You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

'விபத்து' என்ற வடமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொல்

நிதனிபிரபு

Administrator
Staff member
விபத்து என்பது வடமொழிச்சொல்லாகும்.



இதற்கான தமிழ்ச்சொல்லாக நான் இதுகாறும் மோதல் என்ற சொல்லையே பயன்படுத்தி வந்தேன்.

அச் சொல்லானது சண்டை என்ற பொருளிலும் இடம்பெறுவதால், அச் சொற் பயன்பாடானது (மோதல்) சற்றுக் குழப்பமானது. இந்த வகையில் விபத்து என்ற சொல்லிற்காகப் பயன்படுத்தப்படும் இன்னொரு தமிழ்ச்சொல்லாக நேர்ச்சி என்ற சொல் காணப்படுகின்றது. இச் சொல்லானது `நேர்` , `நேரம்` என்ற வேர்ச்சொற்களை அடியாகக் கொண்டது. இச் சொல்லும் (நேர்ச்சி) வேறு பல பொருட்களிலும் {இணக்கம், உடன்பாடு, நட்பு, தகுதி } இடம்பெறும்.

இந்த நிலையில் இன்னொரு (தனித்) தமிழ்ச்சொல்லிற்கான தேடல் இருந்துவந்தது.

இந்த நிலையிலேயே, கவிஞர் மகுடேசுவரன் புதிய ஒரு தமிழ்ச்சொல்லினை வழங்கியிருந்தார். அதுதான் கொடுமுட்டு. `முட்டுதல்` என்ற சொல்லினை அடியாகக் கொண்ட ஒரு சொல் இதுவாகும் {குழந்தைகளின் மூக்கிற்கு நேரே தாய் தனது மூக்கினை வைத்துக்கொண்டு முட்டு, முட்டு என மூக்கை முட்டுவதனை நினைத்துப் பாருங்கள்}. நாமே ஏற்படுத்திக்கொள்வதால் `கொடு` என்ற முன்னொட்டு இடம்பெறும். எனவே சிறப்பான ஒரு சொல்லாக்கம். பயன்படுத்திக்கொள்வோமே!

குறிப்பு - மோதல், நேர்ச்சி என்பனவும் சரியான தமிழ்ச்சொற்களே. விபத்து என்பது வடமொழி. எனவே `விபத்து` என்ற சொல் வேண்டாம்.

-இலங்கநாதன் குகநாதன்-

1577778814408.png
 
Last edited:
Top Bottom