You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

மதியம் என்ற சொல்லின் பொருள்

நிதனிபிரபு

Administrator
Staff member
மதியம் = Night with moon (not afternoon)



## பொதுவாகவே `மதியம்` என்றால் நண்பகல் என்றே பலரும் நினைக்கின்றோம். உண்மையில் தமிழில் மதியம் (மதி{நிலா}+அம்) என்பது ‘நிலவுடனான_இரவினையே’ குறிக்கும். இதற்குச் சங்கத்தமிழிலேயே சான்று உண்டு. மதுரை வேளாதத்தன் என்ற சங்க காலப்புலவர் குறுந்தொகை (315) இல் பின்வருமாறு பாடுகின்றார்.



“எழுதரு மதியங் கடற்கண் டாஅங்

கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்

ஞாயி றனையன் றோழி

நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே”



இங்குள்ள மதியம் என்ற சொல்லிற்கு பிறைத் திங்கள் என்றே பொருள் கொள்ளப்படுகின்றது.

சங்க காலம் எல்லாம் மிகவும் பழையது என்று நினைத்தால் இதோ திருவாசகத்திலிருந்து இன்னொரு சான்று.



“கொன்றை மதியமும், கூவிளம், மத்தமும்,

துன்றிய சென்னியர் அன்னே என்னும்!...” - மாணிக்க வாசகர்.



இங்கும் மதியம் என்பது நிலவினையே குறிக்கும்.

திருநாவுக்கரசர் பாடிய ஒரு தேவாரப்பாடல் இதோ

"மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்"

( மாலைமதியம் = மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி)



## அவ்வாறாயின் பின் எவ்வாறு மதியம் என்பது நண்பகல் என மாறியது என வியக்கிறீர்களா?

விடை: தமிழ் மறைப்பு & தமிழ்ச் சிதைப்பு



அதாவது மத்தியானம் என்ற சமசுகிரதச் சொல் தமிழில் திணிக்கப்பட்ட விளைவே அது. முதலில் மத்தியானம் என்ற சொல் திணிக்கப்பட்டு, பின்னர் மதியம் என்ற சொல்லின் பொருள் மறைக்கப்பட்டு, இறுதியாக மத்தியானத்தின் சுருக்கமே மதியம் என முடிக்கப்பட்டது. தமிழனோ வழமைபோல பூம்பூம் மாடு போல தலையாட்டியதன் விளைவே இது.



குறிப்பு- இன்றும் தமிழகத்தின் சில ஊர்ப்புறங்களில் மதியம் என்பது முழுநிலா நாளையே(நிறைமதி- Full moon day )குறிக்கின்றது.



சுருக்கின்; மத்தியானம் என்ற சொல் தமிழல்ல, அதனைத் தவிர்த்து நண்பகல்/ நடுப்பகல் என்ற சொல்லினையே பயன்படுத்துங்கள். மதியம் என்பது நிலவினையே குறிக்கும்.



விழித்தெழுவோம், முடியுமானவரை கிரந்தம் தவிர்த்துத் தமிழ் புழங்குவோம்.
 
Top Bottom