You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

முக்கிய அறிவிப்பு- கதை இடை நிறுத்தம்

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் ஹாய்,


இந்த போஸ்ட் வாசிச்சிட்டு நீக்க எல்லாரும் என்னைத் திட்டப் போறீங்க என்று எனக்குத் தெரியும். ஆனால், யோசிச்சு யோசிச்சுப் பார்த்து வேற வழி இல்லாமல் தான் இதை எழுதுறேன்.

சோ, கொஞ்சம் கோபப்படாமல் என்னை விளங்கிக்கொள்ள வேணும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நீ தந்த கனவு - மிக மிகப் பிடித்து நான் எழுத ஆரம்பித்த கதை. எனக்குக் களம் வித்தியாசம்; கதையைக் கையாளும் முறையும் வித்தியாசம். என்னால் முடியுமா என்கிற கேள்வி வந்துகொண்டே இருந்த கதை.

அதனாலோ என்னவோ என்னை மீறியே பல இடங்களில் தடுமாறி இருக்கிறேன். அதை நானே உணர்ந்ததாலோ என்னவோ என்னால தொடர்ந்து கதையை முடிக்க முடிய இல்லை. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு பத்துத் தொடக்கம் 15 அத்தியாயங்கள் வரலாம். அதுவும் என் அத்தியாயங்கள் சிறியது என்பதால் மாத்திரமே இவ்வளவு சொல்கிறேன்.

அதை நான் கதையை முடித்துவிட்டே போடுகிறேனே. அதுவரையில் அத்தியாயங்களாக என் சைட்டில் பதியவில்லை. இடை நிறுத்தி வைக்கிறேன். என்னோடு சேர்த்து உங்களையும் கதைக்குள் இழுத்துக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு இடையில் பிடித்துத் தள்ளிவிடுவது போல் தெரியலாம். இது உங்களுக்குக் கோபத்தைக் கொடுக்கலாம்.

ஆனால், ஆசையாக ஆரம்பித்த கதையை முடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே முடிக்க மனம் வரவே இல்லை.

கீழே நான் சொல்லப் போகிறவை நீங்கள் தந்த கருத்துக்கள் மற்றும் நானே உணர்ந்தவைகள்:

  • எல்லாளன் ஆதினி பார்ட் கதையில் குறைவு.
  • முன் பகுதி சற்றே இழுவையாக இருக்கிறது.
  • உணர்வுகள் திரும்ப திரும்ப வந்திருக்கிறது.
  • சாமந்தி கேஸ் விசாரணை அதிகம்.
  • சாமந்தியின் வீட்டினரின் உணர்வுகள் அதிகம்

இதையெல்லாம் முடிந்தவரைக்கும் எடிட் செய்து, கதையையும் முடித்துவிட்டு முழுக் கதையாகவே உங்களுக்குத் தருகிறேன்.

வேறு ஏதும் குறைகள் உங்கள் மனதில் பட்டாலும் தாராளமாச் சொல்லுங்க. எடிட் பண்ணுகிறபோது கவனிக்கிறேன்.

அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்து இருங்க. அவ்வளவுதான்.

நிச்சயமாக நிறைய நாட்கள் எடுக்க மாட்டேன். அதேபோல, இந்தக் கதையை முடித்து உங்களுக்குத் தராமல் வேறு கதை எழுதவும் மாட்டேன். சரிதானே?

விரைவில் முழுக் கதையுடன் வருகிறேன். என்னைத் திட்டியபடி காத்திருங்கள். நன்றி!

நட்புடன் நிதா.
 

Habi

New member
எல்லாளன் ஆதினி பார்ட் குறைவு கேஸ் விசாரணை அதிகம் தான்..

ஏற்று கொள்கிறோம் அக்கா.. எல்லாளன் ஆதினி பார்ட் நிறைய எழுதுங்க இது அவங்களுக்கான கதை போலவே இல்லை.. முழுமுழுக்க பொலீஸ் கதையா தான் இருந்திச்சு படிக்கும் போது
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... எல்லாளன் ஆதினி பார்ட் இன்னும் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருந்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் எமோஷனலா இருந்திருக்கலாம்னு தோணுது. ஆனா கண்டிப்பா காண்டீபன் திரும்ப வேணும் நிதா.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom