You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க உதவுகின்ற வழிமுறைகள் சில!

Sarani

New member

அமைதியான வாழ்வுக்கு மிக மிக முக்கியமானதொன்று உடல் ஆரோக்கியம். சகலவித செல்வங்களும் வசதிவாய்ப்புகளும் நம்மிடமிருந்தாலும் உடல் ஆரோக்கியமில்லையெனில் நிறைவான மகிழ்வென்பது அங்கே கேள்விக்குறியாகி விடுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் என்னதான் தொழில்நுட்ப, விஞ்ஞான வளர்ச்சி எம்மை முன்னேற்றப் பாதையில் கை பிடித்து அழைத்துச் சென்றாலும், நோய்களின் பாதிப்பு அதுவும் புதிது புதிதானவை, மிக இளம் வயதிலேயே எம்மைச் சீண்டிச் செல்வதை, திக்குமுக்காட வைப்பதையும் தவிர்க்க முடியாதுள்ளது.

இதற்கான முக்கிய காரணங்கள் யாதென்று சற்றே யோசித்தாலும் வாழ்க்கைமுறை, சூழல் பாதிப்பு என்பவற்றோடு போட்டிபோட்டுக்கொண்டு நம் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முன்னணியில் வந்து நிற்பதையும் தவிர்க்க முடியாது.

பொதுவாக இன்றைய நாட்களில் எமது உணவுப்பழக்கமானது நோய் எதிர்ப்புச்சக்தியை எமக்கு வழங்கும் தன்மையற்றதாக இருப்பதே, உடலைப் பாதிக்கக்கூடிய கிருமிகளின் வீரியத் தாக்கத்துக்கு நாம் ஆழாவதன் முதல் காரணமாக இருக்கிறது.

நோய் எதிர்ப்புச்சக்தியை பிறப்பிலிருந்தே பெற்றுக்கொள்வது ஒருவகையென்றால், தேவையான சத்துகள் கொண்ட உணவு மற்றும் சீரான, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் அவற்றைத் தக்கவைத்துக் கொள்ளவோ அதிகரிக்கவோவும் முடியும்.



அப்படி, தேவையான சத்துகள் கொண்ட உணவு மற்றும் சீரான ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் நோய் எதிர்புச்சக்தியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம், அதிகரிக்கலாம் என்பதை இங்கே பார்ப்போமா.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:

மஞ்சள்:

1582913238152.png

மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிரிக்க உதவும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து காக்கும்.



இஞ்சி:

1582913276969.png


நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்திகொண்ட இஞ்சி, உடலை காக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை அதிகம் கொண்டுள்ளது.



பூண்டு:

1582913331525.png




ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட பூண்டிலுள்ள அல்லிசின் என்ற உட்பொருள் தரும் பல நன்மைகளில் ஒன்றாக பாக்டீரியாக்களை, தொற்றுக்களை எதிர்த்து அழிக்கவல்லதாகும். அதுவும் பச்சையாக உட்கொள்கையிலேயே அல்லிசின் பயன் எமக்கு முழுமையாகக் கிடைக்கும்.


 

Sarani

New member
வெங்காயம்:

1582913652145.png


வெங்காயத்தில் உள்ள செலினியம் ( Selenium) தாதுச்சத்து நோய் எதிர்ப்பு செயல்பாட்டைத் தூண்டும் தன்மையுடையது. இதிலுள்ள 'அலிலின்' பாக்டீரியாக்கள், நச்சுகள் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.





பார்லி, ஓட்ஸ்:

1582913706553.png 1582913726599.png



பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன.





சர்க்கரைவள்ளி கிழங்கு:


1582913785372.png


இக்கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது.



காளான்:



1582914028097.png


உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.
 

Sarani

New member
பழங்கள் :

1582914396613.png

நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன . இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.

1582914418525.png 1582914456392.png

அதுவும் , ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரி பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.



எலுமிச்சை:

1582914100161.png


எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்புச்சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.



கீரைகள், காய்கறிகள்:


1582914130163.png

பச்சை நிறக்கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன.

பீட்ரூட், கத்திரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடமிளகாய் போன்றவையும் அவசியம் வேண்டும்.
 
Last edited:

Sarani

New member
தயிர், பால் உணவு:


1582914216651.png


தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் 'ப்ரோபயாட்டிக்' எனும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகளவு சுரக்க உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறன. செரிமான உறுப்புகளை, குறிப்பாக, குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன.





தேனீர் மற்றும் கோப்பி:

1582914250165.png 1582914260215.png


இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. அளவோடு உட்கொள்கையில் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளைத் தடுக்கவல்லவை.



அதோடு க்ரீன் டீயில் உள்ள கேட்டச்சின் (Catechins) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கும். புற்றுநோய், இதய பாதிப்புகளிலிருந்தும் காக்கிறது. அதேநேரத்தில், இரண்டு தடவைக்கு மேல் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.




தண்ணீர்:

1582914293658.png


தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.




நட்ஸ்:



1582914332213.png

பாதாம் பருப்புப் போன்ற நட்ஸ் வகைகளில் மாங்கனீஸ் (manganese), வைட்டமின் ஈ சத்துகள் நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கிறது.





 

Sarani

New member
இவற்றோடு,



போதியளவு தூக்கம்:



1582914546183.png




உடலில் வளர்ச்சி மாற்றங்கள் சிறப்பாக நடைபெற உறக்கம் மிகவும் அவசியமாகும். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்புச்செயல்பாட்டைப் பாதிக்கிறது. எனவே, நோய் எதிர்ப்புச்சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தையும் தவிர்ப்பதும் அவசியமானது.



புகைத்தல் :


1582914614747.png

சிகரெட்டில் உள்ள புகையிலை (Tobacco) உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளை அழித்து, நோய் எதிர்ப்புச்சக்தியை குறைக்கிறது. மேலும், நுரையீரலில் உள்ள திசுக்களை அழிக்கவல்லது. இதனால், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவின் ஆபத்தை அதிகரிக்கிறது,




மது அருந்துதல்:

1582914654195.png

அதிலுள்ள ஆல்கஹால், வைட்டமின் மற்றும் கனிமச் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை தடுக்கிறது. மேலும், வெள்ளையணுக்களை அழித்து நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதற்குக் காரணமாகிறது.





மேலேயுள்ள விடயங்கள் எம்மில் பலருக்கும் புதியவையாகக் கூட இல்லாதிருக்கலாம் . இருந்தாலும் நாளாந்தம் கடைப்பிடிப்பதில் பல சிக்கல்கள் இருக்கலாம். துரிதகதியில் இயங்கும் எம் வாழ்க்கை முறையில் நின்று நிதானித்து இவற்றை ஆராய்ந்து உணவை உட்கொள்ள நேரமில்லாதிருக்கலாம். ஆனாலும்," எதற்காக இந்த ஓட்டம்?" என்ற கேள்வி எம்மை நிதானிக்க வைக்கும்.


'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' . அச் செல்வத்தை முதலில் தக்கவைத்துக்கொண்டு மிகுதியைத் தேடுவோமே!




படங்கள் : இணையம்
 

ரோசி கஜன்

Administrator
Staff member
மிகவும் பயனுள்ள அருமையான ஆக்கம் சரணி . பகிர்வுக்கு மிக்க நன்றி !
 
Top Bottom