You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நீ தந்த கனவு! - கருத்துத் திரி

Pranavlax

New member
ஹாய் ஹாய் ஹாய்,

எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? நிறைய நாட்களாக உங்க எல்லோரிடம் இருந்தும் விலகியிருந்த உணர்வு. அடுத்த வருடப் புத்தகத் திருவிழாவுக்காக ஒரு கதை எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதனால் தான் வர முடியவில்லை. அப்படியே, கதை எழுதாமல், மற்றவர்களின் கதைகளை வாசித்தபடி, சோம்பலாகக் கழியும் நாட்களையும் கொஞ்சம் அனுபவித்துக்கொண்டேன். நன்றாகத்தான் இருந்தது. அதேநேரம், என்ன இது ஒன்றுமே எழுதாமல் இப்படி நாட்களைக் கடத்துகிறோமே என்று ஒரு கேள்வியும் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது.

அதனால், இதோ மீண்டும் வந்தாயிற்று.


View attachment 822 எழுதும்


View attachment 821


தலைப்பு நன்றாக இருக்கிறதா? தலைப்புக் கதையைச் சொல்லிவிடக்கூடாது என்கிற கவனத்தோடு வைத்த தலைப்பு. இருந்தாலும், ஏதாவது உங்களால் ஊகிக்க முடிகிறதா என்று சொல்லுங்கள், பார்க்கலாம்.

முழுக்க முழுக்க இது கற்பனைதான். இருந்தாலுமே, சிற்சில நிஜங்களைத் தழுவி வர இருக்கிறது. அதேநேரம், கசப்பான உண்மைகளையும் பேசப்போகிறது. வேற என்ன சொல்ல கதையைப்பற்றி? நிறையப் பாத்திரங்கள் வர இருக்கிறார்கள். அழுத்தமான கருவாக இருப்பதற்குத்தான் அதிகளவில் சாத்தியம் இருக்கிறது. அதேபோல, பெரிய கதையாக வரும் என்றுதான் நினைக்கிறேன். எப்போதுமே கதையை முழுமையாக வட்டமிட்டபிறகுதான் ஆரம்பிப்பேன். இது, யோசிக்கும்போதே ட்ரெயின் பெட்டிகள் போல் நீண்டுகொண்டே போவதால் ஓரளவுக்குத்தான் யோசிக்க முடிகிறது. மிகுதியைப் போகிற பாதையில் பார்த்துக்கொள்வோம் என்று எண்ணியிருக்கிறேன். இத்தனை வருடங்களாக எழுதிய அனுபவம் கைகொடுக்காதா என்கிற அசட்டுத் தைரியமும் சேர்ந்திருக்கிறது.

முக்கிய குறிப்பு: இது ஒன்றும் புதுக்களம் அல்ல! பலர் கையாண்ட ஒன்றை நான் முதன்முதலாகக் கையில் எடுத்திருக்கிறேன். அவ்வளவுதான்.

முதல் அத்தியாயம் எப்போது என்று தெரியாது. பாத்திரங்களின் பெயர்களையும் இனித்தான் தேடப்போகிறேன். இருந்தாலும், அறிவிப்புப் போட்டுவிட்டால் விரைவில் வந்துவிடுவேன் என்கிற நம்பிக்கையுடன்,

நட்புடன் நிதா.
?????
 
Top Bottom