You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பந்து - மதிசுதா

ரோசி கஜன்

Administrator
Staff member
பால்ய பருவம் எத்தனை கொடுமை நிறைந்ததாய் இருக்கட்டும் வறுமை நிறைந்ததாய் இருக்கட்டும், பின்னாட்களில் அப்பருவத்தை மீட்டிப் பார்க்கையில் அழகான நினைவுகளை மட்டுமே தருவதுதான் அதன் அதி உட்சபட்ச சிறப்பியலே!



அப்படித்தான் இங்கே ஒரு மனிதனும், தன் தேசம் தொலைந்து எங்கோ ஒரு தேசத்தில் அடையாளம் தேடிக்கொண்டிருக்கும் அனாதையாக வாழ்கிறான். அவன் அமர்ந்திருக்கும் பூங்காவுக்கு வரும் குழந்தைகள் ஒரு பந்துடன் விளையாடுகிறார்கள். அது மண்ணுக்குள் உருண்டு ஓடிவிடவும், அப்படியே விட்டுவிட்டுத் தம் பயணத்தைக் தொடர்ந்தும் விடுகின்றனர். அங்கிருந்தவனுக்கோ, அப்பந்து அவனது பால்யத்தை கண்முன்னே கொண்டு வந்து விடுகிறது!



பத்தோடு பதினொன்றாக தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறார்கள் இன்றைய குழந்தைகள். அன்றைய குழந்தை அவன், அதே பந்துக்காக ஒவ்வொரு ரூபாயாகச் சேமிக்கிறான்.



கடைக்காரர் சொன்ன எண்பத்தியைந்து ரூபாயைச் சேமித்துக்கொண்டு அவன் போகையில், தொண்ணூறு ரூபாயாக விலை உயர்ந்து அந்தப் பந்து எட்டாக்கனியாகவே இருக்கிறது அவனுக்கு.


ஏழ்மையின் புதல்வனால் சேர்த்த பணத்தில் கூட பந்து வாங்க முடியாமல், தம்பிக்கு கொம்பாஸ் வாங்கக் கொடுத்துவிடுகிறான்.



அவனால் மீண்டும் பந்து வாங்க முடிந்ததா? அவனுடைய ஏக்கமும் ஆசையும் தீர்ந்ததா? குறும்படத்தைப் பார்த்தால் மட்டுமே, அது சொல்லவரும் மெல்லிய அழகான அந்த உணர்வை உங்களாலும் உள்வாங்கிக்கொள்ள முடியும்!

மீண்டுமொருமுறை உங்களின் சிறுவயதுப் பருவத்துக்குப் போய்வரலாம்!



நீங்களும் பார்த்து ரசிக்க:


 
Top Bottom