பருத்தித்துறை வடை

தேவையான பொருட்கள்:
உளுந்து 1 கப் (நான்கு மணிநேரம் ஊறவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள்)
அவித்த கோதுமை மா 1 கப்
அவிக்காத கோதுமை மா ½ கப்
2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
2 தேக்கரண்டி கட்டைத்தூள்(chilli flaks...தேவையான உறைப்புக்கு ஏற்ப சேர்க்கலாம்.)
உப்பு - அளவாக
பொரித்தெடுக்க எண்ணெய்
செய்முறை:
உளுந்து, அவித்த மா, அவிக்காத மா, பெருஞ்சீரகம், கட்டைத்தூள், ருசிகேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
அதோடு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.( ஆலிவ் ஒயில் அல்லது நீங்கள் சமையலுக்குப் பாவிக்கும் எண்ணெய் )
இந்தக் கலவையை குளிர்ந்த நீர் சேர்த்து ரொட்டி மா( சப்பாத்தி மா) பதத்திற்குக் குழைத்து , கொட்டைப்பாக்களவுக்கு உருண்டைகளாக்கிக் கொள்ளுங்கள்.
அந்த உருண்டைகளை உங்கள் உள்ளங்கையில் வைத்தே வட்டவடிவமாக மெல்லியதாக தட்டி, கொதிக்கும் எண்ணையில் போட்டு பொன்னிறமாக வர இறக்கலாம்.
சூடு ஆறியதும் காற்றுப் புகாத வகையில் பத்திரப்படுத்தினால், ஒரு மாதத்தின் பின்னரும் மொறுமொறுவென்று இருக்கும்.