• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மின்னிதழ் 7 ல் வெளியாகிய பகுதி -3

ரோசி கஜன்

Administrator
Staff member
மருவுதமிழ் மறவாமல் காப்போம்!

திரு வி. இ. குகநாதன் அவர்கள் எழுதிய ‘கிரந்தம் தவிர் தமிழ் பழகு’ எனும் ஏட்டிலிருந்து...



தனித்தமிழ் பயன்பாட்டுக்குச் செய்ய வேண்டியவை:



முடியுமானவரை தமிழில் உள்ள 247 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

கிரந்த எழுத்துக்களை ஸ, ஷ, ஜ, ஹ போன்றவற்றை தவிருங்கள். (எடுத்துக்காட்டாக ஹிந்து என்பதை இந்து எனவும் ரஸ்யா என்பதனை இரசியா எனவும் எழுதவும்.)

கிரந்தச் சொற்களுக்குப் பதிலான தூய தமிழ்சொற்களைப் பயன்படுத்துதல்.(பட்டியல் இணைப்பைக் காணலாம்)

புதிய சொற்களின் தமிழ் மொழியாக்கம் அறிந்து பயன்படுத்துதல். (எடுத்துக்காட்டு: Pen Drive-விரலி, Whatsapp- புலனம்)



கிரந்தம் தவிர் தமிழ் பழகு



இஷ்டம் - விருப்பம்

இங்கிதம் - இனிமை

இலாபம் - ஆதாயம்

இரசாயனம் - வேதியல்

இராகம் - பண்

இராணுவம் - தரைப்படை

இலஞ்சம் - கையூட்டு

ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு

ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை

உக்கிரமான - கடுமையான

உபசாரம் - முகமன் கூறல்

உபயோகம் - பயன்

உதாசீனம் - பொருட்படுத்தாமை

உத்தரவாதம் - பிணை, பொறுப்பு

உத்தரவு - கட்டளை

உல்லாசம் - களிப்பு

உற்சாகம் - ஊக்கம்

உண்டி - அருட்குவை

உதாரணம் - சான்று, எடுத்துக்காட்டு

உதயம் - தோன்றுகை

உபகரணம் - துணைக்கருவி

உபகாரம் உதவி

உல்லாசம் களிப்பு

உற்பத்தி விளைவாக்கம்

ஊனம் குறைபாடு

எசமான் தலைவன்

ஐதீகம் சடங்கு, நம்பிக்கை


தொடரும்





 
Top Bottom