• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - அறிமுகம்

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் ஹாய்,

பெரிய அழுத்தங்கள் இல்லாத நாவல்களை வாசிக்கையில் நானும் இப்படியான கதைகளை எழுத வேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி எண்ணி எழுத அமர்ந்தால் ஒரு வார்த்தை கூட வராது.

அழுத்தமாக எழுதுவதுதான் என் இயல்பு போலும். அப்படி எழுத வேண்டும் என்று எப்போதும் நினைப்பதில்லை. ஆனால், அப்படியான கரு அமைந்தால் மட்டுமே அந்தக் கதையில் சொல்வதற்கு ஏதோ இருப்பதுபோல் எனக்கு இருக்கும். அப்போதுதான் அடுத்தடுத்து என்று எழுதவும் வரும்.

அப்படி அமைந்த கருதான் நீ தந்த கனவு. கதையை எழுதிய நாள்களில் அதை முடிக்க முடியாமல் இடையில் நிறுத்தி, ஆறு மாதங்களுக்கு மேல் மனத்தளவில் போராடி முடித்த நாவல்.

கதையைப் பற்றித் திட்டம் போடுகையில் வெகு இலகுவாகப் போட்டுவிடுவேன். அதைக் காட்சிகளாக்கிக் கதையாக மாற்றுவதற்குள் எனக்குள் பெரும் போராட்டம் ஒன்றையே நிகழ்த்தி முடித்துவிடுவேன்.

காண்டீபனின் பகுதி திட்டமிட்டதைப் போல் அல்லாமல் வேறு வகையில் முடிக்க முடியாதா என்கிற கேள்வியும், திட்டம் போட்டதுபோல் எழுத உனக்குத் தைரியம் இல்லையா என்கிற கேள்வியும் என்னைச் சுழற்றியடித்த நாள்களை என்னால் மறக்கவே முடியாது.

கடைசியாக, பிடிவாதமாக நின்று நினைத்ததுபோலவே எழுதி முடித்தபிறகு மிகுந்த ஆசுவாசம். வாசகர்களுக்கு எப்படியோ தெரியாது. எனக்குப் பெரும் நிறைவைத்த தந்த நாவல் இது.

செய்திகளாக வருகிறவற்றை எழுத உண்மையான செய்திகளையே உதாரணமாக எடுத்திருக்கிறேன். நீதிமன்ற தீர்ப்பு எழுத, கோர்ட் சீன் எழுத என்று இந்த நாவலுக்காக நான் செய்த முன்னாயத்தங்கள் பல.

நீ தந்த கனவு இதோ மீண்டும் மீள் வாசிப்புக்காக உங்களிடம் வந்திருக்கிறது. பெரும்பாலும் இதுதான் இந்த வருடத்திற்கான கடைசி ரீரன் நாவலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது முடிந்ததும் மூன்று வாரமளவில் வரமாட்டேன். அதன் பிறகு புது நாவல் ஆரம்பிக்கலாம். சரியா ?
 

Goms

Active member
இந்த கதையை கிண்டிலில் வாசித்திருக்கிறேன். நெஞ்சை கணக்க வைத்த நாவல். எடுத்த கதையை அழுதுகொண்டே விடாப்பிடியாக முடிவுவரை தெரிந்து கொள்ள 2 நாட்களில் படித்து முடித்தேன் 😭😭😭
ஒரு ஒரு அத்தியாயமாக காத்திருந்து படிப்பது ரொம்ப கஷ்டம் நிதாமா 🥺🥺
 

Goms

Active member
உங்கள் புதிய கதைக்காக நாங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம் 💞💞💞🥰🥰🥰
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom