• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மின்னிதழ் 6 ல் வெளிவந்த பகுதி 2

ரோசி கஜன்

Administrator
Staff member

வி. இ. குகநாதன் அவர்கள் எழுதிய ‘கிரந்தம் தவிர் தமிழ் பழகு’ எனும் ஏட்டிலிருந்து.

தனித்தமிழ் பயன்பாட்டுக்குச் செய்ய வேண்டியவை:


1.முடியுமானவரை தமிழில் உள்ள 247 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.



2.கிரந்த எழுத்துக்களை ஸ, ஷ, ஜ, ஹ போன்றவற்றை தவிருங்கள். (எடுத்துக்காட்டாக ஹிந்து என்பதை இந்து எனவும் ரஸ்யா என்பதனை இரசியா எனவும் எழுதவும்.)


3.கிரந்தச் சொற்களுக்குப் பதிலான தூய தமிழ்சொற்களைப் பயன்படுத்துங்கள்.

(பட்டியல் இணைப்பைக் காணலாம்)



4.புதிய சொற்களின் தமிழ் மொழியாக்கம் அறிந்து பயன்படுத்துங்கள்

(எடுத்துக்காட்டு: Pen Drive-விரலி, Whatsapp- புலனம்)




கிரந்தம் தவிர் தமிழ் பழகு!



அசடு -பேதை, பேதைமை

அசடுவழிதல் -அறியாமை

அசம்பாவிதம் -நேரக்கூடாதது

அசரீரி -உருவிலி, வான் ஒலி

அசுரன் அரக்கன், மாந்தன்

அதிதி விருந்தாளி

அந்திமம் கடைசி, இறுதி

அநாதி அறிவுக்கெட்டாப் பழமை

அநாதை ஏதிலி

அப்பாவி பேதை, குற்றமிலி

அப்பியாசம் பயிற்சி

அபயம் அடைக்கலம்

அபாரம் அளவின்மை

அம்சம் அழகு, நற்பொருத்தம்

அமரர் இறப்பிலார்

அமிலம் புளிக்காரம்

அர்ச்சகர் -பூசகர்

அர்த்தம் -பொருள்

அருவம் -உருவமற்றது

அலங்கரித்தல் -புனைதல்

அலாதி -தனிச்சிறப்பு

அவகாசம் -காலநீட்டிப்பு

அவசரம் -விரைவு

அன்னம் -சோறு

அன்னியன் -அயலன்

அனர்த்தம் -கேடு, துன்பம்

அனுசரி -ஏற்றுநட

அனுதாபம் -இரக்கம்

ஆச்சரியம் -வியப்பு

ஆக்ஞை -ஆணை, கட்டளை

ஆட்சேபணை -தடை, மறுப்பு

ஆதி -முதல்

ஆபத்து -இடர்

ஆமோதித்தல் -வழிமொழிதல்

ஆயுதம் -கருவி

ஆரம்பம் -தொடக்கம்

ஆராதனை -வழிபாடு

ஆரோக்கியம் -உடல்நலம்

ஆலோசனை -அறிவுரை

ஆனந்தம் -மகிழ்ச்சி, இன்பம்

ஆன்மிகம் -இறைமை

ஆக்கிரமிப்பு -வலிந்து கைப்பற்று, வன்கவர்வு

ஆகாரம் -உணவு

ஆகாயம் -விண், விசும்பு

ஆசனம் -இருக்கை

ஆசாமி -ஆள்

ஆத்திரம் -சினம்

ஆத்மா -உயிர்

ஆதரவு -உதவி, தாங்கல்

ஆதவன் -கதிரவன்

ஆதாரம் -சான்று, மூலம்

ஆனந்தம் -பெருமகிழ்வு



தொடரும்….
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom