேர்க்கலாம் .

--நன்றாகப் பொடி செய்த கஜு அல்லது ஆமண்ட் சேர்க்கலாம்.
 
Top Bottom