You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

“BURANO”- யாழ் சத்யா - இதழ் 7

ரோசி கஜன்

Administrator
Staff member
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

இந்தத் தடவை உங்களை இத்தாலி, வெனிஸ் நகரத்தில் இருக்கும் சிறு தீவொன்றுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்.


“BURANO”

1547578308643.png


“எனக்கு இருபது உனக்குப் பதினெட்டு” திரைப்படத்தில் வரும் “ஏதோ ஏதோ ஒன்று எனக்குள் நுழைந்து ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே” என்ற பாடல் வெனிஸிலும் Burano எனும் இந்தத் தீவிலும் தான் படம் பிடித்திருப்பார்கள்.

நீங்கள் வெனிஸ்க்குச் சென்று இந்த இடத்திற்குச் செல்லவில்லை என்றால் உண்மையில் ஏதோ ஒன்றை உங்கள் வாழ்நாளில் இழந்து விட்டீர்கள் என்று தான் சொல்வேன். நான் ஒன்றும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. உண்மையிலேயே அத்தனை அழகு இந்தத் தீவு.


அப்படி இங்கே விசேஷமாக அழகு சேர்ப்பது என்னவென்று கேட்கிறீர்களா? இங்கிருக்கும் வீடுகள் தான். நாலாயிரம் பேர்கள் அளவு தான் மக்கள் தொகை. இந்த மீனவக் குடும்பங்களின், நெருப்புப்பெட்டியை வரிசைக்கு அடுக்கி வைத்தது போலிருக்கும் வீடுகளின் வர்ணம் தான் இங்கே சிறப்பு.

1547578337344.png


மஞ்சள், செம்மஞ்சள், நீலம், குருத்துப்பச்சை, சிவப்பு, ரோஸ், நாவல் என்று கண்ணைப் பறிக்கும் பல வர்ணங்களில் எழுந்து நிற்கும் இந்த வீடுகள் கண் கொள்ளாக் காட்சி. அங்கேயே ஒரு வீடு வாங்கித் தங்கி விட மாட்டோமா? என்ற ஆசை எழுவதைத் தடுக்க முடியாது.

1547578359448.png

இங்கிருக்கும் அடுத்த சிறப்பு லேஸ். ஆம்! விதம் விதமாக லேஸால் பின்னப்பட்ட ஆடைகளிலிருந்து, சிறு கைக்குட்டை, மேசை விரிப்புகள், சுவர் அலங்காரங்கள், சிறு குடைகள் என்று சிறு சிறு கடைகளில் விற்பனைக்கு இருந்தன. இதன் சிறப்பு என்னவென்றால் அனைத்துமே கைகளால்த் தயாரிக்கப்பட்டவை.


1547578375991.png 1547578386788.png

 

Attachments

ரோசி கஜன்

Administrator
Staff member
இங்கிருக்கும் லேஸ் அருங்காட்சியகமும் தவறாமல் பார்வையிட வேண்டிய ஒன்று. சிறிய அருங்காட்சியகம் என்றாலும் அங்கு வைத்திருந்த விதம் விதமான லேஸ்களைப் பார்க்கும் போது மனதுக்குள் அத்தனை ஆனந்தம். ஒரு சிறு துண்டில் ஒரு காட்சியையே நெய்திருப்பார்கள். எவ்வளவு திறமை வேண்டும் இதற்கு என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

1547578689186.png 1547578699915.png

அதுமட்டுமின்றி, ‘Chiesa di San Martino’ எனும் தொன்மையான தேவாலயம் ஒன்று, பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிக்கூட்டுக் கோபுரத்தோடு இங்கே காணப்படுகிறது.

1547578714625.png

இந்தத் தீவின் அடுத்த சிறப்பு, இங்கிருக்கும் கடலுணவு உணவகங்கள். பொரியல்களிலிருந்து, பீட்ஸா வரை அனைத்திலும் கடலுணவைக் கண்ட போது நாவூறாமல் விடுமா என்ன? சின்னதாய் ஓடிச் செல்லும் கால்வாய் அருகே சிறு பூச்சாடிகளால் கரையெங்கும் அலங்கரிக்கப்பட்டிருந்த உணவகத்தின் வெளியே இருந்து வண்ண வண்ண வீடுகளை ரசித்தபடி உணவருந்துவதும் சுகானுபவமே. ஆனால், இப்படி உணவகத்தின் வெளியே இருந்து உண்பதற்கு அதிகம் பணம் செலுத்த வேண்டும் என்பதெல்லாம் வேறு விடயம் :)

1547578741032.png 1547578650563.png 1547578757449.png

சுருக்கமாகச் சொன்னால் வெனிஸ் நகரில் எனக்கு மிகவும் பிடித்த இடம் இந்த Burano தீவு தான்.



அடுத்த வாரம் உங்களை MURANO தீவிற்கு அழைத்துச் செல்கிறேன். “போவோமா ஊர்கோலம்” பகுதியில் நான் எழுதும் ஆக்கங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால், அவை உங்களுக்குச் சுவாரசியமாக இருக்கிறது என்றால் என்னோடு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நன்றி மக்கா!


என்றும் அன்புடன்



யாழ் சத்யா.
 
Top Bottom