வட்டிலப்பம்
தேவையானவை:
200 மில்லி கெட்டியான தேங்காய்ப் பால்
2 முட்டைகள்
125 கிராம் கித்துள் கருப்பட்டி (பொடியாக்கிக் கொள்ளுங்கள்)
2 மேசைக்கரண்டி பிறவுன் சீனி
2 தேக்கரண்டி வனிலா
50 கிராம் வறுத்த கஜு (சிறிதாக்கி)
செய்முறை:
முட்டைகளை நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ளுங்கள்.
அதனுள், பொடியாக்கிய கித்துள் கருப்பட்டி, சீனி, வனிலா மற்றும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து நன்றாக அடியுங்கள்.
இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மேல்பக்கத்தை கவர் பண்ணிக் கொள்ளுங்கள்.
பின்னர், ஸ்டிமரில் வைத்து பதினைந்து நிமிடங்கள் அவித்த பின், கஜுவை மேலாகத் தூவி நன்றாக இறுகி வரும் வரை அவித்துவிட்டு, உடனடியாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.