- ஏகன் கதையில் ஒரு பாட்டி role இருக்காம்... உங்களை வரட்டாம்... போறீங்களா?
அதுக்கு ஹன்ஸாவை அனுப்ப போறேன். ஒரு பதினெட்டு வயசு பிள்ளையை பாத்து என்ன கேள்வி?
- ஏகனோட அடுத்த படத்தில் மோகனனை hero வா போட்டு கௌஷிகனை வில்லனா போட்டு காந்தனை comedian ஆஹ் போட்டு ஒரு படம் எடுக்க சொல்லுறீங்களா?
அடேய் ஏன்டா. காந்தனைத்தான் ஹீரோவா போடுவேன். அது ஓகேயா உங்களுக்கு.
- ஹீரோவ திட்டுவது சில சமயம் ரொம்ப ஓவரா போனத பாத்து என்னடா இது இப்படி எல்லாம் திட்டுறாங்க என்று எனக்கு தோணுச்சு....அப்ப நீங்க என்ன நினைச்சிங்க சிஸ்
சில நேரங்களில் அப்படி இருக்கும்தான். ஆனா, கதை அடுத்தடுத்து எப்படி நகரும் என்று எனக்குத் தெரியும் என்பதால் அது என்னைப் பெரிதா பாதிக்கிறது இல்லை.
- உங்க கதை ஹீரோ ஹீரோயின்ஸ் வாரிசுகளோட கதை எழுத நெனச்சிருக்கீங்களா கா?
- Mam mostly unga ellam story lum heroine character different and super
eppadi ippadi yosichi ezhutha mudiyuthu
இதுக்காகத் தனியா யோசிச்சு எல்லாம் எழுதுறது இல்லை. அது அப்படி அமையுது. இல்ல, அப்பிடி ஒரு பெண் இருந்தாத்தான் எனக்குப் பிடிக்குது. சும்மா பயந்த, மிராண்ட குழந்தை மாதிரி ஒரு நாயகிய என்னால யோசிக்கவே முடியாது. அப்படியே கதைக்காக எழுதினாலும் கடைசில நாயகிய மாத்திடுவேன்.
- Epti mam oru character ah Rompa unarvupurvama manasula pathiyara mathiri elutharenga..
உண்மையா இதுக்கு என்ன பதில் சொல்ல எண்டு எனக்குத் தெரிய இல்லையே. எனக்கு பிடிச்ச மாதிரி றழுதுறேன். அது உங்க எல்லோரையும் கவர்வதில் மிகுந்த சந்தோசம்.
- How u people can able to write after completing the household and office works.
எங்க தலை வடிவேலு சொன்ன அதே டிப்ஸ்தான் நானும் சொல்லுவேன். எத பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும். சீரியஸா இதுதான் உண்மை.
நான் எப்பவும் கதையைக் கருவா மைண்ட்ல மட்டுமே வச்சு ஆரம்பிக்க மாட்டேன். குறைஞ்சது 30 பக்கத்துக்கு மேல நோட்ஸ் இருக்கும். அதைவிட தொடக்கம், நடுவில் என்னாகும், பிறகு எப்படி போய் முடியும் எண்டு எழுதி வச்சுடுவேன். இது எனக்கு கிளியர் ஆகாம கதை தொடங்கவே மாட்டேன். பல நேரங்களில் எழுத்தாளர் திணறும் இடம் ‘கதையை இனி எப்படி நகர்த்துவது’ என்கிற இடத்தில்தான். கதை முழுக்க நீங்க எழுத்து வடிவில வச்சிருந்தா அந்தத் திணறல் வராது.
ரெண்டாவது, சீன்ஸ், இந்தக் கதைல நான் சொல்லப் போற முக்கிய பொய்ண்ட்ஸ் எல்லாமே என்னிடம் இருக்கும்.
சுருக்கமா சொல்லப்போனா முன்னாயத்தம் மிக மிக முக்கியம். நானும் எட்டு மணித்தியாலம் குறையாம வேலை பாக்கறேன். ரெண்டு பிள்ளைகள் யுனிவர்சிட்டி போறாங்க. ஒரு நாள் கடையில் உணவு வாங்க சம்மதிக்கவே மாட்டேன்.
எல்லாத்தையும் விட சமைக்கிற போது, வீட்டு வேலைகள் செய்கிற போது ஏதாவது ஐடியாஸ் வந்தா உடனே வொயிஸ் ரெக்கோடரில் ரெக்கோர்ட் செய்து வச்சிடுவன்.
- NIM kku epilogue varuma
- Life is full of ups and down. Aegan and dhuvi real life couples thaan. அதும் லவ் couples ku intha தடங்கள் எல்லாம் பெருசா வர்ருறது, ஃபீல் தான். இந்த ideology தோன enna reason akka. Neenga thuvi and aegan distance lifestyle ku Enna solution crctaa irukum நினைக்கிறீங்க from your vieww.
இந்த ideology தோன enna reason akka. : நீங்க எந்தளவு படிச்சிருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், செல்வத்தில் மூழ்கி இருந்தாலும் சில நம்பிக்கை துரோகங்களை, சில பல ஏமாற்றங்களை, துன்பங்களை, சிக்கலான தருணங்களை கடக்காமல் உங்க வாழ்க்கை பயணம் முடியவே முடியாது. இதுதான் நிதர்சனம்.
இன்னும் வடிவா சொல்லப்போனா நாம் காணும் கனவுக்கும் நாம் வாழும் வாழ்க்கைக்கும் சம்மந்தமே இருக்காது. சிலதுகள் நடக்கும் தவிர்த்து அத்தனையும் நடக்காது. அதைவிட இப்படியான மேடு பள்ளங்கள் இருந்தால்தான் வாழ்க்கையும் ருசிக்கும் எண்டு நினைக்கிறேன். சாதாரண ஒரு கதை என்று பார்த்தாலே நாயகனும் நாயகியும் கொஞ்சிக்கொண்டே இருந்தா கடுப்பாயிடுமா இல்லையா. அப்படி இருக்கிறபோது ஐம்பது வருடங்களுக்கு மேலான ஒரு வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கும், அதுதான் இயல்பும் எண்டு நினைப்பேன். அதைத்தான் கதைகளிலும் சொல்ல முயலுவேன்.
Neenga thuvi and aegan distance lifestyle ku Enna solution crctaa irukum நினைக்கிறீங்க from your vieww.
அவன் சென்னையிலும் அவள் இலங்கையிலும் இருப்பதுதான் பொருந்தும்மா. சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவனின் பேட்டி பாத்தேன். பிள்ளைகளின் அத்தனை நிகழ்வுகளிலும் தான் இருப்பதாகச் சொன்னார். அதற்கு ஏற்ற மாதிரித்தான் ஷூட்டிங்க்கான செடியூலும் போடுவாராம். அதே மாதிரி நடிகர் சூர்யா. இங்கயும் பிளான்தான் தேவை. மற்றது இலங்கை இந்தியா பெரிய தூரமும் இல்லை. மாதம் ஒரு முறையாவது போய்வரலாம்.
அதைத் தாண்டி அவன் இலங்கைக்கே வருகிறான் என்பதும், அவள் இந்தியா போய் இருப்பதும் செயற்கைத்தனமாக இருக்கும்.
எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை அமைவதில்லைதானே. கப்பலில் வேலை செய்கிறவர்களை யோசிச்சு பாருங்க. இவர்கள் பத்து வருடங்கள் பிரிந்து இருந்ததால் ஆரம்பத்துக்கு இந்த பிரிவு கொடுமையாத்தான் இருக்கும். நாளடைவில் அந்த வாழ்க்கை முறைக்கு பழகிடுவினம்.
- Rendu question 1 Yepadi ippdi yella storyum arampam sada irunthalum mudivula antha herova yethukkura pola yengala meshmaraishing panna mudiuthu. 2 Unmaiyil feel good storyna meaning yenna purila pls help me
ஹாஹா, எனக்கும் பீல் குட் க்கான சரியான விளக்கம் தெரியாது. நான் நினைக்கிறேன், அளவுக்கதிகமான சோகமோ, துயரமோ, சந்தோஷமோ இல்லாமல், அதே நேரம் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிச்சு வாசிக்க வாய்க்கும் ஒரு நாவல் பீல் குட் வகையாக இருக்கலாம்.
- Epilogue உண்டா இல்லையா சொல்லுங்க sis
- Nesathin innoru mugam epilogue irukka ah sis
- Hello Nitha mam.. Nan unga stories ellamae padichirukaen.. silathuku review kuduthurukaen.. ungaloda characters ellamae manasula appadiyae ottipanga.. enaku ungakitta pudicha visayam kathai romba yathaarthama irukum.. Hero heroine ku buildup illama avanga physical appearance pathi sollama namma pakathula iruka characters mathiriyae feel panna vaipinga.. Enaku ungakitta keka vendiya question enna na.. ' கதைக்கான கருவையும் கதை மாந்தர்களையும் எப்படி தேர்ந்தெடுப்பீங்க..??
மிக்க மிக்க நன்றி. ஆரம்ப காலத்து கதைகளில் நானுமே அங்ககங்க அழகை வர்ணிச்சு இருக்கிறேன்தான். ஆனா, இப்ப அதெல்லாம் விருப்பம் இல்லை.
அழகினால் ஒருவர் மற்றவரைக் கவர்வதை விட அறிவால், புத்தி சாதுர்யத்தால், தன் நிமிர்வால், நேர்மையால் கவர்வதுதான் நிரந்தரம். அதுதான் சரியும் என்று நினைக்கிறேன்.
கதைக்கான கரு எண்ணெய் பாதிக்கிற ஏதாவது ஒரு விசயம். அடுத்ததா எழுதப்போரை ஒரு கதை கூட இப்ப சமீபத்தில் என்னை பாதித்தது வச்சுத்தான் எடுத்தேன். அந்தக் கதைக்கு தேவையான மாதிரி கதை மாந்தர்கள் வந்து பொருந்துவாங்க.
- எந்தன் உறவிற்கு ஒரு உயிர் கொடு நான் படித்த உங்கள் முதல் நாவல் அதிலிருந்து இந்த நாவல் வரை உங்க எழுத்துக்கள் என்னை நிறைய தடவை அழ வைத்தும் சந்தோஷ படுத்தியும் உற்சாக படுத்தியும் இருக்கு. என்னுடைய கஷ்ட காலங்களில் என் மன அழுத்தமங்களை நீக்கி எனக்கு உற்ற துணையாக இருந்த உங்கள் எழுத்துருக்களுக்கு மிக்க நன்றி
மிக்க மிக்க நன்றியும் அன்பும்.
- எழுத்துப்பிழை இல்லாமல் எப்படி எழுதுவது
இதுக்கு நான் பதில் சொல்லலாமா தெரியாது. அந்தளவில் இந்தமுறை நிறைய எழுத்துப்பிழை விட்டுத்தான் எபிஸோட்ஸ் போஸ்ட் பண்ணி இருக்கிறேன். ஆனா, ஒவ்வொரு முறையும் அடுத்த அத்தியாயம் எழுத முதல், முதல் அத்தியாயத்தை வாசித்து கரெக்ஷன் செய்துடுவேன்.
திரும்ப திரும்ப வாசிக்கிறபோது எழுத்துப்பிழைகள் நம் கண்ணுலே படும்தானே.
- உங்க படைப்புகளில் வர்ர எல்லா கேரக்டர்சும் நீங்க பிடிச்சு தான் எழுதி இருப்பிங்க.....இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நீங்களே ரசிச்ச உங்களுக்குப் பிடித்தமான ஹீரோ அண்ட் ஹீரோயின் பேர் சொல்ல முடியுமா மேம்....
சொன்னா அடிப்பாங்களே ஹாஹா. ஆனா உண்மையா எனக்கு எல்லாரையும் பிடிக்கும். ஒவ்வொருத்தரா யோசிச்சு பாத்தா அப்பிடித்தான் இருக்கும்.
- கேட்க வேண்டியதை ஏற்கனவே நிறை கேட்டுட்டேன்... நான் யாருனு சொல்லுங்க
எப்பிடி இப்பிடி கண்டு பிடிக்கிறது சொல்லுங்க?