You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பூவே பூச்சூட வா..!- கருத்துத் திரி

Hi Nitha mam...

கதை மிகவும் அருமையாக இருந்தது.. அதிரூபனின் உணர்வுகளை அழகாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.. படிக்கும் போதே கண்கள் கலங்கிவிட்டது.. மிருணாளினி., வானதி கதாபாத்திரங்கள் அருமை... வானதி எழுதிய கடிதம் ., அதிரூபனின் மனப்போராட்டம், மிர்ணாவின் குறும்பு., எல்லாமே நன்றாக இருந்தது..
 

Gowri

Active member
அக்கா வாவ் சிம்பலி சூப்பர் .....ரசிச்சி ரசிச்சி படிச்சேன் நான்...... ஆரம்பிக்கும் போது அப்படி ஒரு வலி..... ஐயோ அதிரூபன் வாழ்க்கை இப்படி ஆகி இருக்க வேண்டாம் அப்படினு தோணினது..... அதுக்கும் மேல வானதி ..... ஆனா ரெண்டு பேருக்கும் இடையில் தாரகன் ரூபிணி ....... உங்க எழுத்தை விமர்ச்சிக்க எனக்கு அறிவு பத்தாது ....ஆனா ரசிக்க ஆசை நிறய இருக்கு...... அப்படி ஒரு எழுத்து..... மிருணா வோடான அதிரூபன் வாழ்வு ஆனா ஆரம்பிச்ச வேகத்திலே முடிஞ்சி போன கொடுமை .....அதை ஏற்கவும் முடியாம மறக்கவும் முடியாம அவன் படுற பாடு......வானதி புருஷனை நினைச்சி பிள்ளை சும்மந்தால் இவ பிள்ளை சம்மந்து கிட்ட பிறகு பிள்ளை தகப்பனை புருஷன நினைச்சி கிட்டே வாழுற..... அவளோட தயக்கம் பாசம் குறும்பு எல்லாமே அழகு...... கலைவாணி அம்மா சங்கரி எல்லாமே அவுங்க அவுங்க அளவுக்கு நிறைவான இருந்தாங்க..... சூப்பர் அக்கா அருமை ஓ அருமை

அப்படியே என் மனசை புட்டு புட்டு வைச்சிட்டீங்க போங்க. ஒவ்வொரு சொல்லும் அப்படியே நான் சொல்ல நினைச்சது மாதிரி இருக்கு. ஆனால் நான் கூட இவ்வளவு அழகா என் எண்ணங்களை சொல்லியிருப்பேனா என்பது சந்தேகம். சூப்பருங்க!!
 

Gowri

Active member
நிதாக்கா எப்படி உங்களால இப்படியெல்லாம் எழுத முடியுது. நான் உங்களோட ஒவ்வொரு கதையையும் வாசிச்சு அதில் இருந்து வெளிவர முடியாம என்னை ஆசையா நானே அந்த கதைகளில் கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்டு வர்றேனு தான் சொல்லனும்.
ஓவ்வொரு கதை படிக்கும் போதும், இந்தக்கதையை விட சிறப்பா ஒரு கதையை எழுதவே முடியாதுனு நான் வாசிக்கும் போது நினைப்பேன். ஆனால் அந்த நினைப்பை நீங்க ஓவ்வொரு முறையும் பொய்யாக்கறீங்க. நானும் சந்தோஷமாவே(ரொம்ப) என் தோல்விய ஒத்துக்கொள்கிறேன்.
நான் எல்லாப் பதிவுக்கும் பின்னூட்டம் இடமாட்டேன். ஆனால் ஓவ்வொன்றையும் ரசிச்சு வாசிப்பேன். இந்தப் பெரிய பதிவு அந்தக் குறையை போக்கிடுச்சுனு நம்பறேன்.

இந்தக் கதையில எனக்கு ஏனோ வானதியின் மேல் தனி பிரியம். அதிரூபன் படும் பாட்டை எங்களாலேயே தாங்க முடியவில்லை. கண்ணீர் எட்டி பார்த்திடுச்சு. சங்கரி, கலைவாணி அம்மா கதாபாத்திரங்கள் இயல்பாக இருந்தார்கள். மொத்தத்தில் அருமையோ அருமை!
 

Jasha

New member
நான் மிகவுமே உள்ளார்ந்து எழுதிய பதிவு. எப்படி இருக்கிறது என்று சொல்லவேண்டும். அப்போதுதான் உற்சாகமாக அடுத்த பதிவுகளை நான் எழுத முடியும். உங்கள் கருத்துக்களை இங்கேயே சொல்லுங்கள்.
உருக்கமான பதிவு...
கண்ல வச்சிட்டிங்க...
என்ன சொல்லி ஆத்துறது...
கொட்டிட்டிங்க மனைவி இழந்த துயர்..துன்பமான துடிப்பு....எனக்குள்ளும் ....நிதாக்கா
வார்த்தைல மொத்தமா சொல்ல முடியல...ஒரு கடிதம் கொண்டு சென்ற நினைவும் ...ஒரு பிரசவம் கொண்டு சென்ற காதல் மனைவியுமா தத்தாளிக்கும் ரூபன்...
இன்னும் முழுசா கதைய படிச்சிட்டு வாரன்...
 

JAnnath fir

New member
Naan padikum muthal kathai ithu. Kathaiyoda review parthu padika aarabichan romba nalla iruku oru thozhi sonnathu pol muthalil manam muluvathum valika vaithu vittergal pin santhosam vanthathu romba nal kalithu oru kathai en manathai migavum baathithathu unga ezhuthu pani thodara en vazthukal thozhi
 
Top Bottom