You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

மீண்டும் சமையலறைக்குச் செல்வோமா?

நிதனிபிரபு

Administrator
Staff member
மீண்டும் சமையலறைக்குச் செல்வோமா?





ஏற்கனவே தயார் செய்யப்பட்ட உணவுகளின்(Ready made foods) அதிகளவான நுகர்வு புற்றுநோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும்- அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்:::


?இன்று பிரித்தானிய ஊடகங்களின் முக்கிய பேசுபொருளாக பாரிசிலுள்ள பல்கலைக்கழக ஆய்வு முடிவான (The study by the Sorbonne in Paris and the University of Sao Paulo) தயார்செய்யப்பட்ட விரைவு உணவுகளிற்கும் புற்றுநோய்க்குமான தொடர்பு அமைந்திருந்தது. தயார் செய்யப்பட்ட கொள்கலன்களில் (fizzy drinks )அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், பொதிசெய்யப்பட்ட உணவுகள் (packaged baked goods ), கொறிப்பதற்கான உணவுகள்(snacks, cereals, burgers &potato chips), உணவகங்களில் வழங்கப்படும் சர்க்கரை மற்றும் உப்பு (Sugar & salt) கூடுதலாகச் சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை ஒருவர் 10 விழுக்காடு கூடுதலாக உட்கொள்ளும்போது, அது அவரிற்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினை 12 விழுக்காடுவரை அதிகரிக்கும் என்று இந்த ஆய்வு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய மக்களின் மொத்த உணவு நுகர்வில் இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகள் சரிநிகர் பாதியாக (50 %) இருப்பதே இந்த அதிர்விற்குக் காரணம்.


??இப் பிரச்சனை தனியாக பிரித்தானியாவிற்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்குமுரியது. குறிப்பாக இலங்கை,இந்தியா போன்ற மருத்துவ விழிப்புணர்வு ஒப்பீட்டுரீதியில் குறைந்த மூன்றாம் உலக நாடுகளிலும் இத்தகைய உணவுகளின் பயன்பாடு (ஒருவித நாகரீகமாக) வளர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய உணவுகள் புற்றுநோய்க்கு மட்டுமல்லாமல் உடற்பருமன்(Obesity) , நீரிழிவு(Diabetes) போன்ற நோய்களிற்கும் காரணமாக அமைகின்றன.


?மீண்டும் சமையலறைக்குத் திரும்பவேண்டிய தேவையினையே இத்தகைய ஆய்வுகள் அமைகின்றன


நன்றி இலங்கநாதன் குகநாதன்
 
Top Bottom